நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஜனவரி 07, 2013

திருப்பாவை - 23

ஆண்டாள் அருளிய திருப்பாவை 
திருப்பாசுரம் - 23

மன்னிக் கிடந்துறங்கிய சீரிய சிங்கம்
மாரிமலை முஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரியசிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ, பூவைப் பூ வண்ணா!உன்
கோயில் நின்ற இங்ஙனே போந்தருளி, கோப்புடைய
சீரிய சிங்கானத்திருந்து யாம் வந்த காரியம்
ஆராய்ந்து அருளேலோர்  எம்பாவாய்..  


ார் காலம் ... கும் மை - ொடர்ந்ெய்ு சற்று முன் ான் கஞ்சம் ஓய்ந்ள்ளது. 

ுவையிலும் அந்ச்  சிவில் இருந்ுகைக்குள்ின் சத்த்த் ூடக் குகில் வங்காமல்  ன் ுணையுடன் ங்கிக் கிடந்த  ஆண் சிங்கம் - ''ிடுக்'' - எனிழித்... 

சினத்தினாலும் நீண்ட உறக்கத்தினாலும் சிவப்பேறி, செந்தீயெனத் தகிக்கும் விழிகளால் - அங்கும் இங்கும்  - நோக்கியது.

பெரும்  பிடரியில் அடர்ந்திருக்கும் மயிர்க் கற்றைகள் சிலிர்த்து  நாலாபுறமும் சுழன்று பரவும்படி  பிடரியை உலுக்கி,  உதறிய - அந்த சிங்கம்,

மெல்ல எழுந்து பாதங்களைப் பூமியில் அழுத்தமாக ஊன்றி,  தன் உடம்பை நீட்டி நெளித்து சோம்பல் முறித்தது. 

உறங்கிய களைப்பு நீங்கிய சிங்கம் களி கொண்டு - கம்பீரமாக, பெருங்குரலில் முழங்கியபடி புத்துணர்ச்சியுடன் வெளியே புறப்படுவதைப் போல, 

உன் திரு மாளிகையினின்றும் இங்கு வந்தருளி, காயாம்பூ வண்ணனே!... கண்ணனே!...
சீறிய சிங்கம்
அன்று அந்தக் குழந்தையின் பொருட்டு ஒரு தூணில் வெளிப்பட்ட தூயனே!..... நரசிங்கனே!...

இன்று எம்பொருட்டு குழந்தையென யசோதையின் மடிதவழ்ந்த மாயனே!... இளஞ்சிங்கனே!....  

இதோ... இந்த ஆசனத்தில் - அரியாசனத்தில் - 

உனக்கே உனக்கான ... சரியாசனத்தில் -  

உன்னால் பேரும், பேறும்  பெற்ற சிங்காசனத்தில் எழுந்தருளி... 

நாங்கள் எல்லோரும் உம்மைத் தேடி வந்த காரியங்களைக் கேட்டறிந்து - ஆராய்ந்து - அருள் செய்வாயாக!...
நன்றி - ரதி, தேவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..