நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், அக்டோபர் 15, 2018

தேவி தரிசனம் 2

நாடெங்கும் கோலாகலமாக 
நவராத்திரி கொண்டாடப்படுகின்றது...

திருக்கோயில்கள் எங்கெங்கும் திருவிழாக் கோலம்...

மனமெல்லாம் பரவசத்தில் ஆழ்ந்திருக்கின்றது..

இன்றைய பதிவில் -
அம்பிகையின் அருட்கோலங்கள்...

திருக்கோலக் காட்சிகளை வழங்கியோர்
உழவாரம் சிவனடியார் திருக்கூட்டத்தினர்..

அவர்தமக்கு நெஞ்சார்ந்த நன்றி...

ஸ்ரீ உண்ணாமுலையாள் 
ஸ்ரீ உண்ணாமுலையாள்
திருஅண்ணாமலை
கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில் பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து நான் முன்செய்த 
புண்ணியம் ஏது? என்அம்மே. புவிஏழையும் பூத்தவளே..(12)

ஸ்ரீ மரகதவல்லி மீனாக்ஷி
ஸ்ரீ மாணிக்கவல்லி மீனாக்ஷி 
புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடிநம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்துதம் அடியார்கள் நடுஇருக்கப்
பண்ணிநம் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே.. (41)

ஸ்ரீ மட்டுவார்குழலி
திருச்சிராப்பள்ளி
நாயகி நான்முகி நாராயணி கைநளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு
வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று
ஆயகி யாதியுடையாள் சரணம்அரண் நமக்கே.. (50)

ஸ்ரீ கோமதி சிவசங்கரி - சங்கரன்கோயில் 
சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும்
பென்னம் பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவம் இல்லையே.. (53)

ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி 
ஸ்ரீ கோவிந்த திருக்கோலம்
ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி - திருஐயாறு 
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய் என்ன பேறு பெற்றேன்
தாயே மலைமகளே செங்கண் மால்திருத் தங்கச்சியே.. (61)

ஸ்ரீ அகிலாண்டநாயகி 
ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
திருஆனைக்கா 
ஸ்ரீ கற்பகவல்லி
ஸ்ரீ கற்பகாம்பிகையின் திருவடித் தாமரை
திருமயிலை 
உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ஒளிர்மதிச்செஞ்
சடையாளை வஞ்சகர் நெஞ்சு அடையாளை தயங்கு நுண்ணூல்
இடையாளை எங்கள் பெம்மான் இடையாளை இங்கு என்னைஇனிப்
படையாளை உங்களையும் படையாவண்ணம் பார்த்திருமே.. (84)

அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி..
அவள் திருவடிகளைப் பணிந்திருப்போம்!..

ஓம்
சக்தி சக்தி
ஓம் 
ஃஃஃ

7 கருத்துகள்:

 1. அம்பிகையின் திருவிழாக் காட்சிகள் கண்டேன் நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 2. அம்பிகையின் தரிசனம் கிடைத்தது.
  மகிழ்ச்சி.
  திரு ஆனைக்கா அன்னை திருவாரூர் அம்மன் போல் கால் மேல் கால் போட்டு இருக்கும் தோற்றம் அழகு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களன்பின் வருகையும் கருத்துரையும்
   வாழ்த்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. அம்பிகையை தரிசிக்கச் செய்ததற்கு நன்றி.

  அம்பிகையே.. ஈஸ்வரியே.. எம்மை ஆளவந்து கோயில் கொண்ட குங்குமக்காரி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஸ்ரீராம்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. முத்துச்செருக்குடனும், முத்துப் பின்னலுடனும் அற்புதக் காட்சி அளிக்கிறாள் மீனாக்ஷி! அதி அற்புதமான கோவிந்த திருக்கோலம், இது வரை கண்டதில்லை!

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..