நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2020

அம்மன் தரிசனம் 1


நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

ஆவணி மாதத்தின் ஞாயிறு எல்லாம்
அம்பிகைக்கு உரியவை..

அதிலும்
மாரி மகமாயித் தாயின்
வழிபாட்டுக்குரியவை..

நல்ல மனங்களுக்கு
நெருக்கமானவள் மகமாயி..
இன்பமோ துன்பமோ
அவளது சந்நிதியே 
நெஞ்சுக்கு நிம்மதி..

வெள்ளந்தியான மக்களுக்கு
அவளது கோயில்
இன்னொரு தாய்வீடு..

அந்த வகையில்
அவளைக் கொண்டாடுவோர்
ஆயிரம் நூறாயிரம்..

இன்றைய பதிவில்
தஞ்சை புன்னைநல்லூர்
ஸ்ரீ முத்துமாரி அம்மனின்
திவ்ய தரிசனம்..



ஆவணிப் பெருந்திருவிழாவினை
முன்னிட்டு சென்ற வாரம்
திருக்கொடியேற்றம்..

உற்சவங்களை கோயிலின் உள்ளேயே
நிகழ்த்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது..
அனைத்தும் அவளது சித்தம்..

கொடியேற்றப் படங்களைத்
தவிர்த்து மற்றவை 
பல்வேறு சந்தர்ப்பங்களில்
எடுக்கப்பட்டவை..




சூலம் கபாலம் கையேந்திய சூலிக்கு
நாலாங் கரமுள நாக பாசாங்குசம்
மாலங் கயன் அறியாத வடிவுக்கு
மேலங்க மாய் நின்ற மெல்லியலாளே..
-: திருமூலர் :-

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஃஃஃ

18 கருத்துகள்:

  1. ஆவணி ஞாயிறு புன்னைநல்லூர் மாரி அம்மனுக்கு மிகவும் உகந்த நாள். அன்னையின் தரிசனம் கிடைத்தது மகிழ்ச்சி.
    மாயவரத்தில் இருந்த போது நிறைய தடவை அம்மனின் தரிசனம் கிடைத்தது.
    பகிர்வுக்கு நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..
      இன்று மதியம் தான் இந்தப் பதிவை வெளியிட்டேன்..

      தங்கள் வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    2. எத்தனையோ நாட்களாகத் தர்சனம் செய்ய ஆவல். இன்று அவளே உங்கள் வழியே வந்து விட்டாள். கொடியேற்றம் மிக அருமை.
      அம்பாள் மிக அழகு.
      அவள் அருள் நம்மைக் காக்கட்டும்.

      நீக்கு
    3. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா...

      அவளே வாழ்விக்கும் தாய்...
      அவளே வரும் வழியின் துணை...

      தஞ்சை மக்களுடன் இரண்டறக் கலந்தவள்...

      கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவள்...

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றியம்மா...

      நீக்கு
  2. பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. அம்பாளை தரிசித்தேன் நன்றி ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி..

      ஓம் சக்தி.. ஓம் சக்தி..
      மகிழ்ச்சி .. நன்றி..

      நீக்கு
  4. ஓம் சக்தி....

    நல்ல தரிசனம். அன்னை மகமாயி அனைவருக்கும் நல்லதே அருளட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்..

      அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. பதில்கள்
    1. அன்பின் ஐயா..
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  6. 2,3 முறை போயிருக்கேன். இங்கேயும் அம்பிகையின் தரிசனம் அருமையாய்க் கிடைத்தது. ஆவணி ஞாயிறு விசேஷம்னு தெரிந்தாலும் அம்பிகைக்கு விசேஷமான விழா எடுப்பது குறித்து இப்போதே அறிந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      ஆவணி முழுதும் தஞ்சை மாரியம்மன் கோயிலில் விசேஷம் தான்...

      அனைத்தும் அவள் அருள்..
      மகிழ்ச்சி.. நன்றியக்கா..

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    அருமையான அம்மன் படங்கள். அன்புடன் பக்தியுடன் தரிசித்துக் கொண்டேன். தஞ்சை புன்னை நல்லூர் முத்துமாரியம்மன் கொடியேற்ற விழா அடங்கிய படங்கள் அழகுற இருந்தன. அந்த படங்களை தர்சிக்கும் வாய்ப்பு பெற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி...

      அனைத்தும் அவள் அருள்...
      நன்றி.. நலமே வாழ்க..

      நீக்கு
  8. அன்னையின் படங்கள் அருமை. நல்ல தரிசனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..