நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், டிசம்பர் 12, 2023

தொப்பாரம்


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 26 
செவ்வாய்க்கிழமை


தொப்பாரங்கட்டிப் பிள்ளையார்..

" இதென்னடா!.. இப்படியொரு பெயரா?.. " - என்று தடுமாறினால்,

வாருங்கள் தஞ்சாவூருக்கு..

புதுப்பிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையத்திலிருந்து
பரபரப்பான தெற்கு அலங்கம் சாலையில் காலார ஒரு கிமீ (சற்று  குறைவு) நடந்தால் வடக்கு நோக்கியதாக தொப்புள் பிள்ளையார் என்ற பெயரில் கோயில் ஒன்று.. 


" என்னடா இது.. மறுபடியும் சோதனை பிள்ளையாருக்கு!.. "

உண்மையில் இந்தப் பிள்ளையாருக்கு வரசித்தி விநாயகர் என்று தான் பெயர்..

ஆனால் - வழங்கப்படுவது  வேடிக்கையான பெயரில்..

தற்போது விநாயகர் என்றே எழுதப்பட்டுள்ள து..

ஆமாங்க.. நூறு வருசத்துக்கு முன்னால கோவணதாரியான சாமியார் ஒருத்தர் இந்த கோயிலுக்குப் பக்கத்துல இருந்துருக்காரு.. 

அவருக்கு சித்த வைத்தியமும் தெரிஞ்சதால அந்தக் காலத்து ஜனங்களுக்கு அவரால முடிஞ்ச உதவிகளை செய்திருக்கார்.. 

அவ்வப்போது கோயிலுக்குள்ளேயே நிஷ்டையிலயும் இருப்பார்.. 

தேடி வர்ற ஜனங்க அக்கம் பக்கத்தில் அவரை விசாரிப்பது - 

" அந்த தொப்புள் சாமி எங்கே ங்க?.. "

" தொப்புள் சாமியா?.. புதுசு புதுசா பேரு வெக்கிறீங்களே!.."

" ஆமாங்க.. அந்த சாமியாருக்கு தொப்புள் குழி கொஞ்சம் மேடா இரு க்குதே.. அதனால தாங்க!.. "

இப்படியாக அந்த தொப்புள் சாமியார் தங்கி இருந்த  கோயிலுக்கு தொப்புள் பிள்ளையார் என்ற பெயர் நாமகரணம் ஆகி விட்டது.. 

அதன் பிறகு தொப்புள் சாமியார் இருந்த இடத்தில் கால் விளங்காத ஒருவர் இருந்து சித்த மருந்துகள் கொடுத்துக் கொண்டிருந்தார்.. 

நான் எனது இருபதாம் வயது வரையிலும் தொப்புள் சாமியாரை இக்கோயிலில் பார்த்திருக்கின்றேன்.. 

குழந்தைகளுக்கு விபூதி இட்டு விடுவதும் வீட்டு மருத்துவம்  சொல்வதுமாக அவரது காலம் முடிந்து விட்டது..

இப்போது பிள்ளையாரும் கோயிலும் மட்டும் தான்!..

பக்கத்திலேயே 
ஸ்ரீ சீதளாதேவி.. சந்நிதி திறக்கப்பட்டிருந்தால் தரிசிக்கலாம்..


இப்படியான -
தொப்புள் பிள்ளையார் கோயிலுக்கு நேர் எதிரே செல்லும் சாலையில் - சற்று தூரத்தில் - உயரமான கட்டுமலை மாதிரியான அமைப்பில் மேற்கு நோக்கி விளங்கும் கோயில் தான் - தொப்பாரங்கட்டிப் பிள்ளையார் கோயில்..

அப்பா!.. ஒருவழியாய் தலைப்பூவுக்கு (!) வந்தாயிற்று..

அது சரி.. தொப்பாரங்கட்டிப் பிள்ளையார் என்கிற பெயருக்கு ஏதாவது கர்ண பரம்பரைக் கதை இருக்குமே..

இருக்கின்றதே!...

ஆனால், 
அந்தக் கதை நாளைய பதிவில்!..

ஓம் கம் கணபதயே நம:
***

ஓம் சிவாய திருச்சிற்றம்பலம்
***

12 கருத்துகள்:

 1. மக்கள் தனக்கு வைக்கும் பெயர்களை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பரம்பொருள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. /// மக்கள் தனக்கு வைக்கும் பெயர்களை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பரம்பொருள்.///

   மகிழ்ச்சி.
   நன்றி ஸ்ரீராம்..

   நீக்கு
 2. தலைப்பைப் பார்த்து வந்து, புதிய கோவிலைத் தெரிந்துகொண்டேன்.

  பதிலளிநீக்கு
 3. தொப்பரங்கட்டிப்பிள்ளையாரை அறிந்து கொள்ள நாளை வருகிறேன். பிள்ளையார் கோவில் வரலாறு நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 4. பிள்ளையார் எல்லாருக்கும் தோஸ்த்! பெயரே வித்தியாசம். ஒவ்வொரு பெயருக்குப் பின்னிலும் கர்ணப்பரம்பரை பெயர்!!! இருக்கும்தான். அந்தக் கதையை அறிய ஆவல்.

  கோயில் பற்றிய தகவல்கள் சுவாரசியம்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பிள்ளையாருக்கும் பின்னில் கர்ண பரம்பரை பெயர் உண்டு..

   தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி சகோ..

   நீக்கு
 5. தொப்பாரம் கட்டி பிள்ளையார் வரலாறு அறிந்தோம்.

  பதிலளிநீக்கு
 6. பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி தனபாலன்..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..