நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வியாழன், டிசம்பர் 26, 2019

மார்கழி தரிசனம் 10

தமிழமுதம்

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்.. (393)
***

அருளமுதம்

ஸ்ரீ சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்
ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
திருப்பாடல் - 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டொருநாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த
கும்ப கருணனும் தோற்றும் உனக்கே
பெருந்துயில் தான் தந்தானோ ஆற்ற
அனந்தல் உடையாய் அருங்கலமே
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!..
***

ஆழ்வார் அமுதம்


ஏற்றான் புள்ளூர்த்தான் எயிலெரித்தான் மார்விடந்தான்
நீற்றான் நிழல்மணி வண்ணத்தான் கூற்றொருபால்
மங்கையான் பூமகளான் வார்சடையான் நீண்முடியான்
கங்கையான் நீள்கழலான் காப்பு.. (2155)
-: பொய்கையாழ்வார் :- 

ஓம் ஹரி ஓம் 
* * *

சிவ தரிசனம்
திருமறைக்காடு - வேதாரண்யம்


ஸ்ரீ மறைக்காட்டு மணாளன்
திருமறைக்காடு 
தூண்டு சுடரனைய சோதி கண்டாய் 
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட்டுறையும் மணாளன் தானே.. (6/23)
-: திருநாவுக்கரசர் :-
***

ஸ்ரீ மாணிக்கவாசகர் அருளிச் செய்த 
திருப்பள்ளியெழுச்சி
திருப்பாடல் - 10


புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம்
போக்கு கின்றோம் அவமே இந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெம்மை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே!..

இந்த அளவில் 
திருப்பள்ளியெழுச்சி
நிறைவடைகின்றது..
* * *

தேவி தரிசனம்
ஸ்ரீ துர்காம்பிகை - திருமறைக்காடு 
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலமன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விடாரவின்
பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும் எட்டுத்
திக்கேஅணியும் திருவுடையானிடம் சேர்பவளே!.. (037)
- அபிராமிபட்டர் -
* * *

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
* * * 

16 கருத்துகள்:

  1. இப்போதுதான் வல்லிம்மா தளத்தில் திருப்பாவை கேட்டு ரசித்து வருகிறேன்.  (கீதா ரெங்கன்  வருவதில்லை இல்லை?   அது தோடி ராகம் மாதிரி தெரிந்தது!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்...
      தங்களுக்கு நல்வரவு..

      அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  2. மறைக்காட்டு வேந்தனையும் அம்மாவையும் தரிசனம் செய்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருமறைக்காடு...

      நீங்கள் சென்றிருக்கின்றீர்களா?....

      நீக்கு
    2. இல்லை என்று வருத்தத்துடன்சொல்லிக்கொள்கிறேன்.

      நீக்கு
    3. திருமறைக்காடு செல்வதெனில் சொல்லுங்கள்...

      எனக்கு மிகவும் பிடித்த கோயில்...

      நீக்கு
  3. அன்பின் தனபாலன்...
    தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. அன்பின் ஜி..
      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  5. அன்பு துரை ,இனிய இறை தரிசனங்களுக்கு மிக நன்றி.ஹரிஹரன் கோலம் மிக மிக அழகு.
    அற்புதம். திருமறைக்காடு, என்ன அழகான பெயர்.
    இவர் அங்கே போய் வந்திருக்கிறார்.
    கடற்கரையோரம் குதிரைகள் இருக்குமாம். நான் சொல்வது 60 ஆண்டுகளுக்கு முன்.
    வாழி கோதை நாமம்.
    வாழி மாணிக்க வாசகர் நாமம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி..

      வேதாரண்யத்தை அடுத்து கோடியக்கரை.. பாதுகாக்கப்பட்ட காடு...

      இங்கே ஒருவகையான மான்களும் காட்டு மாடுகளும் பெருவாரியாக நரிகளும் இருக்கின்றன.. அரியவகைப் பறவைகளின் சரணாலயம்...

      வேதாரண்யத்தை அடுத்து அகஸ்தியான்பள்ளி, கோடியக்கரை என இரு சிவாலயங்கள் உள்ளன...

      கோடியக்கரை முனை வரை சென்றுள்ளேன்... காட்டுக்குள் சென்றதில்லை.. குழகர் கோயிலும் ராமர் பாதமும் காட்டுக்குள் இருக்கின்றன...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  6. வேதாரண்யம், கோடியக்கரை, அகஸ்தியான்பள்ளி , ராமர் பாதம் எல்லாம் பார்த்து இருக்கிறோம்.
    பொன்னியின் செல்வன் கதையில் குழகர் கோவில் வரும்.

    இன்றைய பதிவை படிக்க தரிசனம் செய்ய இப்போது தான் நேரம் கிடைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...
      இனியொரு முறை அவசியம் குழகரைத் தரிசிக்க வேண்டும்...

      தங்களது கருத்துரைக்கு நன்றி...

      நீக்கு
  7. கோடிக்கரைக்குழகரைப் பார்க்கணும்னு பல்லாண்டுகளாக ஆவல்! ஆனால் அந்தப் பக்கமே போனதில்லை. எப்போக் கூப்பிடுவாரோ! சுந்தரர் மாதிரியா நாமெல்லாம்! :(

    பதிலளிநீக்கு
  8. ஒவ்வொரு நாளும் பாசுரமும், மற்ற சிறப்பான பாக்களும் - கூடவே இறை தரிசனமும்! நன்றி ஜி. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..