நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, செப்டம்பர் 25, 2020

வருவாய் தாயே..

 நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வராஹி அம்மன் தரிசனம்..

புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
வராஹி அம்மனின் திருவடிகளைப்
போற்றுவோம்..
***

கீழுள்ள காணொளியை
Fb ல் வழங்கியவர்
நண்பர் திரு தஞ்சை ஞானசேகரன்..
அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..


வருவாய் தாயே வரம் தருவாயே
வல்வினை கொடுமைகள் நீக்கிடுவாயே
அருள்வாய் தாயே அடைக்கலம் நீயே
அன்புடன் எங்களைக் காத்திடுவாயே..

உண்ணும் போதும் உறங்கும் போதும்
எண்ணும் போதும் இயங்கும் போதும்
உன்பெயர் ஒன்றே இதயத்து ஒலியாய்
பன்னலம் சேர்க்கும் பரிவுடன் காக்கும்..

நலம் மிகக் கொடுப்பவள் வாராஹி
நானிலம் காப்பவள் வாராஹி
வளம் மிகக் கொடுப்பவள் வாராஹி
வழித்துணை ஆனவள் வாராஹி..

தாய் நீ வந்திடத் தடைகளும் இல்லை
தயவுடன் நோக்கிட நோய்களும் இல்லை
தாய் உன்னருளால் நலமே சூழ்க
தஞ்சையின் வராஹி மலரடி வாழ்க!..
***

ஓம்
சக்தி ஓம் சக்தி ஓம்
சக்தி ஓம்
ஃஃஃ

7 கருத்துகள்:

 1. வெள்ளிக்கிழமை காலை நல்ல தரிசனம். நன்றி பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  வராஹி அம்மன் தரிசனம் சிறப்பாக இருந்தது. அம்மன் ஆர்த்தி காணொளியும் கண்டு அழகான பாடலைப் பாடியும் அம்மனருள் கிடைக்க பரிபூரணமாக பிரார்த்தித்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. வாராஹி அம்மனின் தரிசனம் கிடைத்தது - மகிழ்ச்சி.

  வாராஹி அம்மனின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

  பதிலளிநீக்கு
 4. வாராஹி அம்மன் மேல் நீங்கள் எழுதிய கவிதை மிக அருமை.
  அந்த பாடலை பாடி அம்மனை வணங்கி கொண்டேன்.
  வாராஹி அனைவருக்கும் நலத்தை தர வேண்டும்.

  பதிலளிநீக்கு
 5. காணொளி பார்த்தேன், அருமையான தரிசனம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு