நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 17, 2018

பகவான் சரணம்

இன்று கார்த்திகை முதல் நாள்..

கனவிலும் நினைவிலும்

ஸ்ரீ ஐயப்ப ஸ்வாமியையே
தியானம் செய்து கொண்டிருக்கும்
நன்னெஞ்சங்களுக்கொரு பொன்னாள்!..

அந்த நன்னெஞ்சங்களுடன் சேர்ந்து

நாமும் சொல்லிடுவோம் -

ஸ்வாமியே சரணம் ஐயப்பா...

ஸ்வாமியே சரணம் ஐயப்பா!...


பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா..
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா..


பகவான் சரணம்.. பகவதி சரணம்..
தேவன் பாதம்.. தேவி பாதம்..
பகவானே... பகவதியே...
தேவனே.. தேவியே...

பகவான் சரணம் பகவதி சரணம்
தேவன் பாதம்.. தேவி பாதம்...
பகவானே.. பகவதியே...
தேவனே.. தேவியே...

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா..
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...அகமும் குளிரவே அழைத்திடுவோமே..
சரணம் சரணம் ஐயப்பா..
அகமும் குளிரவே அழைத்திடுவோமே..
சரணம் சரணம் ஐயப்பா..

பகலும் இரவும் உன் நாமமே
ஸ்மரணம் ஸ்மரணம் ஐயப்பா..

கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா..
கரிமலை வாசா பாபவினாசா
சரணம் சரணம் ஐயப்பா..

கருத்தினில் வருவாய்.
கருணையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா..

கருத்தினில் வருவாய்.
கருணையைப் பொழிவாய்
சரணம் சரணம் ஐயப்பா..


மஹிஷி சம்ஹாரா மதகஜ‌ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா..

மஹிஷி சம்ஹாரா மதகஜ‌ வாகனா
சரணம் சரணம் ஐயப்பா..

சுகுண விலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா...
சுகுண விலாசா சுந்தர ரூபா
சரணம் சரணம் ஐயப்பா...


ஆறுவாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காண‌ வந்தோம்..

ஐயப்பா... ஐயப்பா... ஐயப்பா...

ஆறுவாரமே நோன்பிருந்தோம்
பேரழகா உன்னைக் காண‌ வந்தோம்..

பால் அபிஷேகம் உனக்கப்பா
இந்த பாலனைக் கடைக்கண் பாரப்பா..
பால் அபிஷேகம் உனக்கப்பா
இந்த பாலனைக் கடைக்கண் பாரப்பா..முத்திரைத் தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எனக்கப்பா...
முத்திரைத் தேங்காய் உனக்கப்பா
தித்திக்கும் நாமம் எனக்கப்பா...

கற்பூர தீபம் உனக்கப்பா உந்தன் 
பொற்பதமலர்கள் எனக்கப்பா...
கற்பூர தீபம் உனக்கப்பா உந்தன்
பொற்பதமலர்கள் எனக்கப்பா...

தேவன் பாதம் தேவி பாதம்
சேவடி சரணம் ஐயப்பா...
நாவினில் தருவாய் கீதமப்பா
தேவை உன் திருப்பாதமப்பா..

நெய்யபிஷேகம் உனக்கப்பா..
உன் திவ்ய தரிசனம் எனக்கப்பா
தையினில் வருவோம் ஐயப்பா
அருள் செய்யப்பா மனம் வையப்பா..


பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...

பகவான் சரணம் பகவதி சரணம்..
தேவன் பாதம் தேவி பாதம்..
பகவானே... பகவதியே..
தேவனே.. தேவியே...

பகவான் சரணம் பகவதி சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...
பகவதி சரணம் பகவான் சரணம்
சரணம் சரணம் ஐயப்பா...

சரணம் சரணம் ஐயப்பா...
ஸ்வாமி சரணம் ஐயப்பா..


சரணம் சரணம் ஐயப்பா...
ஸ்வாமி சரணம் ஐயப்பா..

சரணம் சரணம் ஐயப்பா...
ஸ்வாமி சரணம் ஐயப்பா..
***
கலைமாமணி ஸ்ரீ K வீரமணி அவர்கள் வழங்கிய
காலத்தை வென்ற பாடல்..ஓம்
ஸ்வாமியே சரணம் ஐயப்பா!..
ஃஃஃ

10 கருத்துகள்:

 1. பாடலும் பகிர்வும் மிக மிக அருமை.
  ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா!
  படங்கள் தேர்வு அருமை.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 2. இன்னைக்குப் பையர் அங்கே அம்பேரிக்காவில் ஹூஸ்டனில் மாலை போட்டுக்கப் போறார். அதையே நினைத்துக் கொண்டிருக்கையில் உங்கள் பதிவு. நல்லபடியாக அவரின் விரதம் முடிந்து இருமுடிகட்டுச் சென்று விட்டு வரவேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. இப்போது சபரிமலையில் நடக்கும் விஷயங்களுக்கான தீர்வாகவே ஐயப்பன் இங்கே வந்த "கஜா"வை (அண்ணனை) அங்கே தனக்குத் துணைக்கு அழைத்துவிட்டார் என முகநூல் நண்பர்கள் பலரின் ஏகோபித்த கருத்து!

  பதிலளிநீக்கு
 4. காலையிலேயே கண்டேன் ஜி ஆனால் படிக்கவில்லை குளித்து விட்டு இப்போது படித்தேன். சுவாமியே சரணம் ஐயப்பா

  பதிலளிநீக்கு
 5. காண்-ஒலி கேட்டு மகிழ்ந்தேன் ஜி

  பதிலளிநீக்கு
 6. ஸ்வாமியே சரணம் ஐயப்பா... எங்கள் குலதெய்வம் பாலசாஸ்தா.

  கே வீரமணியின் பிரபலமான பாடல் பள்ளிக் கட்டு சபரிமலைக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை ஸ்வாமியே ஐயப்பா ஐயப்பா ஸ்வாமியே..

  பதிலளிநீக்கு
 7. இரு முறை சபரிமலை சென்றுவந்துள்ளேன். மறக்க முடியாத நினைவுகள். நன்னாளில் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. சுவாமியே சரணம் ஐயப்பா!!

  துளசி: நான் முன்பு ஒரு சில முறை போயிருக்கிறேன். அப்புறம் போகவில்லை.

  கீதா: எனக்கும் ஸ்ரீராம் சொல்லியிருந்தது போல் பள்ளிக் கட்டு சபரிமலைக்கு பாடல் நினைவுக்கு வந்தது அண்ணா...

  பதிலளிநீக்கு
 9. அது என்னவோ தெரிய வில்லை கீதா பின்னூட்டம் எழுத விரும்புவதை யாராவதுமுன்பே சொல்லி விடுகிறார்கள்

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..