நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 23, 2020

திருப்புகழ் 9

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்.. 
***
அனைவரது
அன்பினாலும் ஆறுதல் மொழிகளினாலும்
பிரார்த்தனைகளினாலும் நேற்றிரவு
பாரசிட்டமால் மாத்திரைகளுக்கு இணையாக இங்குள்ள Fludrex
என்னும் மாத்திரைகள் கிடைத்தன..

இரவு ஒரு மாத்திரையைப் போட்டுக் கொண்டு
உறங்கி எழுந்தேன்..
சற்று பரவாயில்லை.. மதியம் சிறிதளவு கஞ்சியுடன்
மீண்டும் ஒரு மாத்திரை..

பார்க்கலாம்.. இனி வரும் நாட்கள் எப்படி இருக்கின்றன என்று..
அனைவரது அன்பின் மொழிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

இன்றைய பதிவில்
அருணகிரிப் பெருமான் அருளிச் செய்த
திருப்புகழ் அமிர்தம்...


நாள் என்செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோள் என்செயும் கொடுங் கூற்று என்செயும் குமரேசரிரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.. 38
- : கந்தர் அலங்காரம் :-

திருத்தலம் - சிறுவாபுரி


அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற 
அண்டர் மனமகிழ்மீற - அருளாலே
அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனும் உமையாளும் - மகிழ்வாக

மண்டலமு முநிவோரும் எண்டிசையி லுளபேரு
மஞ்சினனும் அயனாரும் - எதிர்காண
மங்கையுடனரி தானும் இன்பமுற மகிழ்கூற
மைந்து மயிலுடன்ஆடி - வரவேணும்

புண்டரிக விழியாள அண்டர் மகள் மணவாள
புந்திநிறை யறிவாள - உயர்தோளா
பொங்குகடல் உடன்நாகம் விண்டுவரை இகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு - வடிவேலா

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய - முருகேசா
சந்தமும் அடியார்கள் சிந்தையது குடியான
தண்சிறுவை தனில்மேவு - பெருமாளே..

தேவ குஞ்சரி பாகா சரணம்..
குருவே குகனே சரணம் சரணம்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ 

7 கருத்துகள்:

 1. அருமையான திருப்புகழ் அமிர்தம். முருகன் உங்களை இந்தக் காய்ச்சலில் இருந்து விடுவிப்பான். திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும். நெஞ்சே நிறையும். உடல் நலம் பேணவும். மாத்திரைகள் கிடைத்தது கொஞ்சம் ஆறுதலான செய்தி.

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மாத்திரை காய்சலைத் தவிர்க்க அல்ல என்று நினைக்கிறேன்.  எப்படியோ...   மாத்திரை கிடைத்து உடல் நலம் பெற உதவியதில் மகிழ்ச்சி.  

  முருகன் நம்மைக் காக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 3. தங்களது உடல் நலத்தில் கவனமாக இருங்கள் ஜி முருகன் துணை கிட்டட்டும்.

  பதிலளிநீக்கு
 4. உடல் நலம் - கவனமாக இருங்கள் ஐயா. நலமே விளையட்டும்.

  எல்லாம் வல்ல எம்பெருமான் முருகப் பெருமான் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
 5. உடல் நலம் கொஞ்சம் தேவலை என்று அறிந்து மகிழ்ச்சி.
  திருப்புகழை பாடி தரிசனம் செய்து கொண்டேன்.
  வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 6. மாத்திரை எடுத்துக் கொண்டதில் கொஞ்சம் பரவாயில்லை என்பது மனதிற்கு இதமான செய்தி. உடல் நலத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

  எல்லாம் நலமே விளைந்திடும்!

  துளசிதரன்

  கீதா

  பதிலளிநீக்கு