நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 14, 2020

திருப்புகழ் 1

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***
இன்றைய பதிவில்
அருணகிரிநாதர் அருளிச் செய்த
திருப்புகழ் அமிர்தம்..


மொய்தார் அணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதாரையும் அங்கு வாழவைப்போன் வெய்ய வாரணம் போல்
கைதான் இருபதுடையான் தலை பத்தும் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.. 22 
-: கந்தர் அலங்காரம் :- திருத்தலம் - திருப்பரங்குன்றம்..

கொடுமைகளைக் களைய என்று
கூர் வேலெடுத்த அருளிளங்குமரன்
அசுர பதாதிகளை வென்றொழித்த பின்
தேவகுஞ்சரியை மணங்கொண்ட திருத்தலம்..

தமிழகத்தின் சிறப்பு மிக்க குடைவரைக் கோயில்..
கருவறை முழுதும் புடைப்புச் சிற்பங்கள் தான்..

இராமாயணத்தின் பல காட்சிகளையும்
இப்பாடலில் விவரிக்கும் அருணகிரியார்
இப்பிறவியில் உந்தன் கருணையைப் பெற்று
உய்வது எப்போது ?..
- என ஆன்மாக்களின் பொருட்டு
வினவுகின்றார்... ருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப்ப யின்று
கடையில்வந்து தித்துக்கு ழந்தை - வடிவாகிக்

கழுவியங்கெ டுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கைக் கொட்டித்த வழ்ந்து - நடமாடி

 அரைவடங்கள் கட்டிச்ச தங்கை
இடுகுதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து - வயதேறி

அரிய பெண்கள் நட்பைப்பு ணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன்க்ரு பைச்சித்தம் என்று - பெறுவேனோ..


இரவிஇந்த்ரன் வெற்றிக்கு ரங்கின்
அரசரென்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன்எண்கி னக்கர்த்த னென்றும் - நெடுநீலன்

எரியதென்றும் ருத்ரற்சி றந்த
அனுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தில் வந்து - புனமேவ

 அரியதன் படைக்கர்த்த ரென்று
அசுரர்தங்கி ளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் - மருகோனே

அயனையும்பு டைத்துச்சி னந்து
உலகமும்ப டைத்துப்ப ரிந்து
அருள்பரங்கி ரிக்குட்சி றந்த பெருமாளே...
***
தெய்வயானை திருமணக் காட்சி 
கந்தா சரணம்.. கடம்பா சரணம்.. 
கார்த்திகைச் செல்வா சரணம்.. சரணம்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

6 கருத்துகள்:

 1. அழகிய கோவில் திருப்பரங்குன்றம். வேலாயுதப் பெருமான் அருள் அகிலத்தைக் காக்கப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 2. ஓம் நம சிவாய
  வாழ்க வையகம்.

  பதிலளிநீக்கு
 3. கந்தன் கை வேலால் வினைகள் தீர்க்கப் பிரார்த்திப்போம். கொடிய இந்த நோய்க்கு அனைவரும் கந்தசஷ்டி கவசம் படித்து எதிர்கொண்டு வெல்வோம்.

  பதிலளிநீக்கு
 4. வேலுண்டு வினையில்லை.
  திருப்புகழ்பாடி திருப்பரங்குன்றம் இறைவனை வேண்டிக் கொண்டேன்.
  வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 5. முருகனுக்கு அரோகரா....

  நலமே விளையட்டும். திருப்புகழ் சுவை ததும்புகிறது.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..