நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, மே 16, 2020

திருப்புகழ் 3

நாடும் வீடும் நாம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
**

இன்றைய பதிவினில்
அருண்கிரியார் செய்தருளிய
திருப்புகழ்

திருத்தலம் - திருப்பழனி

முத்துக் குமரனின் மூன்றாவது படைவீடு

அருணகிரிநாதர் தனது திருவாக்கினாலே
அதிசயம் அநேகமுற்ற பழனி மலை!.. - என்று அருள்கின்றார்..
இதற்கு மேல் நாம் சொல்வதற்கு என்ன இருக்கின்றது!..


படிக்கின்றிலை பழநித் திருநாமம் படிப்பவர் தாள் 
முடிக்கின்றிலை முருகா என்கிலை முசியாமல் இட்டு
மிடிக்கின்றிலை பரமாநந்த மேற்கொள விம்மி விம்மி
நடிக்கின்றிலை நெஞ்சமே தஞ்சமேது நமக்கினியே.. 75
-: கந்தர் அலங்காரம் :- 


நாத விந்துக லாதீ நமோ நம
வேத மந்த்ரசொ ரூபா நமோ நம
ஞான பண்டித ஸாமீ நமோ நம - வெகுகோடி

நாம சம்புகு மாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்தம யூரா நமோ நம - பரசூரர்

சேத தண்டவி நோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்ப்ரம வீரா நமோ நம - கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம - அருள்தாராய்..


ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையும் - மறவாத

ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மனோகர
ராஜ கம்பிர நாடா ளுநாயக - வயலூரா

ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி - லையிலேகி

ஆதி யந்தவு லாஆ சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் - பெருமாளே!...
***

முருகா சரணம்... முதல்வா சரணம்...
முத்துக் குமரா... சரணம் சரணம்...

வெற்றி வேல்.. வீரவேல்.. 
ஃஃஃ

7 கருத்துகள்:

 1. திருப்புகழ் தொடர்ந்து மணக்கட்டும்...

  பதிலளிநீக்கு
 2. என் பெரியப்பா தினம் தினம் பாடிக் கொண்டிருந்த பாடல்.

  திருப்புகழ் மணம் இன்னும் கமழட்டும்.

  பதிலளிநீக்கு
 3. ஐயா வணக்கம் குவைத்தில் நிலைமை எப்படி நலம்தானே

  பதிலளிநீக்கு
 4. திருப்புகழ் பாடி முருகனை வேண்டிக் கொள்வோம்.
  வெற்றி வேல் வீர வேல்!

  பதிலளிநீக்கு
 5. அம்மா பாடுவதும் விறகு அடுப்பில் சமைக்கும் மணமும் வருது. தாத்தா வீட்டில் முருகன் தான் குலதெய்வம். தினம் வேல் வைத்துப் பூஜைகள் செய்வார் தாத்தா கடுமையான நியம நிஷ்டைகள் அதில் பாதி அம்மாவிடம் இருந்தது மதுரையிலேயே இருந்தும் நான் பரங்குன்றம், பழனி எல்லாம் போனதில்லை. பரங்குன்றமாவது டிவிஎஸ் நகர் தாத்தா வீட்டில் இருக்கிறச்சே கிரி பிரதக்ஷிணத்துக்குப் பெரியம்மாவுடன் போனேன். பழனி தரிசனம் 2007 ஆம் ஆண்டில் தான் கிடைச்சது. அப்போவும் சமர்த்தாகக் கீழே திருவாவினன்குடிக் குழந்தை வேலாயுதத்தை தரிசிக்காமல் வந்துவிட்டோம். தெரியலை! யாரையும் கேட்டுக்கவும் இல்லை. :( அதன் பின்னர் பலமுறை போக முயன்றும் போக முடியலை. பூம்பாறை குழந்தை வேலப்பரைப் பார்க்கையில் கிட்டத்தட்ட இதே போல் தான் குழந்தை வேலாயுதனாரும் இருப்பார் என்றனர். மனதைத் தேற்றிக்க வேண்டியது தான்.

  பதிலளிநீக்கு
 6. நீங்கள் போடும் ஒவ்வொரு தலங்களும் என்னுள் பல நினைவுகளைக் கிளப்பி விடுகின்றன. அதிலும் ஆறுபடை வீடுகள்னு தேடித் தேடி 2007 ஆம் ஆண்டில் பார்த்ததும், கடைசியில் அம்பத்தூரிலேயே இருந்தும் திருத்தணி போக முடியாமல் போனதும் மங்காத நினைவுகள்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..