நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 14, 2021

வருக.. வருக..


நாடும் வீடும்
நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும்
தொலைந்திட வேண்டும்..
***
அன்பின் இனிய
சித்திரைப் புத்தாண்டு
நல்வாழ்த்துகள்..


அன்பும் அருளும் பெருகிட வருக
ஆனை முகத்து அரசே வருக..
நன்மைகள் எங்கும் நிகழ்ந்திட வருக
நானிலம் நன்றாய்த் தழைத்திட வருக..

வெயிலினை உகந்த வேந்தே வருக
வினையினைத் தகர்க்கும் வித்தக வருக ..
மயிலினில்  ஏறும் மன்னவன் மகிழும்
மங்கல மா முக கணபதி வருக..


ஆணவத் தேரின் அச்சினை இறுத்த
ஐங்கர கணபதி அறிவினைத் தருக..
உச்சி மலைத்திரு விளக்கென நாளும்
உள்ளொளி பெருகிட பெரியோய் வருக..

தேரடி கணபதி தினமும் வருக
திருக்குள கணபதி திருவருள் தருக...
யாரடி தேடியும் நடவா வண்ணம்
மணக்குள கணபதி மங்கலம் தருக..

தூண்டுகை நாயக துணையாய் வருக
வேண்டிய தெல்லாம் விரைவாய் தருக..
ஆண்டகை ஐங்கர மூர்த்தி வருக
மூண்டெழும் தீவினை தொலைத்திட வருக..


கோளறு கணபதி குவலயம் காக்க
நாளொரு நாளாய் நன்மைகள் தருக
ஆலொடு அரசின் கீழமர் அரசே
நாலொடு நாலாய் செல்வங்கள் தருக..

அற்புதத் தமிழின் அழகாய் வருக..
அற்றவர்கட்கு அருள அமுதாய் வருக
கற்பக மூர்த்தி கனிவாய் வருக..
பொற்பத சதங்கை பொலிவாய் வருக..


ஏழைக்கு இரங்கும் எளியாய் வருக..
எம்குலம் காக்க இனிதாய் வருக..
காளைக் குமரன் கருதிடும் வண்ணக்
கழலடி காப்பு கணபதி வருக!..
***
ஓம் கம் கணேசாய நம:
ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

18 கருத்துகள்:

 1. விநாயகர் பாமாலை அருமை ஜி

  இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ஆனை முகத்தானின் படங்களுடன் அவருக்கென தாங்கள் தொகுத்த பாமாலை பாடலும் அருமை. விக்கின விநாயகர் நம் விக்கினங்கள் அனைத்தையும் இன்றிலிருந்து முற்றிலும் அகற்ற நானும் அவர் கலழடி தொழுது பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. விநாயகர் பாமாலை அருமை.
  அன்பும் அருளும் பெருகிட அருள்புரியட்டும் .
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களுக்கும் அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. கணபதிக்கு ஒரு பாமாலை - நன்று. பாராட்டுகள்.

  அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். நலமே விளையட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. பதில்கள்
  1. அன்பின் நெல்லை..
   தங்களுக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 7. இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா ....

  விநாயகர் பாமாலை வெகு அருமை ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   புத்தாண்டு நல்வாழ்த்துகளுடன்.

   நீக்கு
 8. சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நல்வாழ்த்துகள் ஐயா.. மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 9. அழகான பாமாலையால் விநாயகரைத் துதித்திருக்கிறீர்கள். இனிய பாமாலை மிக அருமை. எளிமையான அதே சமயம் அர்த்தம் பொதிந்த தேர்ந்தெடுத்த சொற்களால் ஒரு பாமாலை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விநாயகர் என்றாலே எளிமை தானே..

   அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியக்கா..

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..