நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், மே 21, 2020

திருப்புகழ் 7

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
அருணகிரி நாதர் அருளிச் செய்த
திருப்புகழ் அமிர்தம்..


மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞான தய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே.. 90
-: கந்தர் அலங்காரம் :-

திருத்தலம் - தஞ்சாவூர்


அஞ்சன வேல்விழி மடமாதர்
அங்கவர் மாயையில் - அலைவேனோ
விஞ்சுறு மாவுன - தடிசேர
விம்பமதாய் அருள் - அருளாதோ

நஞ்சமுதா உணும் - அரனார்தம்
நன்குமரா உமை - அருள்பாலா
தஞ்செனவாம் அடி - யவர்வாழ
தஞ்சையில் மேவிய - பெருமாளே..

கந்தா சரணம்.. கடம்பா சரணம்..
கதிர்வேல் அழகா சரணம்.. சரணம்..

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ 

8 கருத்துகள்:

 1. சிவனாரும் அவர் மைந்தரும் நம்மை எல்லாம் காக்கட்டும். பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 2. அருமையான திருப்புகழ்ப் பகிர்வுகளுக்கு மனமார்ந்த நன்றி. கூர்வேல் வந்து துர் எண்ணங்களை மட்டுமின்றி உலகின் துன்பங்கள் அனைத்தையும் அழித்து ஒழிக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 3. கந்தா சரணம்
  கடம்பா சரணம்

  பதிலளிநீக்கு
 4. கந்தர் அலங்காரம், திருப்புகழ் பாடி முருகனை வேண்டிக் கொண்டேன்.
  உடல் நலம் எப்படி இருக்கிறது சரியாகி இருக்கும் என்று நம்புகிறேன்.

  வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 5. உடல்நலம் தேறிவிட்டீர்களா?

  இறைவன் அருளால் நலம் விளைந்திடட்டும்

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 6. கிருத்திகை அன்று திருப்புகழ் ஓத கிடைத்தது . மகிழ்ச்சி!

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..