நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

செவ்வாய், நவம்பர் 06, 2018

வாழ்க தீபாவளி

அனைவருக்கும் 
அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்...

தர்மத்தை நிலைநாட்டுதற்கு
யுகங்கள் தோறும் தோன்றுகின்ற பரம்பொருளே

நின் திருவடிகள் போற்றி.. போற்றி!..
நீதி வென்ற நாள்!..
அநீதி வீழ்ந்த நாள்!..

அன்பின் ஒளி 
அகிலமெலாம் பரவிய நாள்...
என்றெல்லாம் பலவாறு சிறப்பிக்கப்படும் நாள் - தீபாவளி!..


உண்மையில்

அன்பின் ஒளி 
அகிலமெலாம் பரவியதற்குக் காரணமே - பெண் தான்!..

அவள் தான் சத்யபாமா!..

மரணமே இல்லாத வாழ்வு வேண்டும்!...

அப்படியெல்லாம் எதுவும் கிடையாது!...

எனில், என் தாயின் கரத்தினால் நான் வீழ்தல் வேண்டும்!...

அப்படியே ஆகுக!...

இப்படி வரம் வாங்கிக் கொண்டவன் 
நரகாசுரனாகி மண்ணுயிர்களுக்குச் செய்த கொடுமைகள்
முடிவுற்ற நாள் இன்று...

நரகாசுரனை முன்னொரு காலத்தில் பெற்றவள் - பூமாதேவி...

அவளே துவாபர யுகத்தில் 
ஸ்ரீ க்ருஷ்ணனின் பத்தினி சத்யபாமா என்றாகி
அசுரனை அழித்தருளினாள்!...

நரகாசுரன் அழிந்தான்..
நாடெல்லாம் நலம் பெற்றது!...
என்பது முதற்கொண்டு - 
தீபாவளி குறித்து பற்பல கதைகள்...

மகிழ்ச்சியான தீபாவளிக்கு அருள் புரிய வேணும் ஸ்வாமி!.. 
சைவ மரபினுள் சிவபெருமானுக்கு உரிய எட்டு விரதங்களுள் ஒன்று...
தீபாவளி எனில் தீபங்களை ஏற்றி வைத்து வணங்குதல்.. 
தீப + ஆவளி .. ஆவளி என்றால் வரிசை.. தீபங்களின் வரிசை...

- என்று, ஸ்ரீ திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் குறிப்பிடுவார்...


சொன்னாக் கேக்கணும்... க்ருஷ்ணா!..
இப்போ வெடி வெடிச்சா போலீஸ் புடிச்சிக்கிட்டுப் போய்டும்!...
சில காலமாகவே மக்களின் மகிழ்ச்சிக்காகவே 
திருநாள் விழாக்கள் என்பது முற்றிலுமாக 
மறக்கடிக்கப்பட்டு விட்டது...

தீபாவளியின் உட்பொருள் வேறு...

ஆனால்,
எல்லா வணிகங்களிலும் - ஏமாற்று - பகல்கொள்ளை
என்பதே லட்சியமாயிற்று...

நம் நாட்டில் மட்டும் தான் என்றில்லை...
இந்த நாட்டில் கூட இப்படித்தான் நிகழ்கின்றது...


எப்படியோ 
குற்றங்குறைகளைப் பொறுத்துக் கொண்டு
சந்தோஷமாக தீபாவளியைக் கொண்டாடுவோம்!..

இல்லார்க்கும் எளியார்க்கும் இயன்றவரை ஈந்து
புதியதொரு மகிழ்ச்சிக்கு வித்திடுவோம்!...

ஆனந்தத் தீபாவளி  
அனைவருக்கும் 
அன்பின் இனிய 
தீபாவளி நல்வாழ்த்துகள்...

வாழ்க நலம்..
ஃஃஃ

14 கருத்துகள்:

 1. சிறப்பான தகவல்கள்....

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட் ..
   தங்களுக்கு நல்வரவு...

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
   அன்பின் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

   நீக்கு
 2. தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்புடையீர்..

   இந்நன்னாளில்
   இருளகன்று எங்கும் ஒளி பரவட்டும்..

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
   அன்பின் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

   நீக்கு
 3. எது எப்படி ஆனாலும்பண்டிகை விழாக்கள் நாம் மகிழ்ச்சியுடன் இருக்கத்தானே மகிழ்வுடனிருப்போம் வாழ்த்துகள் சார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஐயா...

   தங்களது வாழ்த்துரைக்கு நன்றி..

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
   அன்பின் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

   நீக்கு
 4. அன்பின் ஜி தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் வர்ஷிதாவுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்...

  தீபஆவளி பின்புலம் அறிந்தேன் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி...

   அன்புடன் வர்ஷிதாவுக்கும் வாழ்த்துரைத்ததற்கு நன்றி..

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
   தலை தீபாவளி கொண்டாடும் மகளுக்கும் மருமகனுக்கும்
   அன்பின் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

   நீக்கு
 5. தீபாவளி வாழ்த்துகள் எங்கள் துரை செல்வராஜு சார் மற்றும் குடும்பத்தார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த. அவர்களுக்கு...

   தங்களது வருகையும் வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
   அன்பின் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

   நீக்கு
 6. தீபாவளி சிறப்பு பதிவு படங்களுடன் மிக அருமை.
  உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தினர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களன்பின் வருகையும் வாழ்த்துகளும் மகிழ்ச்சி..

   தங்கள் குடும்பத்தினருக்கும்
   தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

   நீக்கு
 7. பண்டிகைகள் கொண்டாடப்படத்தான். சந்தோஷங்கள் பரவட்டும். ராமனும் சீதையும் அயோத்தி திரும்பி அரசாளத் தொடங்கிய நாளே தீபாவளி என்கிற கதையும் உண்டு.

  அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. தீபாவளி பற்றி பல கதைகள் உண்டுதான். மனிதன் சந்தோஷமாக இருக்கத்தான் கொண்டாட்டங்கள். எல்லோரும் மகிழ்வுடன் நலமுடன் வாழட்டும்.

  துரை அண்ணா தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் தீபஒளி வாழ்த்துகள்!

  கீதா

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..