நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஜூன் 02, 2019

அன்பினில் வாழ்க 1

மூன்று வாரப் பயணம் இனிதே நிறைவேறியது...

நல்லபடியாக நேற்று பிற்பகல் குவைத் திரும்பினேன்..

மருமகன், மகள், பேத்தி
கூடுதல் சந்தோஷம் - இரண்டு மாத விசாவில் எனது மனைவி..

எல்லாமும் மகிழ்ச்சி என்றாலும்
அன்பின் நண்பர் திரு குமார் அவர்களைச்
சந்திக்க இயலாமற்போனது...

கோடையின் கடும் வெப்பம்...
அதுவுமல்லாமல் நோன்பு காலம்..
வெளியில் செல்வது மிகவும் சிரமம்..

மாலை மயங்கி சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு
வெளியில் செல்லும்போது பார்க்குமிடங்களை
சாதாரண செல்போனை வைத்துக் கொண்டு
எந்த அளவுக்கு படம் பிடித்துக் காட்டுவது?...

இருப்பினும், தங்களுக்காக
சில படங்கள் - இன்றைய பதிவில்...
(யாரையும் விடமாட்டேன்!..)

நான் பயணித்த புஷ்பகம்
நானே தான்..

Cappuccino
சில விமான சேவைகளில் உணவு வழங்குவது இல்லை..
உணவு வேண்டுமெனில் டிக்கெட்டுடன் சேர்த்து முன்னதாக
பதிவு செய்திட வேண்டும்...

முன்பதிவு செய்திருப்பவர்க்கு மட்டுமே உணவு.. 

தேவை எனில் -
பயணத்தின் போது விமானத்திலுள்ள மெனுவின்படி (Only Light Meals)
உணவுப் பொருள்களைப் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம்..

எனக்காக முன்பதிவு செய்திருந்தது
ஒரு Cheese Sandwich + தண்ணீர்..

இதுபோக நான் வாங்கிய Cappuccino தான் மேலே!... 

Expo 2020 
பாலை வெளியில் Expo 2020 க்கு செய்யப்பட்டிருக்கும் வரவேற்பு...

துபாய் Terminal 2 விமான நிலையத்திற்கு
மாலை நேரத்தில் வந்து சேரும் பயணியருக்கும்
அவர்களை அழைத்துப் போக வந்திருப்போர் அனைவருக்கும்
தண்ணீர், பழச்சாறு, பிஸ்கட் மற்றும் அரபு சிற்றுண்டிகளுடன் கூடிய
ரமழான் இஃப்தார் Meals Box வழங்குகின்றார்கள்...

நன்றி - கூகுள்..

தவிரவும் - தினந்தோறும் மாலையில்
நோன்பு முடிக்கும் நேரத்துக்கு சற்று முன்பாக
ஆங்காங்கே சாலை சந்திப்புகள், வணிக வளாகங்கள் - என்று
ஊர் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில்
இஃப்தார் Meals Box வழங்குகின்றார்கள்...

உண்ணக் கொடுத்தவர் தமக்கு அன்பின் நன்றிகள்...

கீழுள்ள படங்கள் அருகிலுள்ள வணிக வளாகத்தில் எடுக்கப்பட்டவை...









சுத்தம் சுகாதாரத்துடன் -
பச்சைப் பசேல் என்று கீரைகள், காய்கனிகள்..

நம்மூர்களில் கூட இது போல கிடைப்பதில்லை...




செயற்கைப் பழச்சாறுகள்
என்றாலும் பதப்படுத்தப்பட்டு அடைக்கப்பட்ட உணவு வகைகள்..
செயற்கைப் பழச்சாறுகள், Dairy Products மற்றும் குளிர்பானங்கள்...

இவற்றை குளிர் சாதனப்பெட்டிகளில் இருந்து
வெளியே எடுத்து விட்டால் ஒன்றும் சொல்வதற்கில்லை!..

செல்லங்களுக்கான உணவு வகைகள்..

பன்னாட்டு உணவு வகைகள்





இன்றைக்கு இதுவே அதிகம்..

மேலும் சில படங்கள் அடுத்த பதிவில் தொடர்கின்றன...
வேறென்ன செய்வது?... 
ரெண்டு நாளைக்கு இப்படியே ஒட்ட வேண்டியது தான்!..

புகைப்படங்களில் காவியம் காட்டும்
நமது நண்பர்களுக்கு மத்தியில் இதெல்லாம் சாதாரணம்...

ஆனாலும் தங்களது மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி..

வாழ்க நலம்
ஃஃஃ

45 கருத்துகள்:

  1. துரை அண்ணா மதிய வணக்கம்.....நான் தான் ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஒ...

    கீதா

    பதிலளிநீக்கு
  2. குவைத் வந்தாச்சா சூப்பர்! அண்ணியும் வந்திருந்தது சந்தோஷமாக இருந்திருக்கும்! அது சரி குவைத்துக்கு அப்போ அண்ணி வரலையா உங்களுடன்...மகள் வீட்டிலோ?

    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றனவே. இதற்கா இம்புட்டுக் குறை!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கணினி ஓப்பன் ஆனதும் உங்க பதிவு இருக்கானு பார்த்தா வந்திருக்கு புதுசு..டக்குனு லேன்ட் ஆகிட்டேன்!!

    விமானத்தின் உள் படம் அழகா இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் கீதா...

      பேத்தி ஆச்சி.. ஆச்சி.. என்று விடாது தொந்தரவு செய்ததால் சற்று உடல் நலக்குறைவு...

      அதனால் என் மனைவி அங்கு வந்து சமாதனப்படுத்தும்படி ஆயிற்று...
      இரண்டு மாத விசா முடிந்து - சென்ற வாரம் ஊருக்குத்திரும்பி விட்டார்கள்..
      இடையில் இங்கே விடுமுறை கிடைத்ததால் நானும் அபுதாபிக்கு சென்றேன்..

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  3. எனக்கு கேப்புசினோ ரொம்பப் பிடிக்கும். சூடாகவும், கூலாகவும். சூடானதை விட கூல் மிகவும் பிடிக்கும்...வீட்டிலேயே செய்வதுண்டு..

    காய்கள் எல்லாம் பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கிறது. ஆமாம் அங்கெல்லாம் ரொம்ப அருமையா சுத்தமாவும் வைச்சுருப்பாங்க.

    செல்லங்களுக்கும் வித வித மாகக் கிடைக்கும்.

    இஃப்தார் சாப்பாடு பாக்ஸ் கொடுப்பது எல்லாம் சிறப்பு இல்லையா. விமான நிலையத்திலும் அந்த நேரத்தில் அதுவும் எல்லோருக்கும் கொடுப்பது சூப்பர்...சாக்கலேட் பழச்சாறு என்று...தெரியாம போச்சே இல்லைனா எபி திங்க கூட்டம் நாங்க எல்லோருமே ஏர்போர்ட் வந்திருப்போமே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. எனக்கும் Cappuccino Cold என்றால் மிகவும் பிடிக்கும்...

      ஆனால் அதனுடைய உள்ளடக்கம்!?... சர்ச்சைக்கிடமானது...

      Meals Box வாங்குவதற்காக Airport வர வேண்டுமா!..

      இந்தமாதிரி Airport ன் வெளியே கொடுப்பது தெரியாது..

      தெரிந்திருந்தால் நானே எல்லாருடைய பேரையும் சொல்லி வாங்கியிருப்பேன்...

      நீக்கு
  4. உங்களின் அனுபவம் அருமை. நாங்கள் பயணிக்கும்போது இவையெல்லாம் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்புடையீர்...
      தங்களுக்குப் பயனுள்ளவை எனில் எனக்கும் மகிழ்ச்சியே நன்றி..

      நீக்கு
  5. இருப்பிடம் சௌகரியமாக வந்து சேர்ந்ததுக்கு மகிழ்ச்சி. மனைவியும் கலந்து கொண்டதுக்கு வாழ்த்துகள். அவங்க குவைத் வந்தால் தங்க முடியாது இல்லையா? அது கொஞ்சம் வருத்தமாய்த் தான் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்று வாரங்கள் .. நிம்மதியாய்ப் போயிற்று...
      எனது மனைவியை குவைத்துக்கு அழைத்து வர இயலாது...

      அதிலெல்லாம் நடைமுறைச்சிக்கல்கள் நிறைய...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி... நன்றி...

      நீக்கு
  6. நாங்க இந்த ஜூன், ஜூலையில் பயணச்சீட்டு விலை அதிகமா இருக்கும் என்பதால் இந்தக் காலங்களில் பயணம் செய்ததே இல்லை. கூட்டமாயும் இருக்கும். எல்லோருக்கும் உணவுப் பெட்டி கொடுப்பது மகிழ்ச்சி என்றாலும் அசைவம் அதில் இருந்தால் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்குக் கஷ்டம்! இதுவும் ஒருவிதமான அன்னதானம் தானே! உலகெங்கும் இப்படியான சில நடைமுறைகள் பொதுவில் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் அக்கா.. தாங்கள் சொல்வது உண்மை...

      இந்த மாதத்தில் சவூதி செல்பவர்களாலும் இங்கு விமான கட்டணங்கள் அதிகமாகி விடுகின்றன...

      Pastry, Hot Bread வகையறாக்கள் சமயத்தில் கோழி, இறைச்சி வகைகளால் நிரப்பப்படுவதுண்டு... சைவ உணவுடன் வருபவர்களுக்கு அது கஷ்டம் தான்..

      இதுவும் ஒருவகையில் அன்னதானம் தான்...

      தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  7. எல்லாப் படங்களும் அருமை. பச்சைப்பசேலெனக் காய்கள் இங்கே காணக்கிடைக்காது தான்! மற்றப் பொருட்களும் அப்படியே! ஆனால் எனக்கு என்னமோ பழங்கள் மற்றும் காய்களின் ருசி இந்தியாவை விட மற்ற நாடுகளில் அவ்வளவு நன்றாய் இருப்பதாய்த் தெரியலை! இந்திய ஆப்பிள் சாப்பிட்டுவிட்டு வெளிநாட்டு ஆப்பிள் சாப்பிட்டால் நிறம் தான் கண்ணைப் பறிக்கிறது! ருசியில் மாறுபாடு இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி...

      காய்களின் சுவையில் மாற்றம் தெரிவதில்லை...

      குறிப்பாக ஆப்பிள்.. அரபு நாடுகளில் விற்பனையாகும் ஆப்பிள்கள் மற்றும் திராட்சை வகைகள் சுவையில் மிகுந்த மாறுபாடு உடையவை..

      பச்சை ஆப்பிள் என்று ஒரு வகை.. அதன் பக்கமே நெருங்க மாட்டேன்..
      வினிகரைக் குடிப்பது போல் இருக்கும்...

      அது பலருக்கும் நெஞ்செரிச்சலை உண்டாக்கும்..
      அந்தப் பச்சை ஆப்பிளுக்கு நம்மூர் ஊடகம் ஒன்று சாமரம் வீசி கும்மி அடித்திருந்தது...

      ஸ்ட்ராபெர்ரி, கிவி இவைகளும் கடும் புளிப்பு...

      தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  8. குடும்பத்தினருடன் அருமையான தருணங்கள். இப்போது பிரிந்து வந்து விட்டது வருத்தம் அளிக்கும். பேத்தியும் தேடுவாள் தாத்தாவை.
    படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் .. தாத்தா ஊருக்குப் போகிறார் என்றதும் மன இறுக்கத்துடன் இருந்தாள் பேத்தி..

      என்ன செய்வது... நாம் வாங்கி வந்த வரம் ...

      வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  9. படங்கள் கண்டேன். மகிழ்ச்சி

    இப்தார் உணவு பாக்ஸ் இஸ்லாமியர்களுக்கு மட்டும்தானே கொடுப்பாங்க?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? பின்னே அண்ணா நன்றி நவின்றிருக்கிறாரே....

      நீக்கு
    2. இஃப்தார் உணவுப் பெட்டி வழங்குவதில் பாகுபாடு பார்ப்பதில்லையே...

      நீக்கு
    3. எனக்கு அப்படி ஒர் அனுபவம் (அல்லது நானே ஒதுங்கிப் போயிருக்கலாம், நான் வெஜ் இருக்கும் என்று..நினைவில்லை)

      நீக்கு
    4. ஸ்ரீராம் - ரமதான் மாதத்தில், அங்குள்ள பள்ளிவாசல்கள் வெளியே மேசையில் நிறைய ஸ்வீட்ஸ், விதவிதமா பழங்கள் வச்சிருப்பாங்க (நாம கோவிலுக்குப் போகும்போது பழம் எடுத்துக்கொண்டு போவதுபோல, ஆனால் அவங்க டேட்ஸ் ஒரு பெட்டி, லட்டு ஒரு டிரே போன்று பிறருக்கு எடுத்துவந்து வெளில உள்ள மேசைல வச்சிடுவாங்க). நாம் யார்னாலும் எடுத்துக்கலாம். ஜெனெராசிட்டி அந்த மாதத்தில் நாம் பார்க்கலாம்.

      நீக்கு
    5. ஆம்.. இந்த ரமழான் மாதம் அவர்களுக்கு புனித மாதமாக சொல்லப்பட்டிருப்பதால் அதை முற்றாக கடைப்பிடிக்கின்றார்கள்...

      இருப்பினும் பெட்ரோல் நிலையங்களில் வேலை செய்பவர்கள் யாரெனத் தெரிந்து கொண்டு உதவுபவர்களும் இருக்கின்றார்கள்...

      நீக்கு
    6. இங்கு இந்தியாவில் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் அவர்கள் உறவுக்குள்ளேயே (பண)உதவிக் கொள்வார்கள்.

      நீக்கு
  10. வணக்கம் ஜி
    தங்களது விடுமுறையை மகிழ்வாக கொண்டியமைக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஜி...
      தங்கள் வாழ்த்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
  11. ஓ... அண்ணியும் வந்திருந்தார்களா? மகிழ்ச்சி. ஒவ்வொரு நாளும் ஒருநாளைக்குறைந்து விட்டதே, ஒரு நாள் குறைந்து விட்டதே என்கிற பதைப்புடனும் கழிந்திருக்கும்.

    எப்படியோ... விடுமுறை சிறப்பாகக்கழிந்தது இல்லையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..

      விடுமுறை சிறப்பாகக் கழிந்தது உண்மையே...

      நீக்கு
  12. அதென்ன, உங்களைத்தவிர யாரையுமே காணோம் விமானத்தில்? குண்டுதேவதைகள், ஒல்லி தேவதைகள்... சகபயணிகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இம்முறை ஜன்னலோர இருக்கை கிடைக்கவில்லை... ஆனாலும் காலியாயிருந்த வேறொரு இருக்கையில் இருந்தே Expo 2020 எடுக்க முடிந்தது.. ஆனாலும் மேற்குப்புற வெயிலால் படம் எடுக்க முடியவில்லை...

      விமானத்தில் எவரையும் படம் எடுக்க முயற்சிப்பதில்லை...

      நீக்கு
    2. ஸ்ரீராம் - டேஞ்சரான விஷயம்னா நீங்க சொல்றது. நானும் விமானத்துல படம் எடுத்துக்கிட்டிருக்கேன் பல சமயங்களில், ஆனால் முதல்ல விமானத்துல ஏறிட்டேன்னா ஏர்ஹோஸ்டஸை எடுக்கச் சொல்லுவேன். அங்கெல்லாம் பெண்களை படம் எடுப்பது (அதாவது அவங்களையும் கவர் பண்ணி எடுப்பது) ஆபத்தானது

      நீக்கு
    3. இப்படித்தான் வணிக வளாகங்களிலும்...

      நெடுக பெண்கள் நடந்து கொண்டிருக்கையில் மிகவும் மனம் பதற்றமாக இருக்கும்...

      நெசவாளிக்குக் குரங்கு எதற்கு!...

      நீக்கு
    4. சும்மா ஜாலிக்குதான் கேட்டேன். அப்படி எடுத்துவிட முடியுமா?

      நீக்கு
  13. கப்புசினோ இதுவரை நான் சுவைத்தே பார்த்திராதது தப்புதானோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னைக்கு இன்னுமா வரவில்லை Cappuccino!?...

      நீக்கு
    2. இல்லாமல் இருக்குமா? நான் முயற்சித்தது இல்லை.

      நீக்கு
  14. படங்கள் யாவும் தெளிவாய், அழகாய் இருக்கின்றன. காய்கறிகள் பசுபசுவென புசுபுசுவென அருமையாய் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஸ்ரீராம்..
      தங்கள் வருகையும் கருத்துரைகளும் மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு
  15. அன்பின் துரை இனிய மாலை வணக்கம்.

    மனைவியும் கொஞ்ச நாட்கள் உங்களுடன் இருந்தார் என்பதே மகிழ்ச்சி தரும் செய்தி.

    படங்கள் ஊரின் செல்வச் செழிப்பைக் காட்டுகின்றன. கோடையின் தாக்கம் கொடுமை.
    பேத்தி,மருமகன்,மகள் என்று உங்கள் மன் பாரம் எல்லாம் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
    இனி பழைய படி இயந்திர வேலை தான். இறைவன் தங்களுக்கு எந்த சங்கடமும் இல்லாமல்
    வாழ்க்கை கொடுக்கட்டும்.
    Corniche ஓரம் நடந்தீர்களா. அதுவும் இரவு நேரம் மட்டுமே முடியும்.
    நோன்பு சமயத்தில் வெளியில் போவது சிரமம்.
    மதிய வேளையில் தண்ணீர் எல்லாம் எதிர்பார்க்க முடியாது.

    தங்களுக்கு என்றும் நலம் கிடைக்க என் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மா... தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மகிழ்ச்சி...

      நோன்பு நேரத்தில் கடும் வெயிலில் பொது வெளியில் நீர் அருந்துவதற்குக் கூட இயலாது எனும்போது வெளியில் எங்கு சுற்றுவது?...

      தங்களது பிரார்த்தனைக்கு நானும் நலம் நாடி வேண்டிக் கொள்கிறேன்...
      மகிழ்ச்சி .. நன்றி...

      நீக்கு
  16. வெல்கம் பக் திரை அண்ணன்... ஊருக்குப் போய் நீங்க வெள்ளையா வந்திட்டீங்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருக.. வருக..
      அதிராவின் அன்புக்கு மகிழ்ச்சி.. நன்றி..

      நீக்கு
  17. படங்கள் அருமை ஐயா...

    மனதிலிருந்து ஊர் நினைவுகள் மீள சில நாட்கள் ஆகும் என்று எண்ணுகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் தனபாலன்..
      தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு
  18. நானும் ரசித்தேன் ..

    இப்போவெல்லாம் துபாய் FM ரேடியோ கில்லி கேட்பதால் ...இந்த இப்தார் விருந்து மற்றும் பல செய்திகளை அறிய முடிகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி..நன்றி..

      நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..