நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 25, 2021

வருகின்றான் வேலன்

    

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
நேற்று நள்ளிரவுப் போதில்
அன்புக்குரிய
ஸ்ரீமதி கமலாஹரிஹரன் எழுதிய
கனவும் கந்தனும்
பதிவினைப் படித்தேன்...

அதன் விளைவே
இன்றைய பதிவு...


வருவான் வருவான் வடிவேலன் அவன்
வருவினை தீர்த்திடும் கதிர்வேலன்..
தருவான் தருவான் திருமுருகன் அருள்
திருவினைப் பொழிவான் மால்மருகன்...

வண்ணக் குஞ்சரி ஒருபுறமும் அந்த
வள்ளிக் குறமகள் மறுபுறமும்
கொஞ்சிக் குலவிட குமரகுரு
குளிராய் முகிலாய் வருகின்றான்..

 வடிவேலுடனே வருகின்றான் வளர்
நிலவென வாகி வருகின்றான்..

வருந்திடும் மனதின் வலி தீர்த்து
மருந்திட மன்னவன் வருகின்றான்.


வைத்திய நாதனின் தவச் செல்வன்
வாஞ்சை மிகும் சிவதிருக் குமரன்
தையல்நாயகித் தாய் அருளால்
வையகம் காத்திட வருகின்றான்..

கவலை எதற்கென்று வருகின்றான்..
கமல மனம் தேற்ற வருகின்றான்..
அவலம் தனை மாற்ற வருகின்றான்..
அபயக்கரம் நீட்டி வருகின்றான்..

சிவ சிவ ஹர ஹர சரவண சரணம்

ஹர ஹர சிவ சிவ சண்முக சரணம்

ஃஃஃ

21 கருத்துகள்:

  1. வடிவேலன் தன் வேலினால் தொற்றை வதம் செய்து உலக மக்களை ஆரோக்கியமான சூழலுக்கு அழைத்துச் செல்லப் பிரார்த்தனைகள். வடிவேலவன் அருளால் அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றியக்கா..

      வாழ்க வளமுடன்..

      நீக்கு
  2. அருமையான பாடலைத் தந்தமைக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அங்கேயும் உங்கள் கவிதையைப் படித்து ரசித்தேன்.  இங்கேயும் ரசித்தேன்.  கந்தன் காக்கவேண்டும் அனைவரையும்.  பிரார்த்திப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே? கமலாவின் பதிவிலா? போய்ப் பார்க்கணும்.

      நீக்கு
    2. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  4. கந்தனின் பாடல் அருமை ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..
      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  5. வடிவேலன் வர வேண்டும் - இவ்வுலகை வாட்டும் தீநுண்மியை அழிக்கட்டும்.
    நலமே விளையட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  6. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      மகிழ்ச்சி. நன்றி..

      வாழ்க வையகம்..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    ஆஹா... மிக அழகான முருகன் பாமாலை. அழகன் என்றால் முருகன். அவனுக்கென்று தங்கள் மனதில் உதித்த வார்த்தைகளும் அவனையொத்ததாகவே அத்தனை அழகாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

    நல்லதொரு தமிழ் பூக்களால் தங்களால் கட்டப்பட்ட பாமாலையைக் தோளில் அணிந்து கொண்டபடி கண்டிப்பாக கந்தன் வருவான். தன் வேலினால், சூரபத்மனை வதைத்த மாதிரி, கொடிய அரக்கனாய் உலாவும் கொரோனா அசுரனையும் சம்ஹரித்து உலக மக்களை காப்பான்.

    முருகன் படங்கள் அனைத்தும் கண்ணுக்கு குளிர்வாய் உள்ளன. பாமாலை மனதுக்கு குளிர்வாய் மிக அருமையாக உள்ளது. என்னை குறிப்பிட்டமைக்கும், என் தளம் வந்து பதில்கள் அளித்தமைக்கும் மனம் நிறைந்த மிக்க நன்றிகள். எல்லாம் முருகனருள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றி..

      முருகன் திருவருள் முன்னின்று காக்க..
      வாழ்க வையகம்..

      நீக்கு
  8. அழகான வரிகள். ரசித்தேன் துரை அண்ணா!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றி..

      முருகன் திருவருள் முன்னின்று காக்க..
      வாழ்க வையகம்..

      நீக்கு
  9. மிக மிக அருமையான பாமாலை. நன்றி அன்பு துரை செல்வராஜு.

    முருகன் தான் இந்தக் கணத்தில் வந்து காக்க வேண்டும். தீ நுண்மி ஒழிந்தது என்ற செய்தி காதில் விழவேண்டும்.
    தீயனவை அனைத்தும் ஒழிய வேண்டும்,
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி. நன்றியம்மா..

      முருகன் திருவருள் முன்னின்று காக்க..
      வாழ்க வையகம்..

      நீக்கு
  10. மிக அருமையான கவிதை.
    வருவான் வடிவேலன் வருந்திடும் மனதின் வலி தீர்க்க!
    ஆருமை.

    எல்லோர் வாழ்விலும் ஆரோக்கியம் தர வரவேண்டும்., மனபலம், உடல் நலம் தர வேண்டும். தருவான் என நம்பிக்கையுடன் இருப்போம்.
    //கமல மனம் தேற்ற வருகின்றான் //
    அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி. நன்றி..

      முருகன் திருவருள் முன்னின்று காக்க..

      வாழ்க வையகம்..
      வாழ்க வளமுடன்..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..