நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, ஆகஸ்ட் 22, 2020

ஞான விநாயகன்



நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
அனைவருக்கும் அன்பின் இனிய
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துகள்


கைத்தல நிறைகனி அப்பமொ டவல் பொரி
கப்பிய கரிமுகன் ... அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறபவ
கற்பகம் எனவினை ... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன் மகன்
மற்பொரு திரள்புய ... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர் கொடு ... பணிவேனே..

முத்தமிழ டைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ... முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புனம் அதனிடை ... இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கணம் மணமருள் ... பெருமாளே..
-: அருணகிரிநாதர் :-


பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா..
-: ஔவையார் :-

நம்பிக்கு அருள் புரிந்த
நாரையூர் நாயகன்
விநாயகன்..


ஓம் கம் கணபதயே நம:

எல்லா இடர்களையும் நீக்கி அருள்வாய்
விநாயகப் பெருமானே!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

24 கருத்துகள்:

  1. காலை வணக்கம்.  காணொளியும் கண்டு மகிழ்ந்தேன்.  விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்களுக்கு நல்வரவு...

      இனிய நல்வாழ்த்துகளுடன்...

      நீக்கு
  2. கணேஷ் மீது நம்பிக்கையில்லாத டெல்லி கணேஷ்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளங்கைத் தேனுக்கும்
      ஊரில் விசாரிப்பவர் உண்டே!...

      நீக்கு
  3. காலை வணக்கம் சகோதரரே

    தங்களுக்கும் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி
    நல்வாழ்த்துகள். ஸ்ரீ விநாயகர் படம் கண்களுக்கு நிறைவாக உள்ளது. அவன் பாடல்களை பாடி அவன் பாதம் தொழுது வணங்குவோம். அவனருள் நமக்கெல்லாம் நிச்சயம் உண்டு. காணொளி பிறகு கண்டிப்பாக பார்க்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      நல்லோர் அனைவருக்கும் நாயகனின் அருள் தழைப்பதாக...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  4. இனிய காலை வணக்கம். தங்களுக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். காணொளியும் கண்டு ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      தங்களுக்கும் நல்வாழ்த்துகள்...
      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  6. விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்களுக்கும் நல்வாழ்த்துகள்...
      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  7. இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்களுக்கும் நல்வாழ்த்துகள்...
      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  8. நாரையூர் சென்றுள்ளேன், விநாயகரைக் கண்டுள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக மறுபடியும். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      நாரையூர் செல்வதற்கு இன்னும் வாய்ப்பு கிட்டவில்லை..

      தங்கள் வருகையும் கருத்துரையும்
      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  9. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்

    பொல்லா பிள்ளையார் கோவில் நாறையூர் இரண்டு முறை போய் தரிசனம் செய்து இருக்கிறேன். கோவில் நம்பியின் கதை சித்தரிக்கப்பட்டு இருக்கும்.

    காணொளி கண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      நாரையூர் செல்வதற்கு இன்னும் வாய்ப்பு கிட்டவில்லை..

      அவனருள் ஒருநாள் வாய்க்கும்..
      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  10. நிறைய இடுகைகளை மிஸ் செய்துவிட்டேன்.

    எனக்கு இந்த இடுகையைப் படிக்கும்போது வாரியார் அவர்களின் குரல்தான் மனதில் ஒலித்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை

      நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி..

      வாரியார் ஸ்வாமிகள் 99.9% சதவிகிதம் இந்தத் திருப்புகழ் பாடலைப் பாடித் தான் இலக்கிய விரிவுரை நிகழ்ச்சிகளைத் துவக்குவார்...

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  11. விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள். எனக்கும் வாரியார் தான் நினைவில் வந்தார். அவர் குரலில் கைத்தல நிறைகனி பாடுவது போல் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      வாரியார் ஸ்வாமிகள் 99.9% சதவிகிதம் இந்தத் திருப்புகழ் பாடலைப் பாடித் தான் இலக்கிய விரிவுரை நிகழ்ச்சிகளைத் துவக்குவார்...

      ஸ்வாமிகள் பாடுவதைக் கேட்டு மனதில் பதிந்த திருப்புகழ் பாடல் இது..

      அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றியக்கா...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..