நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், டிசம்பர் 27, 2023

தமிழமுதம் 11

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 11
புதன் கிழமை

 குறளமுதம்

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.. 49
**
இன்று
திரு ஆதிரை
ஆருத்ரா தரிசனம


பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ
எத்தினாற் பத்தி செய்கேன் என்னை நீ இகழ வேண்டா
முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே.. 4/23/1
-: திருநாவுக்கரசர் :-
**

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து  செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே புற்றரவு அல்குற் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து நின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ எற்றுக்கு உறங்கும் பொருள் ஏலோர் எம்பாவாய்.. 11
**

கன்றுடன் பசுக்களையும்  வளர்த்து அவற்றின் பொருட்டு எதிரிகளின் திறல் அழியப்  போர் புரியும் குற்றமில்லாத கோவலர் குலத்தின் பொற்கொடியானவளே!.. 
நாக படம்  போல்  அழகிய இடையினை உடையவளே.. வன மயிலைப் போல் வனப்புடையவளே.. எழுந்து வருவாயாக!..  

தோழியர் அனைவரும்  உன் வீட்டு முற்றத்தில் புகுந்து நின்று கார்மேக வண்ணனின் சீர் மேவும் பெயர்களைப் பாடிக் கொண்டிருப்பதைக் கேட்டும், ஏதொன்றும்  சொல்லாமல்
(எழுந்து  வாராமல்) இருப்பதற்கு - 
செல்வப் பெண்ணே என்ன அர்த்தம்?.. 
சொல்வாயாக!..
**

திருப்பாசுரம்


வையம் தகளியா  வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக செய்ய
சுடராழி யான்அடிக்கே  சூட்டினேன்சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று ..  2082 
-; பொய்கையாழ்வார் :-
**

சிவதரிசனம்

தேவாரம்
திருக்கடைக்காப்பு


தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி என்னுள்ளங் கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.. 1/1/1
-: திருஞானசம்பந்தர் :-
**

திருத்தாண்டகம்


தண்டி குண்டோதரன் பிங்கிருடி
சார்ந்த புகழ்நந்தி சங்கு கன்னன்
பண்டை உலகம் படைத்தான் தானும்
பாரை அளந்தான் பல் லாண்டு இசைப்பத்
திண்டி வயிற்றுச் சிறுகட் பூதஞ்
சிலபாடச் செங்கண் விடையொன் றூர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீர் ஆகிற்
கடுகநும் வல்வினையைக் கழற்ற லாமே.. 6/93/7
-: திருநாவுக்கரசர் :-
**
திருவாசகம்

திருவெம்பாவை
திருப்பாடல்கள் 19 - 20


உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம்கேள்
எங்கொங்கை நின் அன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கு எழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்..


போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்.. 20
-: மாணிக்கவாசகர் :-
**
திருப்பெருந்துறை
(ஆவுடையார் கோயிலில்)
ஸ்ரீ மாணிக்கவாசகர் 
அபிஷேகம்


திருவெம்பாவை 
இந்த அளவில்
நிறைவடைகின்றது
**
ஆவுடையார்
 கோயில்
தேர்த்திருவிழா


தில்லையில்
தேரோட்டம்


 -:  நன்றி :-
சிவனடியார்
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

6 கருத்துகள்:

 1. திருவாதிரை தின வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 2. ஆருத்ரா தரிசனம் இங்கு உங்கள் தளத்தில் காலையில் கிடைத்துவிட்டது, துரை அண்ணா.

  படங்கள் அனைத்தும் அருமை.

  அருகில் சிவன் (லிங்கம்) கோயில் இருக்கு. தினமும் செல்லும் கோயில்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி சகோ..

   நல்வாழ்த்துகள்..

   நீக்கு

   நீக்கு
 3. ஆருத்ரா தரிசனம் பல கோவில்களில் ஜோதி தொலைக்காட்சியில் பார்த்தேன். உங்கள் தளத்திலும் பார்த்து விட்டேன். மகிழ்ச்சி.
  ஆவுடையார் கோவிலில் நடந்த மாணிக்கவாசகர் அபிஷேகம் பார்த்தது மகிழ்ச்சி.
  தில்லை தேர் திருவிழா படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ..

   நல்வாழ்த்துகள்.

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..