நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், ஜனவரி 23, 2025

முருக தரிசனம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 10
வியாழக்கிழமை


தஞ்சையில் பன்னெடுங்காலமாகவே பூக்கொல்லையாக  பூந்தோட்டமாக இருந்த பகுதியே இன்றைக்கு பூச்சந்தை பூக்காரத்தெரு

இங்கொரு கோயில் அழகன் முருகனுக்கு!.. 

தை மாதத்தின் முதல் வெள்ளியன்று தஞ்சை பூச்சந்தை ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை உடனாகிய ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி தரிசனம்..

தஞ்சையில் உள்ள ஸ்ரீ முருகன் திருக்கோயில்கள் ஒன்பதினுள் திருச்செந்தூரின் அம்சமாகத் திகழும் கோயில் இது..

நூறாண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து திருச்செந்தூரில் பணி செய்த ரயில்வே ஊழியர் ஒருவரிடம் அங்கிருந்த துறவி ஒருவர்  - தான் வழிபட்ட முருகன் திருமேனியை ஒப்படைத்து விட்டு சிவகதி எய்தி விட்டார்... 

ரயில்வே ஊழியரும் தனக்குக் கிடைத்த முருகன் திருமேனியை 
சொந்த ஊராகிய தஞ்சைக்குக்  கொணர்ந்து  தனக்குச் சொந்தமான பூந்தோட்டத்தில் வைத்து ஊர் மக்களுடன் வழிபட,  இன்று கோயிலாகத் திகழ்கின்றது..

இந்த வரலாறு மேலும் விவரமாக ஆலயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது..

எல்லா விசேஷங்களும் சிறப்புற நடக்கின்றன. ஆடி கடை ஞாயிறு அன்று தஞ்சை அறுபடை தரிசன நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு விருந்து உபசரிப்பு இப்பகுதி மக்களால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது..

திருக்கோயிலின் எதிரில் காவிரியின் கிளை நதியாகிய புது ஆறு..










எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தாகுலம் ஆனவை தீர்த்தெனையாள்
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறை நாயகனே... 46
-: கந்தரனுபூதி :-

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

1 கருத்து:

  1. முதல் படத்தில் கோவிலின் தோற்றம் அழகு. சிவமைந்தா... எம்போன்ற சிறியோரை கடைத்தேற்றுவாய்....

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..