நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

தேவன் தந்த வீணை


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..

ஆறுதலும் தேறுதலும்
தெய்வமே தந்திடுக..
பிணியானவை தீர்த்து
பெருமானே காத்திடுக..
***


 என்ன சொல்வது..
எப்படிச் சொல்வது?..

அன்பின் பாலு அமரர் ஆனார்..

நம் மனதை நாம் தான்
தேற்றிக் கொள்ள வேண்டும்..

அவரது குரல் வழி
எத்தனை எத்தனயோ
பாடல்கள்..

அத்தனையிலும்
அல்லல் பட்ட மனதின் ரணங்களுக்கு
மருந்தாய் இருந்தவை பற்பல..

அவை ஒருபுறம் இருக்க
திரு அண்ணாமலையை
முன் வைத்து அவர் பாடிய பாடல்களும்
லிங்காஷ்டகம், வில்வாஷ்டகம்,
சிவாஷ்டகம்,
காசி விஸ்வநாதாஷ்டகம்
முதலான பாமாலைகளும்
கேட்கும் பொழுதெல்லாம்
துன்பம் தீர்ப்பவை..

இந்த மண்ணை விட்டு
மறைந்திருக்கிறார்..
நம் மனதை விட்டு அல்ல..

என்றும் என்றென்றும்
காற்றொடு காற்றாய்
நம்முடன் கலந்திருப்பார்...
***
இன்றைய பதிவில்
கவியரசரின் தெய்வீக வரிகள்
பாலுவின் இனிய குரலில்..

வானம் எந்தன் மாளிகை
வையம் எந்தன் மேடையே..
வண்ணங்கள் நான்
எண்ணும் எண்ணங்கள்..
எங்கிருந்தேன் இங்கு வந்தேன்
இசையினிலே எனை மறந்தேன்..
இறைவன் சபையில்
கலைஞன் நான்!..சென்று வருக பாலு..
சென்று வருக..
மீண்டும் இங்கே பிறந்து
இசையை மழையாய் பொழிக..
***

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..
ஃஃஃ

12 கருத்துகள்:

 1. இறந்தும் சிலர் வாழ்கிறார்கள் இவரும் இனி...

  பதிலளிநீக்கு
 2. என்றென்றும் இசை உருவில் வாழ்வார். இவருக்கெல்லாம் மரணம் என்பதே இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எந்த நிலையிலும் மரணமில்லை..
   தங்களது வருகைக்கு நன்றியக்கா..

   நீக்கு
 3. பதிவும் பாடலும் அருமை.
  இசையாக என்றும் வாழ்வார்.
  இறைவன் சபையில் என்றும் பாடி கொண்டு இருப்பார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனி இறைவனின் சபையில் கலைஞன்..
   தங்களது வருகைக்கு நன்றி..

   நீக்கு
 4. என்னவொரு இனிமையான குரலும் பாடலும். அவர் தனது குரலாலும், பாடல்களாலும் என்றும் நம்மிடையே இருப்பார்.

  அவரது ஆன்மா நற்கதியடையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவரது ஆன்மா நற்கதியடையட்டும்..
   தங்கள் வருகைக்கு நன்றி..

   நீக்கு
 5. பாடலும், அவரைப்பற்றிய பதிவும் மனதை கலங்க வைக்கிறது. மரணம் இவரை எப்படித்தான் அணைத்துச் செல்ல தைரியமாக முன் வந்ததோ? என்றென்றும் அவர் பாடல்கள் நம் மனதில் இருக்கும் வரை அவரை பிரிந்த உணர்வு இல்லை நம்மிடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இசையுடன் இசையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்...

   தங்கள் வருகைக்கு நன்றி..

   நீக்கு