நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
புரட்டாசி
வெள்ளிக்கிழமை
இன்று
சுந்தரர் அருளிச்செய்த தேவாரம்...
நீள நினைந்தடியேன் உமை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண் மடவாள் அவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
யூர்ச் சில நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான்
அவை அட்டித் தரப்பணியே..
7/20/1
திருக்கோளிலி தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானே,
வாள் போலுங் கண்களை உடைய எனது இல்லாள் பரவை தனது வாழ்க்கையை நடத்த இயலாமை கருதி மனம் வருந்தாதபடி குண்டையூரில் நெல் மூட்டைகள் சிலவற்றைப் பெற்றேன்.
ஆயினும்
அவைகளை அவள்பாற் சேர்ப்பிப்பதற்கு எனது வசம் ஆட்கள் எவரும் இலர்..
அடியேன், எப்போதும் உம்மையே நினைத்து வணங்குகின்ற பணியை உடையவன்..
நான் வேறு யாரை வேண்டுவேன்!
இந்த நெல் மூட்டைகளை ஆரூரில் சேர்ப்பித்து உதவும்படி எவர்க்கேனும் உத்தரவிட்டு அருள்வீராக..
குண்டையூர்க் கிழாரால் சுந்தரர்க்கு வழங்கப்பட்ட நெல் மூட்டைகள் நெல்மலையாய் உயர்ந்து நின்றன..
அன்றிரவு எம்பெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பூத கணங்கள் சுந்தரரை அணுகி " எமக்கு இங்கு பணி யாது?.." என வினவ,
சுந்தரரும் " இந்நெல்மலையை ஆரூரில் இல்லம் தோறும் நிறைத்திடுக.." - என்று மொழிந்து அருட் தன்மையில் பொலிந்து நின்றார்...
பூத கணங்களும் அவ்வாறே இல்லங்கள் தோறும் நெல்லை நிரப்பிச் சென்றன...
குண்டையூர் கிழாரிடம் சுந்தரர் நெல் பெற்ற இப்பதிக பாராயணத்தால் இல்லத்தில் வறுமை வாராது என்பது ஆன்றோர் வாக்கு...
இன்றும் இவ்வைபவம் மாசியில் திருவிழாவாக நிகழ்கின்றது..
சுந்தரர் திருவடிகள் போற்றி
ஓம் நம சிவாய
***




உத்தமர்கள், தவ சிரேஷ்டர்கள் வாழ்ந்த பூமி... ஓம் நமச்சிவாய.
பதிலளிநீக்குஉண்மை...
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றி ஸ்ரீராம்..
திருக் கோளிலி எம் பெருமான் இறைவனை வணங்கிக் கொண்டோம். வெள்ளி நாளில் நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஇப்பாடல் எமக்கும் பிடித்தமானது " நித்தமும் கை தொழுவோம்" இறைவா இவ் வரத்தை எமக்கு என்றும் மறக்காமல் இருக்க அருள் புரிவாயாக என வேண்டி நிற்போம்....
ஓம் சிவாய நமக.
அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா
சுந்தரர் தேவாரத்தை பாடி வணங்கி கொண்டேன் ஈசனை.எங்கள் வார வழிபாட்டில் அடிக்கடி படும் பாடல்.
பதிலளிநீக்குஇனிய பாடல் இது..
நீக்குஅன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
நன்றியம்மா