நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 11, 2020

நல்லதோர் வீணை

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்று
மகாகவியின்
நினைவு நாள்..
***

நல்லதோர் வீணை செய்தே அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ!..


சொல்லடி சிவசக்தி எனைச் சுடர் மிகும்
அறிவுடன் படைத்து விட்டாய்..
வல்லமை தாராயோ இந்த மாநிலம்
பயனுற வாழ்வதற்கே..
சொல்லடி சிவசக்தி நிலச் சுமையென
வாழ்ந்திடப் புரிகுவையோ!..


விசையுறு பந்தினைப் போல் உள்ளம்
வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனங்கேட்டேன் நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்..


தசையினைத் தீச்சுடினும் சிவ
சக்தியைப் பாடும் நல் அகங் கேட்டேன்..
அசைவறு மதிகேட்டேன் இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ..
***

மகாகவியின் 
புகழ் வாழ்க

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

13 கருத்துகள்:

 1. மஹாகவிக்கு அஞ்சலி. அவர் கனவெல்லாம் நனவாகப் பிரார்த்திப்போம். மஹாகவியின் புகழ் ஓங்கி உயர்ந்து நிலைத்து இருக்கட்டும். அனைவருக்கும் அவருடைய வீரமும், ஊக்கமும், தமிழறிவும் கிடைக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 2. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்களது வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. மஹா கவியின் நினைவு நாளில் அவர் பாடிய அற்புத பாடல் பகிர்வுக்கு நன்றி.
  சக்தி ஓம்! சக்தி ஓம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்...

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  பாடல் அருமை. பொருத்தமான சக்தி படங்களும் அருமை. மஹா கவியின் நினைவு நாளில் அவர் பாடிய பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி. எந்நாளும் அவர் புகழ் பாடி அவரை நாம் அனைவரும் மறவாதிருப்போம்.
  ஓம் சக்தி ஓம் சக்தி ஓம். பராசக்தி ஓம் சக்தி ஓம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   பள்ளி நாட்களில் பயின்றதும் பாடித் திரிந்ததும் மகாகவியின் பாடல்களே...

   ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்..

   நீக்கு
 5. பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்களது வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. மஹாகவிக்கு ஒரு அஞ்சலி! சிறந்ததோர் பாடலை இங்கே எடுத்துக் காட்டியிருப்பது சிறப்பு.

  பதிலளிநீக்கு