நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

கிருஷ்ணா.. கிருஷ்ணா..


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று
ஸ்ரீ கோகுலாஷ்டமி


ஊரிலேன் காணியில்லை உறவு மற்றொருவர் இல்லை
பாரில் நின் பாதமூலம் பற்றிலேன் பரமமூர்த்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகின்றேன்
ஆருளர் களைகண் அம்மா அரங்க மாநகருளானே..
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-


வஸுதேவ ஸுதம் தேவம் கம்ச சானூர மர்த்தனம்
தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்

ஓம் ஹரி ஓம்
ஃஃஃ

23 கருத்துகள்:

 1. ஆவணி நன்னாளில் அஷ்டமி திதியில்  வந்துதித்த கண்ணன் பாதம் போற்றுவோம்.  கஷ்டங்களை நீக்க வேண்டுவோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...
   தங்களுக்கு நல்வரவு...
   கண்ணனின் திருவடிகளைப் போற்றுவோம்...
   கஷ்டங்களைத் தீர்க்குமாறு வேண்டுவோம்.

   கிருஷ்ணா.. கிருஷ்ணா..

   நீக்கு
 2. கிச்சாப் பயலின் பிறந்த நாளைக்கு வாழ்த்துகள். பிரார்த்தனைகள். கம்சனை அழித்தாற்போல் கொரோனா என்னும் அரக்கனையும் அடியோடு அழிக்கட்டும். பிரார்த்திப்போம். விடாமல் நம்பிக்கையுடன் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 3. கொரோனா என்னும் அசுரனும் அழிவதற்கு
  ஸ்ரீஹரி கிருஷ்னனின் திருவடிகளைப் பிரார்த்திப்போம்...

  தங்கள் வருகையும் வேண்டுதலும் மகிழ்ச்சி.. நன்றியக்கா...

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  பதிவு நன்றாக உள்ளது. கோகுலாஷ்டமி வாழ்த்துகள். ஸ்ரீ கிருஷ்ணரின் படங்கள் அருமை.

  அவர் பிறந்த நாளான இன்று நம் பாவங்களை களைந்து நம் அனைவருக்கும் நல்லருள் தர வேண்டி அவரை ஒவ்வொரு இல்லங்களிலும், அன்புடன் வரவேற்ப்போம். கிருஷ்ணர் அன்புக்கு கட்டுப்பட்டு கண்டிப்பாக வருவார்.

  கிருஷ்ணா, கிருஷ்ணா. 🙏. 🙏. 🙏. 🙏.
  இன்றைய பக்திப் பகிர்வுக்கு நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

   அனைவருக்கும் நல்லருள் தர வேண்டி நிற்போம்..

   கண்ணன் திருவடிகள் போற்றி..

   மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 5. இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..

   தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. கண்ணன் திருவடிகளே சரணம் ....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
   கண்ணன் திருவடிகள் போற்றி..

   கிருஷ்ணா.. கிருஷ்ணா...

   நீக்கு
 7. கேட்டது கொடுப்பவன் கண்ணன் அவரிடம் உலகம் முழுவதும் இந்த கொரோனா பிடியிலிருந்து தப்ப வேண்டும் என்று கேட்போம்.நாடும் வீடும்,
  ஊரும், உலகமும் நலம்பெற வேண்டுவோம் கண்ணனை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி..

   நானும் அவ்வாறே வேண்டுகிறேன்..
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. ஊரிலேன் காணியில்லை....பள்ளியில் முதன்முதலாகப் படித்தது. பிறகு தினமும் படிக்கும்போது படித்தது. இன்று உங்கள் பதிவு மூலமாக..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. இனிய கோகுலாஷ்டமி வாழ்த்துகள்.

  எங்களுக்கு ஸ்ரீஜெயந்தி செப்டம்பர் 9ம் தேதிதான்.

  ஊரிலேன் காணியில்லை... எனக்கு மிகவும் பிடித்த திருமாலையில் வரும் பாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெல்லை..
   தங்கள் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. தொண்டரடிப்பொடியாழ்வாரின் பாசுரங்கள் மனதைத் தொடுபவை.

  ‘ஊரிலே காணியில்லை..’ யோடு ‘பச்சைமாமலைபோல் மேனி..’யையும் சேர்த்து டெல்லி கோவிலில் பாடியிருக்கிறேன், ’ஏதாவது ஒரு பாட்டுப் பாடும்..’ என்று லக்ஷ்மி-நாராயணன் சந்நிதிமுன் நின்றுகொண்டு அடியவர் ஒருவர் தூண்டிவிட்டதால்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஏகாந்தன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   ஹரே கிருஷ்ணா...

   நீக்கு
 11. தாமதமான வாழ்த்துகள் அண்ணா.

  நல்ல பாசுரம்

  ஒரு தமிழ் க்ருதியின் வரிகளை இப்போதைக்கு ஏற்றபடி மாற்றி வைத்திருந்தேன்.

  என்ன சொல்லி அழைத்தால் வருவாயோ (இது ஒரிஜினல்)
  எளிய உலகினை இனிது காத்திட

  அன்று அரக்கரை அழித்தது போலவே
  இன்று கொரோனாவை அழித்திட மாட்டாயா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் கீதா...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   கொரோனா அழிவதற்கும் ஒரு நேரம் இருக்கிறது...

   ஹரே கிருஷ்ணா..

   நீக்கு
 12. பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   ராதே கிருஷ்ணா..

   நீக்கு
 13. அன்பின் தனபாலன்
  தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..