நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, டிசம்பர் 22, 2023

தமிழமுதம் 6

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
மார்கழி 6
வெள்ளிக்கிழமை

 குறளமுதம்

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று..11
*

ஸ்ரீ கோதை நாச்சியார்
அருளிச் செய்த
திருப்பாவை


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்  வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சு உண்டு  கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவிற் துயில் அமர்ந்த வித்தினை  உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.. 6
**


பறவைகள் எல்லாம் விழித்துக் கொண்டன. 
கருடனை வாகனமாகக் கொண்ட பெருமானின் 
கோயிலில் ஒலிக்கின்ற வெண் சங்கின் முழக்கம் உனது செவிகளில் கேட்க வில்லையா?.. 

பூதனை என்னும் அரக்கியை வதைத்து சகடாசுரனையும் உதைத்து அழித்தவன் கண்ணன்!..

அவனே பாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டவன்.. அவனே உலகத்து உயிர்களுக்கு எல்லாம் வித்தானவன்..

அவனை உள்ளத்துள் வைத்து
முனிவர்களும் யோகிகளும் ஹரி ஹரி என்று சொல்வதைக்  கேட்டு  உள்ளங் குளிர்வதற்கு பெண்ணே எழுந்திருப்பாயாக!..
**

திருப்பாசுரம்


பணிவினால் மனமதுஒன்றிப்  பவளவாய் அரங்கனார்க்குத்
துணிவினால் வாழமாட்டாத்  தொல்லை நெஞ்சே நீ சொல்லாய்
அணியினார் செம்பொன்னாய  அருவரை அனைய கோயில்
மணியனார் கிடந்தவாற்றை  மனத்தினால் நினைக்கலாமே.. 892
-: தொண்டரடிப்பொடியாழ்வார் :-
**

சிவதரிசனம்
திருத்தாண்டகம்


ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
    ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
    காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணுந் தெரித்த நாளோ
    மான்மறி கை ஏந்தியோர் மாதோர் பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
    திருவாரூர் கோயிலாக் கொண்டநாளே.. 6/34/1
-: திருநாவுக்கரசர் :-
**

திருப்பள்ளியெழுச்சி


பப்பற வீட்டிருந் துணரும்நின் அடியார்
பந்தனை வந்தறுத் தாரவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.. 6
-: மாணிக்கவாசகர் :-
**

திருவெம்பாவை
திருப்பாடல்கள் 9 - 10


முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்..9

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.. 10
-: மாணிக்கவாசகர் :-
**

தொகுப்பிற்குத் துணை

நாலாயிர திவ்யப்ரபந்தம்
பன்னிரு திருமுறை,
தருமபுரம் ஆதீனம்..
**

ஓம் ஹரி ஓம்

ஓம் நம சிவாய 
சிவாய நம ஓம்
***

4 கருத்துகள்:

 1. பாசுரங்கள் மகிழ வைத்தன.  மார்கழி ஆறாம் நாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும்
   கருத்தும் வாழ்த்தும்
   மகிழ்ச்சி..
   நன்றி ஸ்ரீராம் ..

   நீக்கு
 2. திருப்பாவை, தெருவெம்பாவை , திருபள்ளியெழுச்சி, மற்றும் திருத்தாண்டகம், பாசுரங்களை பாடி இறைவனை வணங்கி கொண்டேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும்
   கருத்தும் மகிழ்ச்சி..
   நன்றி ..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..