நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 30, 2020

ஏரல் ஸ்வாமிகள்

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்...
***

கடந்த செவ்வாய்க்கிழமை
எங்கள் பிளாக்கில் ரேடியோ பெட்டி எனும்
சிறுகதை வெளியானது...

அந்தக் கதையில்
விசாலம் எனும் தாய்
தன் மகன் அருணாசலத்திடம்
ஏரல் ஸ்ரீ சேர்மன் ஸ்வாமிகளிடம் வரம் வாங்கி அவனைப்
பெற்றதாகச் சொல்வதாக எழுதிருந்தேன்...


ஏரல் ஸ்ரீ சேர்மன்
அருணாசலம் ஸ்வாமிகள்..
அந்தக் கதையை வாசித்து விட்டு
மதிப்புக்குரிய ஸ்ரீமதி கோமதி அரசு அவர்கள்
வழங்கிய கருத்துரைகளுள் ஒன்று இதோ கீழே!..



ஏதோ கதையை எழுதினோமா!..
பிறரது கருத்துரைகளைக் கண்டு மகிழ்ந்தோமா!..
என்றிருக்கும் நிலையில்
கதையில் வரும் சம்பவம் ஒன்று
எங்கோ ஒருவரது வாழ்வுக்குள்
நிகழ்ந்திருப்பதும் அதனை அவர்கள் நினைவு கூர்ந்து
சிறப்பிப்பதும் என்னை உலுக்கி விட்டன...

கண்கள் கலங்கி விட்டன...
நான் இன்னும் ஏரல் ஸ்வாமிகளைத் தரிசித்ததில்லை..
ச்வாமிகளைத் தரிசிக்க வேண்டிய நேர்ச்சை ஒன்று உண்டு..

விரைவில் கைகூடி வருவதற்கு
இவ்வேளையில் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்...


திருச்செந்தூர் அருகில் மேலப்புதுக்குடி எனும் கிராமத்தில்
ராமசாமி நாடார் சிவனணைந்தாள் அம்மாள் எனும் தம்பதியர்க்கு
இளைய மகனாக, 1880 - அக்டோபர் மாதம் இரண்டாம் நாள் அன்று - தோன்றியவர் அருணாசலம். 

வளரும் பருவத்திலேயே யோகம் தியானம் மந்திரம்  -
இவைகளை அறிந்து ஞானம் கூடிவரப் பெற்றார்.

ஞானம் வரப்பெற்றது முதற்கொண்டு ஏழை எளியோர் தம்
துயர் தீர்ப்பதிலேயே அருணாசலத்தின்  நாட்டம் சென்றது. 

அவரால் நலம் பெற்றவர்கள் அவரை
அருணாசலம் ஸ்வாமிகள் அன்புடன் என்றழைத்தனர்.

அவருடைய புகழ் அந்த வட்டாரம் எங்கும் பரவியது...
ஸ்வாமிகளின் தன்னலமற்ற சேவையினைப் பாராட்டிய -
அன்றைய ஆங்கிலேய அரசு,

1906  செப்டம்பர் ஐந்தாம் நாள் - 
ஏரல் நகரத்தின் சேர்மன் பதவியைத் தாமாகவே முன் வந்து வழங்கியது... 

அது முதற்கொண்டு -  அருணாசலம் ஸ்வாமிகள்
ஏரல் சேர்மன் ஸ்வாமிகள் என வழங்கப் பெற்றார்... 

மக்கள் பணியினை ஏற்றுக் கொண்டதும்
அதனை மகேசன் பணியாகச் செய்து வந்தார் ஸ்வாமிகள்..

தான் பெற்ற அற்புத சக்தியால் - அற்றார்க்கும் அலந்தார்க்கும் அளப்பரிய உதவிகளைச் செய்து வந்த ஸ்வாமிகள் இல்லறத்தில் நாட்டம் இன்றி பிரம்மசர்யம் கொண்டு விளங்கினார். 

தனது வாழ்வு பூரணமாக இருக்கும் நாளை உணர்ந்த ஸ்வாமிகள்
அதன்பிறகு செய்ய வேண்டியதை தனது சகோதரரிடம் முன்னதாகவே தெரிவித்தார். 

சேர்மன் பதவியினை   1908  ஜூலை  27 அன்று திரும்ப ஒப்படைத்தார்.

தான் முன்பே கூறியிருந்தபடி -  ஆடி அமாவாசை (28 ஜூலை 1908) அன்று நடுப்பகல் பன்னிரண்டு மணிக்கு மகா பரிபூரணம் எய்தினார்..



ஸ்வாமிகள் கூறியபடியே ஏரல் நகரின்  தென்மேற்கில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் நிற்கும் ஆலமரத்தின் அருகில் சமாதி கோயில் எழுப்பப்பட்டு -இஷ்ட மூர்த்தியான முருகன் பிரதிஷ்டை நிகழ்ந்தது..

ஸ்வாமிகள் சித்தியடைந்த பின்னும் இன்று வரை -
நம்பிவரும் ஆயிரமாயிரம் பக்தர்களுக்கு கலங்கரை விளக்கமாக நின்று
கை கொடுத்து காப்பாற்றி வருகின்றார்.. 






ஒவ்வொரு அமாவாசை தினமும் இங்கு
சிறப்பு வழிபாடுகள் நிகழ்கின்றன..



எனினும் ஆடி மற்றும் தை மாத அமாவாசை தினங்களை அனுசரித்து பன்னிரண்டு நாட்கள் விசேஷ வைபவங்கள் நிகழ்கின்றன. சாதி சமயபேதம் இல்லாமல் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர்..

ஏரல் ஸ்ரீ சேர்மன் ஸ்வாமிகளை
இன்றையப் பதிவில் தரிசனம் செய்விப்பதில்
பெருமகிழ்ச்சி அடைகின்றேன்..

ஓம் குரவே நம:

முருகா போற்றி.. அழகா போற்றி..
முன் வினை தீர்க்கும் முதல்வா போற்றி..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ  

24 கருத்துகள்:

  1. ஏரல் சேர்மேன் ஸ்வாமிகள் பற்றி இதுவரை அறிந்ததில்லை.  இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.  பணிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  2. ஏரல் ஸ்வாமிகள் பற்றி தகவல்கள் அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி.

    தலைப்பைப் பார்த்ததும் வேகமாக வந்தேன்.

    இறைவன் மக்களை வழிப்படுத்த, பக்தியை பெருகச் செய்ய அவ்வப்போது தகுந்தவர்களை பிறக்கச் செய்கிறான். படங்கள், தகவல்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் நெல்லை...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  3. ஏரல் சுவாமிகளை தரிசனம் செய்து கொண்டேன்.
    தன்னலம் பாராமல், பிறர் நலத்திற்கு பாடு பட்ட அன்பர்கள் தெய்வநிலைக்கு உயர்த்தப்படுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு சுவாமிகள்.
    மக்கள் சேவையே மகேசன் சேவை என்று வாழ்ந்தவர்கள்.

    அவர்கள் வரலாறு தெரிந்து கொண்டேன்.

    நவ திருப்பதி போகும் போது ஏரல் போய் வந்தோம் .
    என் கருத்தை இங்கு பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    அவரை தரிசித்து நேர்ச்சையை பூர்த்தி செய்ய அவர் அருள்வார்.

    வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அன்வின் வருகைக்கு மகிழ்ச்சி...

      அந்தக் கதைக்கு தங்களது கருத்து ஏரல் ஸ்வாமிகள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு சான்றாக அமைந்தது...

      எனது கதைகளில் நான் கோர்க்கும் சம்பவங்களுக்கு ஆதாரமாகவும் அமைந்தது..

      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  4. அன்று கதையில் படித்ததும் இதில் ஏதோ இருக்கும் என்றே நினைத்திருந்தேன்.

    ஏரல் ஸ்வாமிகளைப்பற்றி இன்றே அறிகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  5. ஏரல் ஸ்வாமிகளைப் பற்றிய தகவல்கள் சிறப்பு. மகா மனிதர். அங்கே சென்று வரும் வாய்ப்பு உங்களுக்கு விரைவில் ஏற்படட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வெங்கட்...
      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. ஏரல் ஸ்ரீ சேர்மன் சுவாமிகள் அறிந்ததில் மகிழ்ச்சி... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. ஏரல் ஸ்வாமிகள் தரிசனம் அற்புதம்.
    உலகில் கடவுள் அனுப்பிய மகான்கள்
    அறியக் கிடைப்பதும் இன்னும் அருமை.
    உங்கள் கதையில் எழுந்தருளிய மகான்
    அவதாரக் கதையில் இங்கே படிக்கக் கிடைத்ததும் ஒரு அதிர்ஷ்டமே.
    மிக மிக நன்றி அன்பு துரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சியம்மா...

      ரேடியோ பெட்டி கதையில் ஸ்வாமிகளைப் பற்றிச் சொல்ல நேர்ந்தது அபூர்வம்..

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  8. இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன்.நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயா....
      தாங்கள் ஸ்வாமிகள் பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைத்திருந்தேன்...

      விரைவில் ஏரல் செல்வதற்கு வாய்ப்பு கிட்டும் என நம்புகிறேன்...

      மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. ஏரல் சுவாமிகள் தரிசனம் கிடைக்கப் பெற்றோம்.

    பதிலளிநீக்கு
  10. ஏரல் ஸ்வாமிகள் பற்றி அறிந்தது மனதுக்கு நிறைவாக இருக்கிறது. விரைவில் அவரைப் பார்க்கும் பேறு எங்களுக்கும் கிட்டும் என எதிர்பார்க்கிறேன். இங்கே கிடைத்திருப்பதும் நிறைவான தரிசனமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி அக்கா...

      விரைவில் ஏரல் ஸ்வாமிகள் தரிசனம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்...

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. ஏரல் சேர்மன் ஸ்வாமிகள் பற்றி நீங்கள் கதையில் குறிப்பிட்டிருந்த நினைவு இருக்கிறது. அவரைப் பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி.

    துளசிதரன்

    துரை அண்ணா நான் நினைத்தேன் ஏரல் ஸ்வாமிகள் பற்றி கண்டிப்பாக நீங்கள் ஒரு பதிவு போடுவீர்கள் என்று. கதையில் சொல்லியிருந்தீங்களே....இதுவரை கேள்விப்பட்டதில்லை. இப்போது அவரைப் பற்றியும் தெரிந்து கொண்டேன் ஏரல் திருச்செந்தூர் பக்கத்தில் என்பது தெரியும் ஆனால் ஸ்வாமிகள் பற்றி இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் துளசிதரன் கீதா..
      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      ஸ்வாமிகளின் தரிசனம் விரைவில் அமைய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்..

      மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  12. ஏரல் ஸ்வாமிகளைப்பற்றி முதன்முதலாக அறிகிறேன். படங்கள் ப்ரமாதம். சிறிய விக்ரகத்திற்கு அலங்காரத்தை அழகுற அமைத்தவர் ஒரு விற்பன்னர். சந்தேகமில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஏகாந்தன்..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி...

      திருச்செந்தூர் வட்டாரத்துக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டுமாயின் -

      ஏரல் சென்று வாருங்கள்...
      மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..