நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, நவம்பர் 02, 2018

கலை விருந்து 1

சென்ற விடுமுறையின் போது -
தஞ்சை பெரிய கோயிலில்
இளங்காலைப் பொழுது ஒன்றில் எடுக்கப்பட்ட படங்கள்...

பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டவற்றுள் 
நூற்றுக்கு மேலாக இருந்த Drive தொலைந்து போனது...

அதனுள் - அபுதாபி மற்றும் துபாயில் எடுக்கப்பட்ட படங்களும் இருந்தன...

வெகு நாட்களாகவே -
இந்தப் படங்களைப் பதிவில் வழங்குதற்கு முயன்றேன்...

இப்போது நேரம் கூடி வந்ததா!.. - எனில்
ஒன்றும் சொல்வதற்கில்லை...

இவை ஒரு வரிசைக் கிரமமாக இருக்காது..
படங்களை ஒழுங்குபடுத்தும்போது சில அழிந்து விட்டன....

இன்னும் பல எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கின்றன...

அவற்றைக் கண்டுபிடித்து 
அவ்வப்போது வழங்குகின்றேன்...

இன்றைய பதிவிலுள்ள -
இந்தப் படங்கள் தங்களை மகிழ்விக்கும் என நம்புகின்றேன்...

மேற்குத் திருச்சுற்றிலிருந்து
எடுக்கப்பட்ட படம்.. 
அம்மன் சந்நிதியின் அருகிருந்து எடுக்கப்பட்டது.. 


கொடிமரத்தைத் தாங்குவதாக
யானைகளும் பூத கணங்களும்.. 
ஸ்ரீ வராஹி அம்மன் சந்நிதிக்கு அருகிலிருந்து எடுக்கப்பட்ட படம்.. 

கருவறையின் தெற்கு வாசல்.. 
பார்வதி திருக்கல்யாணம்.. 
திருமணத்திற்கு வந்திருக்கும் விருந்தினர்கள்.. 
சிற்பத் தொகுப்பின் கீழ்வரிசையில் முதலாவதாக போதி மர நிழலில் கௌதம புத்தர்..
தமிழக அரசின் தகரக் கொட்டகை நிழலில்
தரணியை ஆண்ட மன்னவன்...
 
வருடந்தோறும்
சதய விழா நடத்தி இறுமாந்து போகின்றது - தமிழக அரசு...

ஆனாலும் -
1970 களில் அன்றைய அரசு அமைத்த தகரக் கொட்டகையிலேயே
இன்னும் நின்று கொண்டிருக்கிறது மாமன்னனின் திருவுருவச் சிலை!...

ராஜராஜ சோழனின் மறுபிறப்பு என்பதாகவெல்லாம்
சொல்லிக் கொண்டார்கள் - ஒவ்வொரு சமயம்!.. 

மாமன்னனின் சிலையை
திருக்கோயிலின் உள்ளே
வைக்கத் தான் வகையற்றுப் போனது!..

ஆனால் -
மாமன்னனின் திருவுருவத்தை 
நல்லதொரு மண்டபத்தில் நிறுத்துதற்கும்
விதியற்றுப் போனதுதான் விநோதம்!...
***

மேலும் பல படங்களுடன் 
வேறொரு பதிவில் சந்திப்போம்!.. 
***

வாழ்க நலம்..  
ஃஃஃ 

17 கருத்துகள்:

 1. ஜி ஸ்ரீ வராஹி அம்மன் உத்திரகோசமங்கை கோவிலா ? (பெரிய கோவில் அல்ல)

  முடிவில் சொன்னீர்கள் பொட்டில் அறைந்ததுபோல... அருமை.

  படங்கள் ரசிக்க வைத்தன...

  பதிலளிநீக்கு
 2. அருமையான படங்கள். நன்கு ரசித்தேன். புத்தர் சிற்பத்தைப் பார்த்ததும் நம்ம தமிழர்கள் இது பௌத்த கோயில் எனச் சொல்லிடப் போறாங்களேனு பயமாப் போச்சு! :)) தஞ்சைக்கோயில் வாராஹி பலருக்கும் குலதெய்வமாக இருந்து ரக்ஷிக்கிறாள்.

  பதிலளிநீக்கு
 3. முடிவில் சொன்னீர்களே, தகரக் கொட்டகையில் இருக்கும் ராஜராஜ சோழன் பத்தி! அது தான் நடக்கும். இந்தச் சிலை வைக்கையில் ஆர்ப்பாட்டமாக வைத்திருப்பார்கள்! பின்னர் வழக்கம் போல் மறந்திருப்பார்கள். என்றாலும் சிலை இருக்கிறதே என்றாவது சந்தோஷப்படுவோம். கோயில் அறங்காவலர்களாவது முயன்று மண்டபம் கட்டி இருக்கலாம். :(

  பதிலளிநீக்கு
 4. படங்கள் எல்லாம் ரொம்பவே அழகாக இருக்கின்றன. அதுவும் சிற்பங்கள் உள்ள படங்கள் ரொம்ப அழகு..

  கீதா

  பதிலளிநீக்கு
 5. முடிவில் நீங்க சொன்னது உண்மை உண்மை...கீதாக்கா சொன்னதையும் வழி மொழிகிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 6. ஆன்மீகத்துடன் கலை ரசனை இருக்கும்போது உங்களை விஞ்ச யாரால் முடியும்?

  பதிலளிநீக்கு
 7. துரை செல்வராஜு சார்... அரசியல்வாதிகளின் ஆர்ப்பாட்டத்தை விடுங்கள்... அவர்கள் பட்டுவேட்டி கட்டி சதய விழாவில் பங்கெடுத்துக்கொள்வதோடு வேலை முடிந்தது.

  ஆனால், தொல்பொருள் துறை, இருக்கும் இடத்தில் எந்த மாறுதலும் செய்ய முடியாது. புதுக் கட்டிடம் கட்டமுடியாது. அதனால்தான் பெர்மனென்ட் ஸ்டிரக்சர் பண்ணறதல்ல. இப்படி இருக்கறது நல்லதுதான்.

  இப்போவே ராஜராஜசோழன், எங்க ஜாதி என்று பலர் சண்டை பிடித்துக்கொண்டிருக்கின்றனர். (வன்னியர், உடையார், முத்தரையர் போன்று). அப்போ உள்ள கட்டிடம் கட்ட விட்டா, அடுத்தது பிறந்தநாள் மாலை போடறது, அங்க கல்வெட்டு வைக்கறது என்று எல்லாம் ஆரம்பமாயிடும்.

  இப்போ சொல்லுங்க.. இப்ப இருக்கறது பெட்டரா இல்லை மாற்றங்கள் வேணுமா? கட்டடம் கட்டறதுனால ராஜராஜனுக்கு பெருமை கூடப்போறதில்லை. ஒரு மனிதனாக அவன், ஆயிரம் வருடங்களுக்குமேல் அவனைப்பற்றி பெருமையா பேசும் நிலையை உண்டாக்கியிருக்கான். அது போதாதா?

  படங்கள் நன்றாக இருந்தன.

  பதிலளிநீக்கு
 8. அனைத்து படங்களும் நன்றாக இருக்கிறது.
  தஞ்சை கோவில் படங்கள் எவ்வளவு எடுத்தாலும் பார்த்துக் கொண்டு இருக்கலாம் அவ்வளவு அருமையான கலைப்படைப்பு.

  பதிலளிநீக்கு
 9. படங்கள் அழகு. மாமன்னன் ராசராசன் சிலை நிறுவப்பட்டபோது தஞ்சையில் இருந்தேன்!

  பதிலளிநீக்கு
 10. தஞ்சைக் கோவிலுக்கு வரும் பிரபலங்களிடம் சில நம்பிக்கைகள் இருந்தன. ஆட்சியாளர்கள் உள்ளே வந்தால் ஆட்சி பறிபோய் விடுமென்ற நம்பிக்கைஇருந்தது. எம் ஜி ஆர் உள்ளே வந்த பொது இங்குதான் மயக்கமாகி அவர் உடல்நிலை சீர்கெட ஆரம்பித்தது என்று படித்த நினைவு.

  பதிலளிநீக்கு
 11. ராசராசன் தகரக்கொட்டகையிலேயே இருப்பதற்கும் பகுத்தறிவுக் காரண நம்பிக்கைகள் இருக்கலாம்!

  பதிலளிநீக்கு
 12. வித்தியாச கோணத்தில் அழகு படங்கள் ....

  பதிலளிநீக்கு
 13. அழகான படங்கள். எனது மே மாதப் பயணத்தில் கோவிலுக்குச் சென்று சில படங்கள் எடுத்து வந்தேன்.

  மன்னரின் சிலை - வருத்தம் தான் மிஞ்சுகிறது.

  பதிலளிநீக்கு
 14. இந்த நந்தியைத்தொட்டுப் பார்க்க அனுமதி உண்டோ துரை அண்ணன்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் அதிரா...

   அந்த நந்தியைச் சுற்றி கம்பி அடைப்பு உள்ளது..

   கம்பி அடைப்பு 60/70 ஆண்டுகளாக இருக்கிறது....

   தங்களது வருகைக்கு மகிழ்ச்சி நன்றி....

   நீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..