ஜூன் 24 - 1927
|
இன்று கவியரசர் பிறந்த நாள்...
கூடவே - அவருடைய அன்புத் தோழர்
மெல்லிசை மன்னருக்கும் பிறந்த நாள்..
கவியரசர் வழங்கிய
கருத்தாழம் மிக்க பாடல்களுள்
இதுவும் ஒன்று..
காலத்தை வென்று நிற்கும் இந்தப் பாடல்
இன்றைய பதிவில்..
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்..
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்
நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும்
நானாக வேண்டும்..
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்..
பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்துப் பசியாற வேண்டும்
பசியாற வேண்டும்..
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்
நானாக வேண்டும்
மடி மீது விளையாடும் சேயாக வேண்டும்
நீயாக வேண்டும்..
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்..
சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை
பொருளென்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை
விலையேதும் இல்லை..
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே
உயிர் சேர்ந்த பின்னே
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை
வேறேதும் இல்லை..
நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
உறவாட வேண்டும்...
***
இனிய இந்தப் பாடல்
இடம் பெற்ற திரைப்படத்தையும்
இந்தப் பாடலுக்கு
இசையமைத்தவரைப் பற்றியும்
சொல்லவும் வேண்டுமோ!..
ஜூன் 24 - 1928
|
கவியரசரும் மெல்லிசை மன்னரும் வழங்கிய இனிய பாடல்கள்
இன்றைய நாளில் அதிகமாகப் பேசப்படுகின்றன...
இது தான் அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பெருஞ்சிறப்பு..
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை!.. - என்றார் கவியரசர்..
அந்த சொல் மெல்லிசை மன்னருக்கும் பொருந்தும்..
அவ்வண்ணமாகிய
மாபெரும் வித்தகர்களை
நெஞ்சம் மறப்பதில்லை..
நெஞ்சம் மறப்பதேயில்லை!..
***




