நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, அக்டோபர் 18, 2025

கங்கா காவிரி

       

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***


இன்று
ஐப்பசி முதல் நாள்
சனிக்கிழமை


இன்று சூரியோதயப் பொழுதில் - 
ஈசன்  எம்பெருமானின் கட்டளைப்படி , மயிலாடுதுறை துலா கட்டத்தில் காவிரியுடன் கங்கை  கலப்பதாக ஐதீகம்..

இதனால் காவிரி நதி தீரம் முழுதுமே மேலும் சிறப்புறுகின்றது..

இப்படிக் கலக்கின்ற கங்கை - துலா மாதம் எனும் இந்த ஐப்பசி மாதம் முழுதும் காவிரியுடன் கலந்திருந்து கார்த்திகை முதல் நாள் மாலைப் பொழுதில் விடை பெற்றுக் கொள்கின்றாள்..

காவிரி நதியில் இந்த ஐப்பசி
மாதம் முழுதும் நீராடுவதை மிகுந்த புண்ணியமாகக் கொள்கின்றனர் மரபு சார்ந்த மக்கள்.

காவிரி நதிக் கரையிலுள்ள சிவ வைணவ ஆலயங்கள் அனைத்திலும் ஐப்பசி மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன..

நாமும் மங்கல நீராடி புண்ணியப் பலன்களை எய்துவோம்..

காவிரியாள் வாழ்க
கங்கா தேவி வாழ்க!

ஓம் ஹரி ஓம்
ஓம் நம சிவாய
**

4 கருத்துகள்:

  1. காவிரிப் பெண்ணே வாழ்க
    காவிரிப் பெண்ணே வாழ்க
    உந்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க
    தென்குலப் பெண் அரைத்த மஞ்சளில்
    குளித்தாய்
    திரும்பிய திசை எல்லாம் பொன்னடி
    குவித்தாய்} நடையினில் பரத கலையினை வடித்தாய்
    நடையினில் பரத கலையினை வடித்தாய்
    நறு மலர் உடையால் மேனியை மறைத்தாய் உன் அரும் கணவன் கங்கையை
    அணைத்தே
    கன்னிக் குமரியையும் தன்னுடன்
    இணைத்தான் ஆயினும் உன் நெஞ்சில் பகை
    ஏதும் இல்லை
    அதுவே மங்கையரின் கற்புக்கோர் எல்லை ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்
    அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ' கற்பு என்பது சொல் திறம்பாமை ' - ஔவையார்..

      தங்கள் வருகையும்
      அன்பின் கருத்தும் மகிழ்ச்சி
      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. காவிரியோடு கங்கை இணையும் ஐப்பசி மாதத்தின் முதல் நாளைய வாழ்த்துகள்.

    எப்போதுமே காவிரியில் நீராடுவது சிறப்பென்றால், இம் மாதத்தில் நீராடுவது எத்தனை சிறப்பானது எனபதை நன்றாக சொல்லியிருக்கிறீர்கள்.

    இத்தனை சிறப்பு வாய்ந்த இரண்டு புண்ணிய நதி அன்னைகளும், தங்களை அண்டி வரும் தங்கள் குழந்தைகளை சீரோடும், சிறப்பும் காத்து அவர்களின் வாழ்வை வளமாக்கட்டும் என பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின்
      வருகையும் கருத்தும்
      பிரார்த்தனையும்
      மகிழ்ச்சி
      நன்றியம்மா

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..