நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 16, 2021

காக்க.. காக்க..

 

நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***

கொரோனாவின் தாக்கம்
மீண்டும் அதிகரித்து வரும் வேளையில்
இணையத்தில் படித்த
கட்டுரை 
சில திருத்தங்களுடன்
இன்றைய பதிவில்!..
***

கொரோனா வைரஸ் குறித்த செய்திகள்,  மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. பாதிப்பு,இழப்பு - எனும் செய்திகளால் பலரும் உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.. இதுவும் ஒருவிதமான பாதிப்பே என்பதைப் புரிந்து கொண்டு அனைவரும் திடமான மனதுடன் வாழ்வதற்குப் பழகிக் கொள்ள வேண்டும் ..

கொரோனா அச்சத்தில் இருந்து வெளியேறி, கொரோனா பரவல் காலத்தில் தேவையற்ற பயத்தில் இருந்து மனதை மீட்டுக் கொள்வதற்காக உளவியலாளர்கள்  அளித்துள்ள பரிந்துரைகள் சிலவற்றை இங்கே காணலாம்..

வைரஸ் பற்றிய செய்திகளிலிருந்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அது குறித்தான செய்திகள் அனைத்தையும் பல நாட்களாக நாம் தெரிந்து வைத்துள்ளோம்.


இறப்பு எண்ணிக்கையைப் 
பார்க்க வேண்டாம். சமீபத்திய புள்ளி விவரங்களை அறிந்து கொள்வதற்கு இது கிரிக்கெட் போட்டி அல்ல. எனவே அதனை தவிர்க்கவும்.

கொரோனா வைரஸ் குறித்து இணையத்தில் கூடுதல் தகவல்களைத் தேடாதீர்கள். இது உங்கள் மன நிலையை பலவீனப்படுத்தும்..

அபாயகரமான செய்திகளை மற்றவர்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்கவும்..

ஏனெனில் உங்களை போன்ற மன வலிமை மற்றவர்களுக்கு இருக்காது. எச்சரிக்கையாகவும், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக் கருதி இதுப்போன்ற அபாயகரமான செய்திகளைப் பிறருக்கு அனுப்புவதால், அவர்களுக்கு மனசோர்வு ஏற்படலாம்..

முடிந்தால், வீட்டில் இனிமையான இசையைக் கேளுங்கள். குழந்தைகளை மகிழ்விக்க, கதைகள் சொல்வது, அவர்களுடன்  சேர்ந்து விளையாடுவது, எதிர்கால திட்டங்களை பகிர்ந்து கொள்வது என உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.


வீட்டில் அனைவரும் அடிக்கடி கைகளை கழுவுவது வெளியே செல்லும் போது கையுறை, முக கவசம் அணிவது, வங்கி முதலான பொது இடங்களில் சமூக இடைவெளி காப்பது போன்ற பழக்கங்களைப் பேணுங்கள்..


உங்களது நேர்மறையான மனநிலை உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவுவது போல - எதிர்மறையான  எண்ணங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தைச் சோர்வடையச் செய்கின்றன.. வைரஸ்களுக்கு ஆதரவாக பலவீனப்படுத்துகின்றன..

தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்..

முக்கியமாக, இதுவும் கடந்து போகும்.. நாம் பாதுகாப்பாக இருப்போம் - என்று உறுதியாக நம்புங்கள்..


காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியினில் நோக்க..
ஃஃஃ

11 கருத்துகள்:

 1. அருமையான காலத்திற்கேற்ற பதிவு.

  இதுவும் கடந்து போகும் என்று உறுதியாக நம்புவோம்.
  முருகன் அருளால் அனைத்தும் நலமாக வேண்டும்.
  கனகவேல் காக்கும்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி..

   வாழ்க வையகம்..

   நீக்கு
 2. இரண்டாவது அலையின் வேகம் தீவிரமாக உள்ளது... சென்ற வருடத்தை விட அதிக பாதுகாப்பு தேவை...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி... நன்றி..

   நீக்கு
 3. மக்கள் கொஞ்சம் உணரத்தொடங்கி இருக்கின்றனர் என்று தோன்றுகிறது.  ஆனாலும் வாட்ஸாப் க்ரூப்பில் ஒரு பதிவு..   மே இரண்டாம் தேதி முடிவை வெளியிட வேண்டி அரசு செய்யும், சொல்லும் நாடகம், பொய்யாம் இது.  

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. சரியான சமயத்தில் சரியான பதிவு.

  கவனமாகவே இருப்போம். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் நாட்களைக் கடத்துவோம்.

  பதிலளிநீக்கு
 5. சரியான நேரத்தில் வெளியாகி உள்ள பதிவு. தேவை இப்போது முழுக் கவனம். மக்கள் எப்போதும் உண்மையை விடப் பொய்யை நம்புகின்றனர். நாம் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருப்போம். அனைவர் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மேலோங்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு
 6. வணக்கம் சகோதரரே

  நல்ல பயனுள்ள பதிவு. இப்போதுள்ள கால கட்டத்தில் தேவையான பதிவும் கூட.. அனைவரும் நம்மால் இயன்ற வரை கவனமாக இருப்போம். பின்பு ஆண்டவன் செயல். அனைவரின் நலத்திற்காக ஒரே மனதுடன் நல்லதை நினைத்து இறைவனை பிரார்த்திப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..