நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், செப்டம்பர் 09, 2026

தியாக தீபம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
ஆவணி 
 வெள்ளிக்கிழமை


ஆங்கிலேயர்களுக்கு எதிராக கப்பல் ஓட்டியவர்... அதற்குத் தண்டனையாக சிறையில் செக்கிழுத்தவர்... 

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி அவர்களின் பிறந்த நாள் (5 / 9/ 1872)
கொண்டாட்ட நாட்களில் மிகுந்த நன்றியோடு அவருக்கு வணக்கம் ..

 வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் தியாகத்தை தண்டனிட்டு வணங்க வேண்டிய தருணம் இது.. 
அவரது தியாகத்தை வரும்
தலைமுறைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய தருணம் இது... 

ஆங்கிலேயர்களை எதிர்த்து கப்பல் சேவை நடத்தியதால் சிறையிலிட்டுக் கொடுமைப் படுத்தினார்கள். சிறையில் கல் உடைக்கச் சொன்னார்கள். புழுக்கள் நெளிந்த கூழை குடிக்கக் கொடுத்தார்கள். 

எண்ணெய் எடுக்கும் செக்கை இழுக்க வைத்தார்கள். இந்திய சுதந்திரத்திற்காகத் தன் சொத்து முழுவதையும் இழந்தவர்..

தனது விடுதலை க்குப் பின்னும் பெருந்துன்பங்களை அனுபவித்த பெருந்தகை...

மீண்டும் தனக்கு வழக்கறிஞர் உரிமம் பெற்றுத் தந்த நீதிபதி எட்வர்ட் ஹாமில்டன் வாலஸ் அவர்களிடம் கொண்ட நன்றியுணர்வின் காரணமாக தன் மகனுக்கு வாலேஸ்வரன் என பெயரிட்டார்...

இத்துன்பங்களுக்கு இடையே சென்னையில தனது குடும்ப செலவுகளுக்காக மண்ணெண்ணெய்  வியாபாரம் செய்ததாகவும் வரலாறு..

அவரது தியாக வரலாறு மறைக்கப்பட்ட தன் பின்னணியில் அரசியல் உள்ளது என்கின்றனர் விவரம் அறிந்தோர்..

மகாகவிக்கு உற்ற நண்பராகத் திகழ்ந்தவர்..

மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ" என்று பாரதி மனம் நொந்து இவருக்காகப் பாடினார்..

நன்றியுணர்வு நமது தமிழ்ச் சமூகத்திற்கு இருக்கும் வரை, நம் பிள்ளைகளுக்கு வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தியாகத்தைச் சொல்லிக் கொண்டே இருப்போம்..

தியாக தீபம் வாழ்க
***

6 கருத்துகள்:

  1. அவர்தம் சமூகத்தில் மரணத்தறுவாயில் தலைமாட்டில் அமர்ந்து தேவாரம் படிப்பார்களாம்.  இவர் தனது தலைமாட்டில் அமர்ந்து பாரதியாரின் "பாருக்குள்ளே நல்ல நாடு" பாடலைப் பாடும்படி கேட்டாராம்.  தியாகச்செம்மல். இவருக்கு வரவேண்டிய பணத்தை காந்தி ஆட்டையை போட்டு விட்டதாகவும் ஒரு செய்தி உண்டு.

    பதிலளிநீக்கு
  2. வாலேஸ்வரன் பெயர்க் காரணம் இப்போதுதான் அறிகிறேன்.  இவர் சிறையில் இருக்கும்போதே இவர் கப்பல் கம்பெனியை ஆங்கிலேயருக்கு விற்று விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர் கனவை சிதைத்து விட்டனர்...

      எல்லாம் வெள்ளையனின் சூழ்ச்சி

      நீக்கு
  3. "மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ" என்று பாரதி மனம் நொந்து பாடிய வரிகள் நினைவுக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..