நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, டிசம்பர் 02, 2023

அறம்

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
இன்று
கார்த்திகை 16
சனிக்கிழமை


அறத்தின் வழி நின்ற அன்பர்களை ஈசன் ஆட்கொண்டது அன்னதானத்தின் அடிப்படையில் தான்..

உலகுக்கு நாம் ஒன்றை வழங்கினால் நமக்கென ஒன்றை ஈசன் வழங்குவான் என்பதற்கு உதாரணமே ஔவையாருக்கு வழங்கப்பெற்ற சுட்டபழம்..

உணவு வழங்குதல் முப்பத்திரண்டு அறங்களுள் ஒன்று..

வேறு வழியில்லாதோர் உண் பொருளை விற்று பொருள் ஈட்டி தம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்..

ஆனால்,
உணவு விற்பதையே நிரந்தர வழியாகக் கைக்கொள்வது தகாது என்பதே ஆன்றோர் வாக்கு..

இதுவே மதுரையில் வந்தியம்மை பிட்டு விற்றதன் அடிப்படை..

வைகையின் கரை அடைபட்டதற்குக் காரணம் வந்தியம்மையின் பிட்டு..

கிழங்கோ கிழங்கு - என்று கூடையைத் தூக்கிக் கொண்டு சரஸ்வதியம்மை வீதியில் வந்தது நினைவுக்கு வருகின்றதா!..

கனகதாரையின் மூலகாரணம் உலர்ந்த நெல்லிக்கனி..

முதல் நாள் வயலில் விதைக்கப்பட்ட நெல்லை நள்ளிருள் பொழுதில் திரட்டி வந்து இடித்து சோறாக்கி இட்டவர் - இளையான்குடி மாறன்..


நண்பகலில் வீடு தேடி வந்த முதியவருக்கு தயிரன்னத்துடன் மாம்பழத்தை வழங்கி சிவமுக்தி அடைந்தவர் காரைக்கால் அம்மையார்..

முன்னிரவில் பசி என்று வந்த பெரியவருக்கு பச்சரிசி இடித்து பயற்றம் பருப்பு சர்க்கரை சேர்த்து ஈர அடுப்பை மூட்டி பக்குவப்படுத்தி - ஏழை சேந்தனாரின் மனைவி வழங்கியதே திரு ஆதிரைக் களி..

யாருமே செய்யத் துணியாதபடிக்கு அமுது படைத்தவரே பெருந்தொண்டராகிய சிறுத்தொண்டர்..

அடியார்க்கு அன்னம் ஈவது புண்ணியம்.. 

அதனால்தான் சுந்தர மூர்த்தி ஸ்வாமிகளின் பசி தீருவதற்காக ஈசன் திருக்கச்சூரில் இரந்து இட்டார்.. விருந்து இட்டார்..

ஸ்ரீ வாரியார் ஸ்வாமிகளின் அறவுரை இது..

உணவை வழங்கியவர் - " என்ன பெரிதாக செய்து விட்டோம்.. "  என்றிருக்க வேண்டும்.. 

உணவை உண்டோர்  - " இதற்கு என்ன கைம்மாறு செய்வது.. " என்றிருக்க வேண்டும்..

இப்படியான நிலையில் அறச்சாலையில் உணவு உட்கொண்டவர்கள் தம்மால் ஆனவற்றை அந்த அறச்சாலைக்குச் செய்தனர்..

அவை உடல் உழைப்பாகவோ அல்லது பொருள் உதவியாகவோ அமைந்தது..

அப்படியான நிலை - இன்று இல்லாமல் போனது.. 

உணவு வணிகம் என்பது பலரையும் அச்சுறுத்துவதாக அமைந்து விட்டது..

சைவ உணவகங்களில் கூட பல நிலைகளிலும் உணவில் அலட்சியமும் சீர்கேடும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பது உண்மை.. 


இப்படியான செய்திகளை வெளியிடுகின்ற நாளிதழ்கள் தொடர்புடைய  உணவகத்தின் பெயரை வெளியில் சொல்வதில்லை என்பது கூடுதல் சிறப்பு!..

இதுவே கலியின் லீலை.. 

இதிலிருந்து நம்மை நாமே மீட்டுக் கொள்ள வேண்டும்..


அதற்கான வலிமையை - வைத்யநாதனும் தையல்நாயகியும் நமக்கு அருள வேண்டும்..


காக்க காக்க கனக வேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க..
**
ஓம் நம சிவாய 
சிவாய திருச்சிற்றம்பலம்
***

7 கருத்துகள்:

 1. அன்னதானம் பெரும் அறம். கர்ணன்கூட அன்னதானம் செய்ய மறந்தான் என்பர்.

  இன்றும் பலர் அன்னதானம் செய்துவருகின்றனர். எளியோருக்கும் தேவைப்பட்டவர்க்கும் வயிற்றுப்பசியாரக் கொடுப்பதே அன்னதானம்.

  ஹோட்டல்கள் வியாபாரத் தலங்கள். அதற்கும் அன்னதானத்துக்கும் பெரும்பாலும் சம்பந்தமில்லை. இருந்தாலும் ஒரு ரூபாய், பத்து ரூபாய் டாக்கடர் கோல இன்றும் பலர் மிக மிகக் குறைந்த விலையில் அன்னதானப் பணி செய்கின்றனர்.

  பதிலளிநீக்கு
 2. அமெரிக்காவில், பிராண்டட் உணவகங்களில், 10 பர்கருக்கு அன்னதானம் என்ற பெயரில் காசு கொடுத்தால் ஏழைகளுக்கு அந்த உணவைக் கொடுக்கும் நல்ல செயல் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. உணவை விற்கக் கூடாது என்று அறம் சொல்கிறது என்று படித்திருக்கிறேன்.  இன்று அந்த அறம் செல்லுபடியாகாது.  பெரும்பாலானோரின் பிழைப்பே அதுதான்.   ஒரு காலம்வரை செய்யாமல் இருந்தார்கள்.இப்போது அதிலும் மலிந்து விட்டது கேடுகெட்ட ஊழல்.

  பதிலளிநீக்கு
 4. சிவன் சம்பந்தப்பட்ட படங்கள் யாவும் அழகு.

  பதிலளிநீக்கு
 5. அறத்தின் முக்கிய செய்திகளை பகிர்ந்து கொண்டது அருமை.

  உணவு விடுதிகளில் உண்ண வருபவர்கள் நலம் கருதி நல்லவிதமாக சமைத்து கொடுத்தால் உணவு விடுதிக்கு பெருமை. அவர்கள் வியாபாரம் தலைமுறையை தாண்டி பேரோடும் புகழோடும் நிலைத்து நிற்கும்.

  சாரின் நினைவு தினம் அன்று "இம்மையிலும் நன்மை தருவார் "கோவில் முன் அமர்ந்து இருப்பவர்களுக்கு காலை உணவு அளித்தேன். அவர்கள் அதை மகிழ்ச்சியுடன் பெற்று கொண்டது மனதுக்கு நிறைவு.

  பதிலளிநீக்கு
 6. அன்னதானத்தின் சிறப்பு பற்றி நன்றாக தந்துள்ளீர்கள்.

  ஓம் நமசிவாய.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..