நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், செப்டம்பர் 17, 2020

ஆரா அமுதே..நாடும் வீடும் நலம் பெறவேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
புரட்டாசி முதல் நாள்..

புல்லர்கள் அழியவும்
புன்மைகள் தொலையவும்
புண்ணியனின் பூம்பாதங்களைப்
போற்றுவோம்..
***

தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
கரிசேர் பூம்பொழில்சூழ் கனமா மலை வேங்கடவா
அரியே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.. (1034)

நீரார் கடலும் நிலனும் முழுதுண்டு
ஏராலம் இளந்தளிர்மேல் துயில் எந்தாய்
சீரார் திருவேங்கட மாமலை மேய
ஆராஅமுதே அடியேற்கு அருளாயே.. (1040)
-: திருமங்கையாழ்வார் :-
***

கோவிந்தோ.. கோவிந்த..
கோவிந்தோ.. கோவிந்த..

ஓம் ஹரி ஓம்
நமோ நாராயணாய
ஃஃஃ

9 கருத்துகள்:

 1. வணக்கம் சகோதரரே

  இன்றைய தினத்தில் திவ்யமான பெருமாள தரிசனங்கள் கண்டு ஆனந்தம் அடைந்தேன். திருமங்கையாழ்வார் பாசுரமும் பாடி மகிழ்ந்தேன்.
  கோவிந்தா..கோவிந்தா..என்றால் குறைகள் களைய கண்டிப்பாக ஓடி வருவான்.

  ஓம் ஹரி ஓம்
  நமோ நாராயணாய.
  பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 2. தலைப்பைப் பார்த்து ஓடோடி வந்தேன், வரச் செய்துவிட்டது. என் குலதெய்வம். ஆரா அமுதே எனக்குக் குடந்தைக் கிடந்த மாமாயனை நினைவுபடுத்திற்று.

  பெரியதிருமொழியின் 3 பத்துப் பாடல்கள் நான் அவ்வப்போது சேவிப்பேன். அதில் தாயே தந்தையென்னும் ஒன்று.

  தெரியேன் பாலகனாய் பாடலில் கனமாமலை வேங்கடவா என வரணும். மலைசூழ் இல்லை

  ஏராலம் இளந்தளிர்மேல் - அழகான ஆலமரத்து இளம் இலையின் மேல் துயில் கொண்ட

  அமாவாசையும் மாதப்பிறப்பும் சேர்ந்த தினம் இன்று


  பதிலளிநீக்கு
 3. தரிசித்தேன் நலம். அனைவருக்கும் நலமே விளையட்டும்.

  பதிலளிநீக்கு
 4. வேங்கடவன் அருளால் அனைத்துப் பிரச்னைகளும் தீரட்டும். மக்கள் மன மகிழ்வுடன் வாழப்பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 5. மாலவன் அருளால் மனக்கிலேசங்கள் நீங்கி மக்கள் நலம் பெற வேண்டுவோம்.

  பதிலளிநீக்கு
 6. இன்று காலை பொதிகையில் குடந்தை ஆராவமுதன் கோவிலை காட்டினார்கள்.
  நன்றாக தரிசனம் ஆச்சு . இங்கு மீண்டும் பாசுரங்கள் படித்து வணங்கி கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 7. சிறப்பான பகிர்வு. பெருமாள் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு