நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 16, 2025

சக்தி

   

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
வைகாசி 2
வெள்ளிக்கிழமை


எங்கெங்கு காணினும் சக்தியடா - தம்பி
ஏழு கடல் அவள் வண்ணமடா! - அங்குத்
தங்கும் வெளியினிற் கோடியண்டம் - அந்தத்
தாயின் கைப்பந்தென ஓடுமடா - ஒரு
கங்குலில் ஏழு முகிலினமும் - வந்து
கர்ச்சனை செய்வது கண்டதுண்டோ? - எனில்
மங்கை நகைத்த ஒலியெனலாம் - அவள்
மந்த நகையங்கு மின்னுதடா!..

காளை ஒருவன் கவிச்சுவையைக் - கரை
காண நினைத்த முழு நினைப்பில் - அன்னை
தோளசைத் தங்கே நடம்புரிவாள் - அவன்
தொல்லறிவாளர் திறம் பெறுவான் - ஒரு
வாளைச் சுழற்றும் விசையினிலே - இந்த
வைய முழுவதும் துண்டு செய்வேன் – என
நீள இடையின்றி நீ நினைந்தால் அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!..
அம்மை
நேர்படுவாள் உன்றன் தோளினிலே!..
- பாவேந்தர் -

ஓம் சக்தி ஓம்
சிவாய நம ஓம்
**

4 கருத்துகள்:

  1. பாவேந்தர் கவி மூலம் நீண்ட நாள் மறந்திருந்த ஒரு TMS பாடலை நினைவு படுத்தி விட்டீர்கள்.  உடல்நிலை தேவலாமா?  காய்ச்சல் சரியாகி விட்டதா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சளியும் தலைப் பாரமும் மட்டுமே...

      சரியாகி விடும்

      தங்கள் அன்பின் வருகையும்
      கருத்துரையும் மகிழ்ச்சி..

      நன்றி ஸ்ரீராம்

      நீக்கு
  2. "எங்கெங்குகாணினும் சக்தியடா"......
    பாமாலை பாடி வணங்கினோம்.

    உங்கள் உடல் விரைவில் நலம் அடையட்டும். வெந்நீர் ஆவி பிடிப்பது சுகம்தரும் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும்
      கருத்தும் பிரார்த்தனையும்
      மகிழ்ச்சி..

      நன்றி மாதேவி

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..