நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, மே 17, 2020

சிவமே சரணம் 23

நாடும் வீடும் நலம் பெற வேண்டும்..
பகையும் பிணியும் தொலைந்திட வேண்டும்..
***

இன்றைய பதிவில்
ஞானசம்பந்தப் பெருமான் அருளிச் செய்த
திருப்பதிகம்..

மூன்றாம் திருமுறை

திருப்பதிக எண் - 36

திருத்தலம் - திருக்காளத்தி



இறைவன் - ஸ்ரீ காளத்தி நாதர்
அம்பிகை - ஸ்ரீ ஞானப்ரசூணாம்பிகை

தீர்த்தம் - பொன்முகலி ஆறு
தலவிருட்சம் - வில்வம், மகிழம்

பஞ்சபூதத் தலங்களுள் ஒன்று..
வாயுவின் பகுப்பு..

ராகு கேது வழிபட்டு உய்வடைந்த தலம்...

வேடுவராகிய திண்ணப்பன்
பணி செய்த நாள் ஆறில் 
ஈசனுக்கு கண்ணிடந்து அப்பி
கண்ணப்ப நாயனார் என்றாகிய திருத்தலம்..   


சந்தமார் அகிலொடு சாதிதேக்கம் மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி 
எந்தையார் இணையடி என்மனத் துள்ளவே.. 1

ஆலமா அரவமோ டமைந்த சீர்ச் சந்தனம்

சாலமா பீலியுஞ் சண்பகம் உந்தியே
காலமார் முகலிவந் தணைதரு காளத்தி
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே.. 2

 கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
மூங்கில் வந்தணைதரு முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி அடிகளை அடிதொழ
வீங்கு வெந்துயர் கெடும் வீடு எளிதாகுமே.. 3

கரும்புதேன் கட்டியும் கதலியின் கனிகளும்

அரும்புநீர் முகலியின் கரையினில் அணிமதி
ஒருங்குவார் சடையினன் காளத்தி ஒருவனை
விரும்புவார் அவர்கள்தாம் விண்ணுலகு ஆள்வரே.. 4



வரைதரும் அகிலொடு மாமுத்தம் உந்தியே
திரைதரு முகலியின் கரையினிற் தேமலர்
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே.. 5

இத்திருப்பதிகத்தின்
ஆறு மற்றும் ஏழாம் திருப்பாடல்கள்
நமக்குக் கிடைத்தில..

முத்துமா மணிகளும் முழுமலர்த் திரள்களும்
எத்துமா முகலியின் கரையினில் எழில்பெற
கத்திட அரக்கனைக் கால்விரல் ஊன்றிய
அத்தன்தன் காளத்தி அணைவது கருமமே.. 8


மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி

நண்ணுமா முகலியின் கரையினில் நன்மைசேர்
வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி ஆங்கணைந்து உய்ம்மினே.. 9

வீங்கிய உடலினர் விரிதரு துவருடைப்
பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்
ஓங்குவண் காளத்தி உள்ளமோ டுணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க்கு ஒருவனே.. 10

அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி

வட்டவார் சடையனை வயலணி காழியான்
சிட்ட நான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க்கு இல்லையாம் பாவமே..11
-: திருச்சிற்றம்பலம் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்

ஃஃஃ

6 கருத்துகள்:

  1. ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    ஓம் நம சிவாய
    வாழ்க வையகம்.

    பதிலளிநீக்கு
  2. ஓம் நமச்சிவாய.

    ஞானப் ப்ரசூணாம்பிகை சமேத காளத்திநாதர் நம்மை எல்லாம் காக்கப் பிரார்த்திப்போம்

    பதிலளிநீக்கு
  3. ஓம் நமச்சிவாய.

    எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசனின் திருவடி தொழுவோம்.

    பதிலளிநீக்கு
  4. காளத்தி நாதர், ஞசானப் ப்ரசூணாம்பிகை தரிசனம் கிடைத்தது பதிகம் பாடி வணங்கி கொண்டேன்.
    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. திருக்காளத்தி 2,3 முறை போயிருக்கோம். காளத்தி நாதர் தரிசனத்துக்கு நன்றி. இன்னிக்கு சிருங்கேரி மடம் சார்பில் மாலை ஆறுமணிக்கு அனைவரும் விஷ்ணு சஹஸ்ரநாமபாராயணம் பண்ணச் சொல்லிப் பண்ணினோம்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..