நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜனவரி 05, 2025

மார்கழி 21

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 21 
ஞாயிற்றுக்கிழமை

குறளமுதம்

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும் 
நாவாயும் ஓடா நிலத்து.. 496

அருளமுதம்


ஸ்ரீ ஆண்டாள்
அருளிச்செய்த
திருப்பாவை

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.. 21
 நன்றி
நாலாயிர திவ்யப்ரபந்தம்


ஸ்ரீ மாணிக்கவாசகர்
அருளிச்செய்த
 திருவெம்பாவை

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.. 11


ஸ்ரீ திருநாவுக்கரசர்
அருளிச்செய்த
 போற்றித் திருத்தாண்டகம்
திரு ஆரூர்

கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுதம் ஆனாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவர் ஒப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி..1
 நன்றி
பன்னிரு திருமுறை
தருமபுர ஆதீனம்
**
ஓம் ஹரி ஓம் 

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

5 கருத்துகள்:

  1. ஓம் நமோ நாராயணாய, ஓம் நமச்சிவாய...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய மார்கழி பதிவு அருமை. குறளமுதம், அருளமுதங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. திருவெம்பாவை, திருத்தாண்டகம் பாடல்களை பாடி இறைவனை வணங்கிக் கொண்டேன். அனைவரையும் நலமாக வைத்திருக்க இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    இன்றைய மார்கழி பதிவு அருமை. குறளமுதம், அருளமுதங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளது. திருவெம்பாவை, திருத்தாண்டகம் பாடல்களை பாடி இறைவனை வணங்கிக் கொண்டேன். அனைவரையும் நலமாக வைத்திருக்க இறைவனிடம் வேண்டிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. திருப்பாவை திருவெம்பாவை, திருத்தாண்டகம் பாடல்கள் பாடி வணங்கினோம்.

    சிவாய நமக.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..