நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், ஏப்ரல் 13, 2021

தாய் என் தாய்

             


***
தகவல் அறிந்ததும்
பதிவின் வழியாகவும்
தொலைபேசி வாயிலாகவும்
ஆறுதல் மொழிந்த
நல்லோர்
அனைவருக்கும்
நெஞ்சார்ந்த நன்றி..

அன்பு நிறைந்த
அனைவரது வாஞ்சையிலும்
கட்டுண்டிருக்கின்றேன்..

நானும்
எனது குடும்பத்தினரும்
மீண்டும்
நன்றி கூறிக் கொள்கின்றோம்..
***

புவியினில் வந்தாய்
பூவென வளர்ந்தாய்
துரையுடன் பொலிந்தாய் 
துணையாய் வாழ்ந்தாய்..

எமையும் ஈன்றாய் 
இன்னமுது ஈந்தாய்
தமிழையும் தந்தாய்
தகைமையும் புரிந்தாய்..

அன்பினில் நிறைந்தாய்
அறிவினைச் சுரந்தாய்
விருந்தாய் புரந்தாய்
கனிவாய் கனிந்தாய்..

வாழ்வினில் நிறைந்தாய்
வயதினில் நலிந்தாய்
புண்ணியம் பொலிந்தாய்
புகழுடம்பு அடைந்தாய்..

உன்னையும் மறந்தாய்
உலகையும் துறந்தாய்
காற்றினில் கலந்தாய்
கனலினில் தணிந்தாய்..

நீரினில் கரைந்தாய்
இறையுடன் கலந்தாய்
நெஞ்சினில் உறைந்தாய்
நினைவினில் நிறைந்தாய்..
***

நீங்கா நினைவுகளுடன்
உனது மலரடிகள்
போற்றுகின்றேன்
அம்மா!..
***
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

13 கருத்துகள்:

 1. அம்மாவின் ஆன்மா இறைவனின் திருவடியில் இளைப்பாறட்டும்.

  எமது பிரார்த்தனைகளும் கூடி...

  பதிலளிநீக்கு
 2. அம்மாவின் நினைவுகளை தாங்கிய கவிதை நெகிழ வைத்துவிட்டது.
  என்றும் அவர்களின் ஆசிகள் உங்கள் குடும்பத்திற்கு இருக்கும்.

  அவர்களுக்கு என் வணக்கங்கள்.

  பதிலளிநீக்கு
 3. கவிதை நெகிழ்ச்சி.

  நலமே விளையட்டும்.

  பதிலளிநீக்கு
 4. தாய் தாய் என்றே முடியும் கவிதை நெகிழ்த்தி விட்டது.  அம்மாவோடு அறுசுவை போம் மட்டுமல்ல, வாழ்வின் அர்த்தமே போனது போலவும் தோன்றும்.  மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
 5. ஆறுதல் கொள்ளுங்கள். அம்மாவின் ஆன்மா இறைவனிடம் சேர்ந்திருக்கும். அவர் உங்கள் எல்லோருக்கும் நலமே தருவார்.

  பதிலளிநீக்கு
 6. என்றென்றும் உங்களுடனேயே இருந்து வழி நடத்துவார். அவரின் ஆசிகள் எப்போதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இருக்கும். அவர் ஆன்மா நற்கதி அடையப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..