நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 24, 2020

திருப்புகழ் 10

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
அருணகிரி நாதர் அருளிச் செய்த
திருப்புகழ் அமிர்தம்..

ஸ்ரீ முருகப்பெருமான் - திருவிடைக்கழி 
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலும்என்
பாவடி யேட்டிலும் பட்டதன்றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூட முகடு முட்டச்
சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே.. 15
-: கந்தர் அலங்காரம் :-

திருத்தலம் - திருவிடைக்கழி

ஸ்ரீ முருகப்பெருமான் தேவயானையுடன் 
திருச்செந்தூர் போல மூலஸ்தானத்தில்
முருகனுக்குப் பின்புறமாக
சிவலிங்க ப்ரதிஷ்டை...
முருகப்பெருமான் சிவவழிபாடு செய்த தலங்களுள்
இதுவும் ஒன்று...
திருக்கடவூருக்கு அருகிலுள்ள திருத்தலம்..


பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
பயனு மெப்படிப் - பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு நட்புறப்
பரவு கற்பகத் - தருவாழ்வும்

புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்
பொலியும் அற்புதப் - பெருவாழ்வும்
புலன கற்றிடப் பலவி தத்தினைப்
புகழ் பலத்தினைத் - தரவேணும்...

தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்
சரவ ணத்தினிற் - பயில்வோனே
தனிவ னத்தினிற் புனம றத்தியைத்
தழுவு பொற்புயத் - திருமார்பா

சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்
திறல யிற்சுடர் - குமரேசா
செழுமலர்ப் பொழிற் குரவ முற்றபொற்
றிருவிடைக்கழிப் - பெருமாளே..

இடைக்கழி மேவிய முருகா போற்றி..
இடுக்கண் நீங்கிட அருள்வாய் போற்றி!..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

15 கருத்துகள்:

 1. திருப்புகழைப் பாடி திரு அத்தனையும் அடையவேண்டும்.  

  முற்றிலும் குணமாகி விட்டீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்...

   முற்றிலும் என்று இல்லாவிட்டாலும்
   இப்போது ஓரளவுக்கு நலமாக இருக்கிறேன்..

   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. உடல் நலமா? உடல் நலமா? திருக்கடவூர் பல முறை போயும் திருவிடைக்கழி பார்த்ததில்லை. முருகன் அருளால் அனைவருக்கும் நலம் கிட்டட்டும். ஒண்ட வந்த பிடாரி ஒரேயடியாகப் போய் மறையட்டும். நலம் பெருகட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓரளவுக்கு நலமே...

   விரைவில் வையகம் நலம் பெறட்டும்....
   மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. முருகனின் அருளால் நலமுடன் வாழ்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. இடைக்கழி மேவிய முருகன் அனைவருக்கும் அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 5. திருவிடைக்கழி முருகன் அனைவருக்கும் நலம் தரட்டும்.

  உங்கள் உடல் நலம் சரியாகி இருக்கும் என்று நம்புகிறேன்.

  வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

   இப்போது ஓரளவுக்கு நலமே...
   வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 6. ஐயா, நலம்தானே
  கவனமாய் இருங்கள்

  பதிலளிநீக்கு
 7. அழகான திருப்புகழ் அமுதம் பருக தந்ததற்கு நன்றி! திருஷ்டி படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கன்னத்தில் கரும் போட்டு வைப்பார்கள். அனால் இந்த முருகனுக்கோ அது த்ருஷ்டியாகி பட செய்து விடும் போல் இருக்கிறதே.

  பதிலளிநீக்கு
 8. *அது த்ருஷ்டி பட செய்து விடும் போல் இருக்கிறதே.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..