நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, நவம்பர் 25, 2018

ஸ்ரீ ஐயப்ப சரிதம் 01

அமுதத்தில் விளைந்த அமுதம்..


ஐப்பசியும்  கார்த்திகையும்  - அடை மழைக்காலம்...
அடுத்து வரும் மாதமாகிய மார்கழியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்!..

இத்தகைய சூழலில் -

கேரள தேசத்தில் அடர்ந்த வனப் பகுதிக்குள்
ப்ரம்மச்சர்யம் பூண்டு ஸ்ரீ சபரி பீடத்தில்
யோக நிஷ்டையில் வீற்றிருக்கும்
ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியைத் தரிசிக்க வேண்டுமென்று -

கார்த்திகை மாதத்தின் முதல் நாளில் மாலையணிந்து
கடும் விரதம் மேற்கொண்டு - ஒரு மண்டல காலம் அல்லது
தை முதல் நாளன்று மகர ஜோதி தரிசனத்துடன் விரதத்தை 
நிறைவு செய்யும்  பக்தர்கள் லட்சோப லட்சம் என -
நாளுக்கு நாள் பெருகிக் கொண்டிருக்கின்றனர்...

எங்க வீட்டுலேயே குருசாமி...
அவரோட நானும் மூணு வருஷமா ஜோதி பார்த்திருக்கிறேன்!..
- என்று சொல்லும் பாக்கியத்தம்மாள்...

எங்கஅப்பாவுக்கு இந்த வருஷம் பதினெட்டாவது மலை!..
- என்று பெருமை கொள்ளும் சந்திரசேகரன்...

இந்த வருஷம் என் தம்பி கன்னிச்சாமி!..
- என்று சந்தோஷப்படும் கெளரி...

எங்க சுந்தரும் சுதாவும் அவங்க அப்பாவோட
இந்த வருஷம்  மாலை போட்டுக்கிட்டு இருக்காங்க!..
- என்று குதுகலிக்கும் சரண்யா...

இவர்களை - அநேகமாக எல்லா ஊர்களிலும் காணலாம்...

இப்படி கணவரோ, தந்தையோ, சகோதரனோ, 
மகனோ, மகளோ - மலைக்குச் செல்லும் போது - 

அவர்களுடன் தாமும் ஆசார அனுஷ்டானங்களில்
ஒன்றியிருந்து எல்லா நியமங்களையும் குறைவின்றிச்
செய்வதிலும் செய்விப்பதிலும் முன் நிற்பது -

அன்பும் அருளும் ஒருவடிவாகித்
திருவடிவம் எனத் திகழும் பெண்மையே!..

அப்படிப்பட்ட பெருமைக்குரிய
பெண்மையைக் காப்பதற்கு -  வந்தவர் தான் - 
ஸ்ரீ தர்ம சாஸ்தா!.. 

பழந்தமிழில்-
மகா சாத்தன்!.. - என்று போற்றப்படுபவர் இவரே!..

கந்தனின் கருணையைப் பாடும் கந்த புராணத்தில் -
ஸ்ரீ தர்ம சாஸ்தாவின் திரு அவதாரம் சொல்லப்படுகின்றது - 

அப்படிச் சொல்லும் படலம்
மா சாத்தப் படலம் என்று வழங்கப்படுகின்றது...

ஸ்ரீ தர்ம சாஸ்தா எனப்படும் ஸ்ரீ ஹரிஹரன்
பாற்கடல் கடைந்த நிகழ்வுகளுக்குப் பின் தோன்றியவர்...


பாற்கடல் ஏன் கடையப்பட வேண்டும்!..

எக்கணமும் கோபாக்னி கொழுந்து விட்டு
எரிந்து கொண்டிருக்கும் அவருடைய சிரசில்!...

அவர் - துர்வாச மகரிஷி...

அம்பிகை அணிந்திருந்த பூமாலையை ஏந்தியவராக
தேவலோகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்...

ஆனால் - எல்லாவற்றையும் முன்னரே வகுத்து வைத்திருக்கும் காலம்
அன்றைய தினம் தேவேந்திரனை அவருக்கு முன்பாக அழைத்து வந்தது...

நரை, பிணி, மூப்பு - எய்தாமலிருக்க என்ன செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தான் - தேவேந்திரன்...

அந்த நேரத்தில் துர்வாச முனிவரின் சாபமும் சேர்ந்து கொண்டது..

பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்து அருந்த வேண்டும்.. - என,
முடிவு செய்த இந்திரன் அசுரரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு பாற்கடலைக் கலக்கினான்...

அது முதற்கொண்டு
ஆலகால விஷம் தோன்றியது வரைக்கும் பற்பல இன்னல்கள்..

எல்லாவற்றையும் கடந்த நிலையில்
பற்பல சீதனங்களுடன்
பாற்கடலில் தோன்றியது அமுதம்...

அதன் பின் என்னவாயிற்று!?..

அமுதத்திலிருந்து அமுதம் எப்படித் தோன்றியது!?...

இதற்கெல்லாம் விடை காணும்முன்
பாற்கடல் கடையப்பட்ட வைபவம்
கீழ்க்காணும் பதிவுகளில் உள்ளன...

1) துயர் தீர மருந்து!..

2) கடலைக் கடையலாமா!..

3) திரண்டு வந்தது - எது?..

4) கண் கண்ட கயிலாயம்!..

5) மஹா பிரசாதம்!..

இவற்றை ஒருதரம் படித்துக் கொள்ளுங்கள்..


பாற்கடலிலிருந்து கிடைத்த அமுதத்தினை
ஜகன்மோகினியாக நின்ற மஹாவிஷ்ணு -
தேவர்களுக்கு அளித்த - அவ்வேளையில்

அருட்பெருஞ்சோதியாகிய சிவபெருமான் -
அழகே உருவான ஜகன்மோகினியின்
திருக்கரத்தினை வாஞ்சையுடன் பற்றிட -
ஹரிஹர சங்கல்பத்தின்படி நிகழ்ந்ததே
ஸ்ரீ தர்ம சாஸ்தா திருஅவதாரம்!..

ஸ்ரீ தர்ம சாஸ்தாவாகிய ஸ்ரீ ஹரிஹர சுதனே
ஸ்ரீ ஐயனார் எனப்படுபவர்...

ஸ்ரீ பூர்ணகலா, ஸ்ரீ புஷ்கலா எனும் இருவரும்
ஸ்ரீ ஐயனாருடைய தேவியர்...

ஸ்ரீ பூண புஷ்கலா தேவியருடன் ஸ்ரீ ஐயனார்  
கந்த புராணத்தில், கச்சியப்ப சிவாச்சார்யார் -
ஸ்ரீ ஐயனாரின் திருத் தோற்றத்தினைக் காட்டுகின்றார்...

ஸ்ரீ ஐயனார் வழிபாடு தொன்மையானது...

ஸ்ரீ பூர்ணா புஷ்கலா சமேத ஸ்ரீஐயனார் - என, தமிழகத்தின் பற்பல கிராமங்களிலும் திகழும் காவல் தெய்வம் இவரே!..


ஸ்ரீ ஐயனார் வழிபாடு
முறையாக நடைபெறும் கிராமங்களில் 
கள்வர் பயம் என்பதே இருக்காது...

ஸ்ரீ ஐயனாரைப் பக்தியுடன் வழிபடும் பெண்களுக்கு
எவ்விதத்திலும் துன்பம் என்பதே இல்லை!...

பெண்களைக் காத்தருளும் பெருமான் - ஸ்ரீ ஐயனார்... 

இப்படி -
பெண்மையைக் காத்தருளும் பெருமான்
எவ்வண்ணம் தோன்றினார்!?...

ஸ்ரீ பூர்ணகலா ஸ்ரீ புஷ்கலா எனும்
தேவியர் இருவருக்குக் காந்தனாகிய ஸ்ரீ ஹரிஹரசுதன்
பிரம்மச்சர்யம் கொண்ட ஐயப்பன் என்று எப்படி ஆனார்!?..

அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம்!..

ஸ்ரீ ஹரிஹர புத்ர 
ஸ்வாமியே சரணம்!.. சரணம்!..
ஃஃஃ 

14 கருத்துகள்:

  1. அருமையான தொடக்கம். சுட்டியில் இருக்கும் மற்றப் பதிவுகளையும் படிக்கணும். மத்தியானமா வந்து படிக்கிறேன். தொடரக் காத்திருக்கேன்.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஜி
    அழகிய விளக்கங்கள் சுட்டிகளுக்கு பிறகு செல்கிறேன் நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நல்லதொரு விளக்கம் + தொடக்கம்...

    அய்யனார் பற்றிய தங்களின் பதிவுகளை வாசிக்க காத்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. நல்லதொரு தொடக்கம். மற்ற பதிவுகளைப் படிக்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. எதைத்தான் ஏற்பது ஒரு கதையா இருகதையா
    அம்மம்மா

    பதிலளிநீக்கு
  6. நல்ல தொடக்கம். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. ஐயனார் தான் எங்கள் குலதெய்வம். சாஸ்தா என்று அழைக்கப்படுகிறார் எங்கள் ஊரில். எங்கள் அப்பாவுக்கும் குலதெய்வம் சாஸ்தாதான் தனித்து இருப்பார்.

    என் கணவர் வீட்டுக்கும் சாஸ்தாதான். பூர்ணா, புஷ்கலாவுடன் இருப்பார் .

    தொடக்கம் மிக அருமை.
    பதிவுகளை தொடர்ந்து படிக்க ஆவல்.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோமதிக்கா இந்தப் பதிவை வாசித்ததும் உங்கள் பதிவு மற்றும் நீங்கள் சொன்ன ஐயனார் உங்கள் குல தெய்வம் எல்லாம் நினைவுக்கு வந்தது.

      கீதா

      நீக்கு
  8. சிறப்பாக தொடங்கியிருக்கிறீர்கள். தொடரக் காத்திருக்கிறேன். ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

    பதிலளிநீக்கு
  9. ஓ நவம்பரிலோ சபரிமலைக்கு மாலை போடுவார்கள். என்னமோ இப்போதான் இந்த ஜனவரியில் மாலையைக் கழட்ட முன் தரிசனம் பெற வேண்டும் விசா தருகிறார்கள் இல்லை எனப் புலம்பியதுபோல இருக்கு தனிமரம் நேசன்.. அதுக்குள் அடுத்த விரதம் வந்துவிட்டதோ..

    உலகம் சுத்தும் வேகம் பார்த்து நேக்கு டலை டுத்துது துரை அண்ணன்..!!.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதிரா எனக்கும் நினைவுக்கு வருது...நேசன் புலம்பியய்து...அப்புறம் எப்படியோ கிடைத்து வந்துவிட்டார்...ஆனால் தாமதமாகிவிட்டது என்று நியனிவு...ஜனுவரியும் தாண்டிவிட்டிருந்தது என்று நினைவு...

      கீதா

      நீக்கு
  10. உதெல்லாம் சரி, ஆனா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈ பாக்கியத்தம்மாள், கெளரி, சரண்யா.. இவிங்களெல்லாம் ஆரூஊஊஊ?:).

    பதிலளிநீக்கு
  11. கதை வித்தியாசமான தொடக்கம்...அதுவும் ஸ்ரீபுஷ்கலா, ஸ்ரீபூர்ணகலா எல்லாமே புதியவை.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..