நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

சனி, நவம்பர் 24, 2018

தெய்வ தரிசனம்

வெகு சிறப்பாக தீபத்திருநாள் நிகழ்ந்துள்ளது...

இவ்வேளையில் -
வலைத் தளங்கள் பலவற்றிலும்
கரை கடந்த புயலால் துயருற்றிருக்கும்
மக்களுக்காக பிரார்த்தனைகள் நிகழ்ந்துள்ளன..

நமது நட்புறவில்
அன்புக்குரிய ஸ்ரீமதி கீதாசாம்பசிவம் அவர்களும்
அன்புக்குரிய ஸ்ரீமதி கோமதி அரசு  அவர்களும்
குறிப்பிடத்தக்கவர்கள்..

அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்...

ஸ்ரீ அருணாசலேஸ்வரர் 
இன்றைய பதிவில் திருக்கார்த்திகைத் திருநாளின்
திருக்காட்சிகள் சிலவற்றை பதிவு செய்கின்றேன்..

வழக்கம் போல படங்களை வழங்கிய -
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
மனமார்ந்த நன்றி...

ஸ்ரீ அண்ணாமலையார் 
ஸ்ரீ உண்ணாமுலையாள் 
ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி  
பரணி தீபம்
ஸ்ரீ உமையொருபாகன் - திருஅண்ணாமலை 

திரு அண்ணாமலையின் உச்சியில் ஏற்றப்பட்ட
மகா தீப தரிசனம்..


பைம்பொனே பவளக் குன்றே பரமனே பால்வெண் ணீற்றாய்
செம்பொனே மலர்செய் பாதா சீர்தரு மணியே மிக்க
அம்பொனே கொழித்து வீழும் அணியணா மலையுளானே
என்பொனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவிலேனே.. (4/63) 
- : திருநாவுக்கரசர் :- 

ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்
திருச்செங்கோடு  
ஸ்ரீ அமுதீசருடன் அபிராமவல்லி
திருக்கடவூர்
ஸ்ரீ அபிராமவல்லி
திருக்கடவூர்
ஸ்ரீ வடிவேல்குமரன் - திருக்கடவூர்
பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தற்குப் பத்தராகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளேவைத்து
விரும்பிநல் விளக்கு தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே.. (4/31)
-: திருநாவுக்கரசர் :- 

ஸ்ரீ அக்னீஸ்வரர்
கஞ்சனூர் - தஞ்சை (மா) 
ஸ்ரீ கற்பகாம்பிகை
கஞ்சனூர் - தஞ்சை (மா)
 
வானவனை வலிவலமும் மறைக்காட் டானை
மதிசூடும் பெருமானை மறையோன் தன்னை
ஏனவனை இமவான்தன் பேதையோடும்
இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்
தேனவனைத் தித்திக்கும் பெருமான் தன்னைகத்
தீதிலா மறையவனைத் தேவர் போற்றுங்
கானவனைக் கஞ்சனூர் ஆண்ட கோவைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு உய்ந்தேனே.. (6/90)
-: திருநாவுக்கரசர் :- 

ஸ்ரீ சோமசுந்தரருடன் அங்கயற்கண்ணி
மாமதுரை
ஸ்ரீ காந்திமதி அம்பிகையுடன்
ஸ்ரீ நெல்லையப்பர்..
ஸ்ரீ காந்திமதியாள்
நெல்லை
திருப்பரங்குன்றம்  
திருப்பரங்குன்றம் 
ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி
திருப்பரங்குன்றம்
 
ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி
சுவாமிமலை
ஸ்ரீ ஐயாறப்பர் - அறம்வளர்த்தநாயகி
திருஐயாறு 
ஸ்ரீ செல்வமுத்துக்குமரன்
வைத்தீஸ்வரன்கோயில்  
பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க்கென்றும்
வாராத செல்வம் வருவிப்பானை
மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே.. (6/54)
-: திருநாவுக்கரசர் :- 

ஸ்ரீ ஐயப்பன் சந்நிதி - சபரிமலை 
கங்கைக் கரையில் கார்த்திகை பூர்ணிமா 
கீழக்காணும் காணொளி
திரு. பாலா Vk.
அவர்களுக்கு நன்றி..


மறையினானொடு மாலவன் காண்கிலா
நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்
உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழ
பறையும் நாம்செய்த பாவங்கள் ஆனவே.. (5/5)
-: திருநாவுக்கரசர் :- 
***

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
அண்ணாமலையானுக்கு அரோகரா 
ஃஃஃ

10 கருத்துகள்:

 1. காணொளியும், அழகிய படங்களும் தரிசித்தேன் ஜி வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் தளம் மூலம் அனைத்து கோவில்களிலும் திருக்கார்த்திகை தீப விழா கண்டு மகிழ்ந்தேன்.
  காணொளியும் அருமை.

  கஜா புயலால் விவசாயிகள் பாதிக்கபட்டதை ஒருவர் பாடல் பாடி இருக்கிறார், இன்று செய்தி 7 ல் வைத்தார்கள் மனம் கனத்து போகிறது.
  நீலகண்டன் என்பவர் எழுதி செந்தில் தாஸ் பாடிய என்னபுள்ளே செய்யபோறே ? நம்மபுள்ளே தென்னம்பிள்ளை போனதை பற்றி கலங்க வைக்கும் பாடல் .
  இறைவன் அவர்களுக்கு தாங்கும் மனதை தர வேண்டும், மீண்டு வர பலத்தை தர வேண்டும், வேறு என்ன சொல்வது!

  பதிலளிநீக்கு
 3. செந்தில் தாஸ் அவரே இசை அமைத்து பாடி இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 4. காணொளி இன்னிக்கு முதல் முயற்சியிலேயே திறந்துடுச்சு! இணையம் ஒழுங்கா இருக்கு போல! படங்கள் அனைத்தும் அருமை. மதுரை மீனாக்ஷியுடன் வீற்றிருக்கும் சோமாஸ்கந்தர் மனதையும் கண்களையும் கவர்ந்தார். நேற்றுத் திருவண்ணாமலை தீப தரிசனம் கண்டோம். அர்த்தநாரீஸ்வரரைப் பொதிகையில் காட்டும்போது தொழில் நுட்பப் பிரச்னை! சரினு ஜெயாக்கு மாத்தினா அங்கே அற்புத தரிசனம். அது ஏன் பொதிகையில் மட்டும் இம்மாதிரி நேரடி நிகழ்ச்சிகளைச் சொதப்பறாங்கனு தெரியலை!

  பதிலளிநீக்கு
 5. திருவண்ணாமலை தீபத்திருவிழா ஜெயா மற்றும்பொதிகையில் நேரடிஒளிபரப்பில் கண்டோம்

  பதிலளிநீக்கு
 6. உழவாரம் சிவனடியார் திருக் கூட்டத்தார்களுக்கும், உங்களுக்கும் நன்றிகள். அழகிய படங்கள். தரிசனம் கிடைத்தது.

  பதிலளிநீக்கு
 7. மிக அழகிய காணொளி. ஆங்காங்கே வாண வேடிக்கைகளுடன் எல்லா இடங்களும் கவர் செய்து மிக அழகாக எடுக்கப்பட்டுள்ளது

  பதிலளிநீக்கு
 8. படங்கள் அனைத்துமே சிறப்பு.

  தீபத்திருவிழாவினை உங்கள் மூலம் காண வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..