நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, மே 22, 2020

திருப்புகழ் 8

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்.. 
***
நேற்று முன் தினம் மறுபடியும் காய்ச்சல் வந்துற்றது...
சில நாட்களாகவே சாப்பாடு சரியில்லை..
சாப்பிடவும் முடியவில்லை..

சென்ற வாரம் திறக்கப்பட்டிருந்த மருந்தகங்கள்
சில நாட்களாக மூடப்பட்டுக் கிடக்கின்றன..

பாரசிட்டமால் வகை மாத்திரைகள்
இரண்டு எடுத்துக் கொண்டால் சரியாகி விடும்..
ஆனால் அவை தான் கிடைக்க வில்லை..

இன்றைக்கு (21/5) கொஞ்சம் சரியாகி இருக்கின்றது..

நலம் விசாரித்த
அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும்
மற்றும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

சில நாட்களாக எங்கள் ப்ளாக் கணிணியில் திறப்பதில்லை...
என்ன காரணம் என்று தெரியவில்லை...

மீண்டும் நெஞ்சார்ந்த நன்றியுடன்...  
***
இன்றைய பதிவில்
அருணகிரிநாதர் செய்தருளிய
திருப்புகழ் அமிர்தம்..ஒருவரைப் பங்கிலுடையாள் குமாரனுடை மணிசேர்
திருவரைக் கிங்கிணியோசை படத் திடுக்கிட்ட அரக்கர்
வெருவரத் திக்குச் செவிபட்டெட்டு வெற்புங் கனகப்
பருவரைக் குன்றும் அதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே!.. 13 
***


திருத்தலம் - கதிர்காமம்

ஸ்ரீ கந்த வேலன் - கதிர்காமம் 
திருமக ளுலாவு மிருபுய முராரி
திருமருக நாமப் - பெருமாள் காண்
செகதலமும் வானும் மிகுதிபெறு பாடல்
தெரிதரு குமாரப் - பெருமாள் காண்..

மருவும் அடியார்கள் மனதில்விளை யாடு
மரகத மயூரப் - பெருமாள்காண்
மணிதரளம் வீசி அணியருவி சூழ
மருவுகதிர் காமப் - பெருமாள் காண்..


அருவரைகள் நீறு படஅசுரர் மாள
அமர்பொருத வீரப் - பெருமாள் காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணி
அமலர் குருநாதப் - பெருமாள் காண்..

இருவினையி லாத தருவினைவி டாத
இமையவர்கு லேசப் - பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் - பெருமாளே..

வடிவுடை அரசே சரணம்.. சரணம்
வள்ளி மணாளா சரணம்.. சரணம்!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ 

15 கருத்துகள்:

 1. பாராசிட்டமால் கூட கிடைக்கவில்லை என்பது வருத்தம் தரும் செய்தி.  கிடைக்கும் காலத்தில் சில அத்தியாவசிய மருந்துகளை ஸ்டாக் செய்துவிட வேண்டும்.  சீக்கிரம் நலம்பெற பிரார்த்தனைகள்.  புழுங்கல் அரிசிக்கு கஞ்சி சூடு தணிக்கும் என்பார்கள்.

  பதிலளிநீக்கு
 2. எங்கள் பிளாக் ஏன் படுத்துகிறது என்று தெரியவில்லை.  கேஜிஜி நிறைய வெட்டு வேலைகள் செய்திருக்கிறார்.  எனினும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மேம்படுத்த வேண்டும்... (update)

   நேற்று நம் நண்பரின் தளத்தை அவ்வாறு செய்தேன்...

   கவியாழி

   நீக்கு
  2. என்ன செய்ய வேண்டும் என்று  கேஜிஜியிடம் சொல்ல முடியுமா DD?

   நீக்கு
 3. முருகன், மால் மருகன் நம்மைக் காக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 4. அச்சம் தவிர்த்தல் மிக அவசியம் சார் சொல்வது எளிதுஅவரவர்க்கு வந்தால் புரியும் நலமோடு இருக்க

  பதிலளிநீக்கு
 5. இந்த சோதனைக்காலத்தில் அருகில் நெருங்கியவர் எவரும் இல்லாமல் தனியாக இருப்பதே மாபெரும் பிணியாகும். முருகன் அருளால் இந்தச் சோதனையிலிருந்தும் மீண்டு வருவீர்கள். உடல் நலம் பேணவும். புழுங்கலரிசிக் கஞ்சியோடு சின்னத் தக்காளி சேர்த்து உப்பு, சுக்கு,மிளகு, ஜீரகம் பொடி பண்ணிப் போட்டுக் குடிக்கவும். வயிறும் நிறையும். உடலில் பலமும் வேண்டுமே!

  பதிலளிநீக்கு
 6. கதிர்காம தரிசனம் கிட்டியது. முருகன் அருளால் அனைத்தும் சரியாகட்டும்.

  பதிலளிநீக்கு
 7. பாரசிட்டமால் கூட கிடைப்பதில்லை என்றால் சிரமம் தான்... உடல் நலத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 8. உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள். அவ்வப்போது ஓய்வெடுங்கள்.

  பதிலளிநீக்கு
 9. கவனமாக இருங்கள். நலமே விளையட்டும்.

  பதிலளிநீக்கு
 10. காய்ச்சல் குணமாக வேண்டுகிறேன் இறைவனிடம்.
  திருப்புகழ் பாடி வேண்டிக் கொண்டேன்.
  சுக்கு, மிளகு, மல்லி போட்டு காப்பி குடிங்க. மிளகு ரசம் குடிங்க.
  சமையல் அறை இருக்கா செய்து குடிக்க?
  உடல் நலம் இல்லாத போது வெளியில் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

  பதிலளிநீக்கு
 11. உடல் நலம் கவனம் ஜி
  வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
 12. ஓ மீண்டும் ஜுரமா? உடல் நலத்தைப் பேணுங்கள்.

  எங்களின் பிரார்த்தனைகளும்

  நலமே விளைந்திடட்டும்.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..