நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், மே 19, 2025

மசாலா

 

நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி  
திங்கட்கிழமை


பிரியாணி மசாலா

தேவையானவை :
உலர்ந்த மல்லி - 50 கிராம்
மிளகு - 30 கிராம்
சோம்பு - 20 கிராம்
ஏலக்காய் - 15 
அன்னாசிப் பூ - 5 
பட்டை - 10 துணுக்கு
கிராம்பு - 10 
கசகசா - 10 கிராம்
பிரிஞ்சி இலைகள் - 10 


செய்முறை:

மேற்சொன்ன அனைத்தையும் தனித்தனியே வெயிலில் நன்கு காயவைத்து, மிக்ஸியில் ஒன்றாக இட்டு  அரைத்துக் கொள்ள  (பிரியாணி) கரம் 
மசாலா..

இந்த பொடி ஆறு மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். 

இதை  அனைத்து வெஜ்., பிரியாணி, 
தக்காளிச் சாதம் மற்றும்
குருமா வகைகளில்  
தேவையான அளவு  சேர்க்கும் போது சுவையும் மணமும் கூடும்... 

இந்த மசாலாப் பொடியில் வர மிளகாய் சேர்க்கப்படவில்லை..

எனவே -
இதனைக் கொண்டு சமைக்கின்ற போது
தேவைக்கு ஏற்ப
காய்களுடன்  பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்வது சிறப்பு.. 

அதி காரம், 
அதிக காரம் இரண்டுமே உடல் நலத்திற்கு நல்லதல்ல..
ஃஃ

நமது சமையல்
நமது ஆரோக்கியம்

வாழ்க நலம்
***

10 கருத்துகள்:

  1. நல்ல குறிப்புகள்.  செய்து பார்த்து சுவைத்தபின் நம் விருப்பசுவை போல சேர்க்கும் பொருள்களில் மாற்றங்கள் கூட செய்து கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. நன்று. ஆனால் நாங்கள் எப்போதாவது செய்யும் குருமாவிற்கு கடை மசாலா உபயோகிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடை மசாலாவை இயன்ற வரை தவிர்ப்பது நல்லது..

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    நலமா? இப்போது காய்ச்சல் முற்றிலும் குணமாகி விட்டதா? நேற்றைய பதிவையும் இப்போதுதான் படித்தேன். தங்கள் உடல்நலனை கவனித்துக் கொள்ளவும். அதில் என்னையும் குறிப்பிட்டமைக்கு மிக்க மகிழ்வுடனான நன்றி. உங்கள் பதிவுகளைப்படித்து உலக விஷயங்கள், கோவில் வரலாறுகள், பழங்கால பழக்க வழக்கங்கள், பல ஆரோக்கியமான சமையல் செய்முறைகள் என பலதும் படித்து பயன் பெற்றிருக்கிறோம். இவ்வாறு தொடர்ந்து பதிவுகள் எழுதவும், அதை நாங்கள் படித்துப் பயன் பெறவும், தங்கள் உடல் நலனை இறைவன் முன்பு போல நல்ல ஆரோக்கியமாக வைக்க வேண்டுமென பிராத்தனைகள் செய்து கொள்கிறேன்.

    கரம் மசாலா செய்முறை நன்றாக உள்ளது. வீட்டிலேயே இவ்வாறு செய்து வைத்துக் கொண்டால் நம் உடல் நலத்திற்கும் தீங்கு வராது. பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது நலமே

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றியம்மா

      நீக்கு
  4. மசாலா சூப்பரா இருக்கு துரை அண்ணா. குறிப்பை குறித்துக் கொண்டேன். பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்திப் பார்க்கிறேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் மகிழ்ச்சி..

      நன்றி சகோ

      நீக்கு
  5. மசாலா நன்றாக உள்ளது. மரக்கறிகளுக்கும் ஏற்றதாக இருக்கிறது.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..