நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, அக்டோபர் 28, 2018

அழகு.. அழகு 4

கடந்த மூன்று நாட்களாகவே
குடியிருப்பில் தண்ணீர் பிரச்னை...

தண்ணீர்த் தொட்டிகளில் ஒன்று உடைந்து போனது...

தண்ணீர் பற்றாக்குறை... என்றாலும் -

வியாழன் மாலையிலிருந்து சனிக்கிழமை இரவு வரை
இங்கே குடியிருப்பில் திருவிழாக் கொண்டாட்டம் தான்...

தண்ணீர் இல்லை என்றாலும் பரவாயில்லை..
நாங்க கேட்கமாட்டோமே!.. - என்று ஒரு கோஷ்டி...

ஆனால், நமக்கு எல்லாம் சம்பிரதாயம் தான்!..

அதனால் -
குளிப்பதும் அதன்பின் சமைப்பதும் தாமதமாகிப் போனது...

கணினியைத் திறந்தால் -
ஏதும் பதிவிட முடியாதபடிக்கு - இணையத்தின் வேகம் ... ஆகா!..

இருந்தாலும் -
கதை ஒன்றைத் தட்டச்சு அனுப்பியாயிற்று - எபிக்கு!..

இன்று காலையில் அவசியமான வேலை ஒன்று...
சிட்டிக்குச் சென்றாக வேண்டும்!..

ஆனாலும் பாருங்கள் -
நேற்றிரவு ஒருபொழுது வீசிய காற்றில் எல்லாம் குளிர்ந்து போயின...

தண்ணீரைச் சுட வைப்பதற்கு ஹீட்டரைப் போட்டால்
அது எனக்கென்ன?... - என்றிருக்கின்றது...

சரி.. அதற்குள் ஏதாவது பதிவைப் போட்டு விடுவோம் என்று தான் -
இதோ இந்தப் பதிவு!...

அந்த ஊர்லயும் மழை பெய்யுதாண்டி.. தங்கம்.. 
ஒரு கப் காஃபி கிடைச்சா நல்லாயிருக்கும்!... 
நம்மை ஏம்மா வாத்து....ங்கிறாங்க?...
நாம வரிசையா போறோமில்லையா.. அதனாலத் தான்!..
 
ராஜா...ன்னு இருந்தாலும் ஸ்ட்ரா போட்டுக் குடிக்க முடியுமா!...
ஏன்.. அந்த நரம்பைப் போட்டு தேய்ச்சிக்கிட்டு!.. 
ஏதோ... இது கொஞ்சம் பரவாயில்லை!...
காக்காய் எல்லாம்
இப்போ பாட்டுப் பாடறதே இல்லை!... 
மறுபடியும் உப்புமா....வா!...
உள்ளே ஒன்னும் இல்லே... ன்னுட்டு வர்றேன்..
இவன் இப்ப தான் ஆராய்ச்சி பண்ணப் போறான்!... 
படங்கள் வழக்கம் போல
அங்கும் இங்குமாக 
Fb ல் கிடைத்தவை..

எங்கும் அழகு 
எதிலும் அழகு 

வாழ்க நலம்..
ஃஃஃ

16 கருத்துகள்:

  1. எல்லாம் மிக அழகு. அந்தப் பூஸார் அதிரடி தானே! அதான் தினம் தினம் உப்புமாவானு கேட்குதோ? இருக்கும், இருக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா அது கீசாக்கா பூஸார் கேட்கிறார்... எப்போ துரை அண்ணனின் “அம்மா காத்திருக்கிறா” பாகம் ரெண்டு வெளியாகும் எ.ப்ளொக்கில் என:).. அடுத்த யுத்தத்துக்கு ரெடியாகோணுமெல்லோ:)..

      நீக்கு
    2. @ கீதா S...

      பூஸாருக்கு ஒரேயடியாக குழைசாதமும் உப்புமாவும் போட்டதால்

      பாவம் அது பயந்து விட்டது...

      தங்கள் அன்பின் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி...

      நீக்கு
    3. @ ஞானி:)..

      அம்மா காத்திருக்கிறா... (2 & 3)
      ஸ்ரீராம் அவர்களுக்கு அனுப்பி விட்டேன்... இனி அவர்தான் வெளியிடும் நாளைச் சொல்ல வேண்டும்...

      நீக்கு
  2. படங்களோடு பொருத்தமான விளக்கங்கள்! காக்காயெல்லாம் பாடலையேனு நரி வருத்தப்படறது பாவம்! :)

    குவெய்த்தில் கூட தண்ணீர்ப் பிரச்னை, இணையப் பிரச்னை என்றால் இங்கே எல்லாம் எவ்வளவோ பரவாயில்லைனு சொல்லணும். உங்களுக்கு அடிக்கடி இணையம் படுத்தல் இருக்கு! எப்போத் தான் சரியாகும்?

    பதிலளிநீக்கு
  3. எல்லாப் படங்களையும் அதற்கான கமெண்ட்ஸையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  4. பூனையின் கண்கள் அழகு.

    யானையின் அன்பு அழகு.

    பாவம் நாயார்... ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் வயலன்ஸில் மன்னிக்கவும் வயலினில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  5. ஆஹா அழகிய காட்சிகள் ஜி இதில் நம்மிடம் ஒன்று உள்ளதே...

    பதிலளிநீக்கு
  6. அந்த ஆனைக்குட்டி ரீசேட் சூப்பரா இருக்கு 3டி யில்...
    ஆனை அம்மாவும் பேபியும் மனிசரை மிஞ்சிடும்போல இருக்கு அன்பில்..

    பொந்தில் இருக்கு ஓநாய்க்குட்டி கொள்ளை அழகு.. பேபி அதிராவைப்போல ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  7. //ராஜா...ன்னு இருந்தாலும் ஸ்ட்ரா போட்டுக் குடிக்க முடியுமா!...
    ///
    ஒரு ராஜாவுக்கே இந்த நிலைமையாஆஆஆ:)

    பதிலளிநீக்கு
  8. எல்லா படங்களும் அழகு. அதன் கீழ் கருத்தும் அருமை.
    தண்ணீர் பிரச்சனை, இணைய பிரச்சனை, ஹீட்டர் வேலை செய்யவில்லை இருந்தாலும் கதை கட்டுரை என்று பதிவுகள் எழுதி மகிழ்வது நல்ல செயல்தான்.
    பிரச்சனைகளை மறக்க் முடிகிறது அல்லவா?

    பதிலளிநீக்கு
  9. பிரச்சினைகள் தீர்ந்தனவா. எல்லாமே தண்ணீரில் நடந்து,குடித்து,நீந்தி விளையாடும் தங்கங்கள். அதற்கேற்ற தலைப்புகள்..
    கதை எழுதி இருக்கிறீர்களா. எப்போ வருமோ.
    இணையம் வருவதே இந்த மாதிரி நல்ல செய்திகளுக்காகத்தான்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  10. துரை அண்ணா இனிய காலை வணக்கம்! ஆஜர் வைச்சாச்சு...இனி அப்பால அழகை ரசிக்க வரேன்,..

    அழகே அழகு! எதிலும் அழகு!! பாடல் நினைவுக்கு வந்தது...செம படங்கள்

    கீதா

    பதிலளிநீக்கு
  11. துரை அண்ணா அம்புட்டு படங்களும் செம அழகு. ஹையோ பார்த்துப் பார்த்து ரசித்தேன்.

    உப்புமாவானு கேக்கறது தேம்ஸ் வீட்டுப் பூஸார்தானே? ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  12. இங்கதான் தண்ணீர்ப் பிரச்சனை என்றால் அங்குமா அண்ணா? இணையமும் பிரச்சனையா...இப்போ எல்லாம் சரியாச்சா?

    படங்களும் அதற்கான கமென்ட்ஸ் எல்லாம் ரொம்ப அழகு..

    கீதா

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..