நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
மார்கழி 27
இன்று கூடாரவல்லி
குறளமுதம்
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.. 397
*
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவார
கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.. 27
*
ஸ்ரீ மாணிக்க வாசகர் அருளிச் செய்த
திருவெம்பாவை
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.. 17
ஸ்ரீ சுந்தரர் அருளிச் செய்த
தேவாரம்
திரு கச்சூர் ஆலக்கோயில்
மேலை விதியே வினையின் பயனே
விரவார் புரமூன் றெரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார் தங்கள்
கவலை களைவாய் கறைக்கண்டா
மாலை மதியே மலைமேல் மருந்தே
மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்
ஆலக் கோயில் அம்மானே.. 7/41/5
நன்றி
பன்னிரு திருமுறை
ஓம் ஹரி ஓம்
நம சிவாய
***


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.....
பதிலளிநீக்குநல்லதே நடக்கட்டும்.
மகிழ்ச்சி..
நீக்குநன்றி வெங்கட்
மார்கழி 27 ஆ, நாள் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நீக்குநன்றி ஸ்ரீராம்
தமிழின் அமுத மழை.
பதிலளிநீக்குஆம்..
நீக்குஅமுத மழை தான்
திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடி வணங்கினோம்.
பதிலளிநீக்குஆண்டாள் படம் அழகு.
திருகச்சூர் ஆலக்கோவில் அம்மானே சரணம்.
மகிழ்ச்சி..
நீக்குநன்றியம்மா...