நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஜனவரி 22, 2025

சர்க்கரை வள்ளி

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
தை 9
புதன்கிழமை

" ஓட்டலில் சாப்பிட்டு விட்டேன்!.. " - என்று
 சொன்னால்,

வீட்டுப் பெரியவர்களிடம் வசவு கிடைக்கும்..

அது அந்தக் காலத்தில்!..

பசுவிடம் நேரிடையாகப் பாலைக் கறந்த காலம் அது..

தலைச் சுமையாக மோர், தயிர் வெண்ணெய் நெய் விற்கப்பட்ட காலம் அது..

இரசாயனக் கலப்பில்லாத சிறு தீனிகள் தங்குதடையின்றி கிடைத்த காலம் அது..

அப்படிப்பட்ட சிறு தீனிகளில் ஒன்று தான்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு..


ஏறக்குறைய நோயில்லா வாழ்வைத் தருகின்ற அற்புதம் - சர்க்கரைவள்ளிக் கிழங்கு..

மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் தெருவில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு 
விற்கப்படுகின்றது.

நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா?  என்று எதுவும் தெரியாமலேயே அல்லது தெரிந்து கொள்ள விரும்பாமலேயே தெரிந்தும் உணவகத் தொற்று நம்மை ஒன்றும் செய்யாது என்ற அலட்சியத்துடன்
சாப்பிட்டுக் கொண்டிருக்கின்ற காலம் இது..

 சாப்பிடும்  உணவு செரித்து அது சக்தியாகிய பிறகு உடலில்  கழிவுகள் தங்கினால் என்னவாகும்? (நோய்க் காரணிகளுள் இதுவும் ஒன்று)

இத்தகைய கழிவுகள் Free Radicals எனப்படும்.
..

இத்தகைய கழிவினை   சுத்தம் செய்வதில்  சர்க்கரை வள்ளிக் கிழங்கு பெரும்பங்கு வகிக்கின்றது.

விளைகின்ற மண் வாகு -  தன்மை - ரகத்தினைப் பொறுத்து கிழங்கின் உட்புறத்தில் இளஞ்சிவப்பு நிறம் தென்பட்டாலும் பொதுவாக வெள்ளை நிறமுடையது..


சர்க்கரை வள்ளி கிழங்கில்  கார்ப்போஹைடிரேட்ஸ்  புரதம் மிகச் சிறிய அளவில் கொழுப்பு  ஆகியன அடங்கியுள்ளன
நூறு கிராம் கிழங்கில் நூற்று எண்பது புள்ளி கலோரி   உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் வைட்டமின் A , வைட்டமின் C , வைட்டமின் B6 , மாங்கனீஸ். பொட்டாசியம் ஆகியனவும் நிறைந்துள்ளன.

நீரிழிவைக் கட்டுப்படுத்துகின்றது..

புற்றுநோயின் அபாயத்தைக்  தவிர்க்கின்றது..

இதனால் - இதய ஆரோக்கியம் மேம்படுகின்றது..

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது ...

தோல் திசுக்களை மேம்படுத்துகின்றது..

உடலில் இயற்கை சர்க்கரையின் (குளூக்கோஸ்) அளவை சீராக வைத்திருக்கின்றது.. கிளைசெமிக் இன்டெக்ஸ் 
சர்க்கரை வள்ளியில் குறைவாக இருப்பதால் 
நீரிழிவு குறைபாடு உடையவர்களும் இதனை உண்ணலாம்...

சர்க்கரைவள்ளிக் கிழங்கு நமது உடலில் 
இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் என எங்கெங்கும்
தங்கும் நச்சுகளை சுத்தமாக துடைத்து எடுக்கின்றது.

வாழ்நாள் முழுக்க நச்சுக் கழிவு பற்றிய பயம் இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைத்தால் பருவ காலத்தில் கிடைக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை தேவையான அளவு சாப்பிட வேண்டும்.

வைத்தியன் எனில் பாரம்பரிய தமிழ் வைத்தியன்.. வைத்தியனுக்குக்கு கொடுப்பதை விட வாணியனுக்குக் கொடு என்பது பழமொழி.. 

வாணியன் என்பவர் எண்ணெய் வணிகர்...

உணவு ஏவாரிகளுக்குக் கொடுத்து விட்டு நோயாளி ஆவதை விட உண்மையான விவசாயிகளுக்குக் கொடுத்து ஆரோக்கியமாக இருப்பதே நல்லது..


கண்ணில் கண்ட மசாலாக்களையும் அள்ளிப் போட்டு சமையல் என்ற பேரில்  கெடுத்து வைக்காமல் கிழங்கைக் கழுவி விட்டு அப்படியே  அவித்து உண்பதே ஆகச் சிறந்தது...

எனினும் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாம்பார் வைக்கின்ற வழக்கம் பழக்கம்  தஞ்சை மாவட்டத்தில் இருக்கின்றது...

எங்கள் வீட்டில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாம்பார் வைப்பதற்குத் தவறுவதில்லை....

மசாலா தவிர்ப்போம்
மகிழ்ச்சியுடன் வாழ்வோம்...

நம்முடைய நலம்
நம்முடைய கையில்..
**

ஓம் நம சிவாய
சிவாய நம ஓம்
**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..