நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 30, 2020

அம்மன் தரிசனம் 2நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்று ஆவணி மாதத்தின்
இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை..


ஆயி மகமாயி ஆயிரங் கண்ணுடையாள்
நீலி திரிசூலி நீங்காத பொட்டுடையாள்..

சமயபுரத்தாளே
சாம்பிராணி வாசகியே
சமயபுரத்தில் நின்று
சந்ததமும் பாருமம்மா!...

வெள்ளிப் பிரம்பெடுத்து
வீதி வழி வாருமம்மா...
பிள்ளையென மனம் படைத்த
நல்லவரைப் பாருமம்மா!..


துன்பங்கள் சூழ்கையிலே
ஓடிவந்து தீருமம்மா!..
நோய்நொடி தீர்த்து எங்கள்
நெஞ்சத்திலே வாழுமம்மா!..

தீர்த்தம் கொடுப்பவளே எங்கள்
தீவினையை ஓட்டுமம்மா..
திருநீறு அளிப்பவளே நல்ல
தீபத்தினை ஏற்றுமம்மா!..

மஞ்சள் தருபவளே
மண் விளங்கச் செய்யுமம்மா!..
குங்குமம் கொடுப்பவளே எங்கள
குலம் விளங்கப் பாருமம்மா!..

குழந்தை வருந்துறது
கோயிலுக்குக் கேக்கலையோ..
மைந்தன் வருந்துறது
மாளிகைக்குக் கேக்கலையோ..


தஞ்சமென்று ஓடி வந்தோம்
தஞ்சை நகர் மாரிமுத்தே..
காலடியைத் தேடி வந்தோம்
பட்டுக்கோட்டை நாடிமுத்தே!..


மாயி மகமாயி
மணி மந்திர சேகரியே!..
எங்க ஆயி உமையானவளே
ஆஸ்தான மாரிமுத்தே!..

ஓம் சக்தி ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

9 கருத்துகள்:

 1. அனைவருக்கும் நல்வரவு..

  இன்றைய பதிவில் - தஞ்சை நகர் கொடிமரத்து மூலை ஸ்ரீ முத்து மாரியம்மன், சமயபுரத்தாள், தஞ்சை ஸ்ரீ வடபத்திரகாளி,புன்னைநல்லூர்
  ஸ்ரீ மாரியம்மன், பட்டுக்கோட்டை
  ஸ்ரீ நாடியம்மன் - என சித்திர திருமேனிகள் தரிசனம் ஆகின்றன..

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  இன்றைய அனைத்து அம்மன் தரிசனங்கள் கண்டு ஆனந்தமடைந்தேன். சமயபுரத்தாளின் அழகான தரிசனம் மன நிம்மதியை தருகிறது. தஞ்சை ஸ்ரீ வடபத்திரகாளியம்மனின் அன்பான முகம் ஆறுதலை தருகிறது. பாடலையும் பாடி மகிழ்ந்தேன். ஸ்ரீ முத்துமாரியம்மன், ஸ்ரீ மாரியம்மன்,ஸ்ரீ நாடியம்மன் அனைத்து அம்மன்களும் ஒன்று சேர்ந்து நம் அனைவருக்கும் நல்லருள் பாலிக்க பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  ஓம் சக்தி..ஓம் சக்தி. என மனதாற போற்றுவோம். பக்திப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 3. அம்மனின் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 4. அன்பின் திருவுருவமாம் அன்னையின் அற்புத தரிசனம் கண்டேன் ...

  பதிலளிநீக்கு
 5. அனைத்து அன்னையின் படங்களும் அழகு , தரிசனம் செய்து கொண்டேன்.மகமாயி பாடலும் பாடி உலக நன்மைக்கு வேண்டிக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 6. குழந்தை வருந்துவது கோயிலுக்கு கேக்கலையோ///

  குடும்பம் விளங்க வைக்க ஓடி நீ வந்திடுவாய்.
  அன்பு துரை, அனைவரும் வாழ அம்மா
  அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
 7. குழந்தை வருந்துறது கோயிலுக்குக் கேட்காமலா இருக்கும். வருவாள், வருவாள், மகமாயி காத்து அருள்வாள்.

  மாரியம்மன் தாலாட்டை நினைவில் கொண்டு வந்தது. எடுத்துப் படிக்கணும்.

  பதிலளிநீக்கு
 8. நல்லதொரு தரிசனம்.

  அன்னையின் பூரண அருள் அனைவருக்கும் கிடைத்திடட்டும்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..