நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, அக்டோபர் 05, 2018

அன்பின் வழிஅங்குசத்துக்கு அடங்காத
ஆனையுந் தான்
அன்பினுக்குத் தானடங்கித்
துயிலுதே...

அன்பு என்ற ஒன்றுதான்
வெல்லும் என்று
ஆனை இந்த மானுடர்க்குச்
சொல்லுதே!...


டேய்..டேய்.. சண்டை போடாதீங்கடா...

நீ சும்மா இரு...
இவனை ஒரு கை பார்த்துட்டு வர்றேன்...

வேணாம்... சொன்னாக் கேளு...
அவன் மகா முரடன்...
சண்டைய விலக்கி விட்டாலும் வந்து கொத்துறான் பாரு!..

அவன் மண்டையில கொத்துனா
அடங்கிடுவான்!..

அதெல்லாம் வேணாம்...
நீ வந்துடு... அவன் அடங்க மாட்டான்..

அவங்க வீட்டுல குருமாவுக்கு மசாலா அரைச்சாச்சு....
புரட்டாசி முடியட்டும்..ந்னு இருக்காங்க...


பத்து நாட்களாக சற்றே அதிக வேலை..
அத்துடன் ஜலதோஷம்.. தொந்தரவு...

இப்பொழுதிற்கு இவ்வளவே!..

காணொளிகள் Fb ல் வந்தவை..
கண்டு மகிழ்க..

வாழ்க நலம்..
ஃஃஃ

18 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  // அன்பினுக்குத் தானடங்கி //

  அறியாமையால் அடங்கி என்று கூட இருக்கலாமோ!

  பதிலளிநீக்கு
 2. வருக ஸ்ரீராம்..

  நல்வரவு..

  காணொளிகளைக் கண்டீர்களா!..

  பதிலளிநீக்கு
 3. ஆஹா... காணொளி கண்டதும் உலகமொழி அன்பின் அர்த்தம் புரிந்தது.

  பதிலளிநீக்கு
 4. நம்ம நாலுகால் செல்லம் ஒரு சேவலைதான் இழுக்கிறதா, இரண்டையுமே என்று புரியவில்லை. ஒன்று அதன் நண்பனாயிருக்கவேண்டும். அது நாலுகால் செல்லம் இழுப்பதை பற்றிக் கோபப்படவில்லை பாருங்கள். புரிந்து கொள்கிறது. மறுபடியும் அன்பு புரிகிறது. ஏனெனில் ஒரு சேவல் ஒரு நாலுகால் செல்லத்தை துரத்தி அடித்த காணொளி பார்த்திருக்கிறேன். மசாலா அரைக்கிறார்களா?.. பாவம்ங்க...!!!

  பதிலளிநீக்கு
 5. காணொளிகள் சுவாரஸ்யம்தான். இதேபோல் இரண்டு நாய்கள் சண்டையில் மூன்றாமவர் விலக்க முற்பட்டால் விலக்குபவரின் கதை கந்தல் ஆகிவிடும்!!!

  பதிலளிநீக்கு
 6. அடடே... மருந்து சாப்பிட்டால் ஒருவாரத்திலும், சாப்பிடாவிட்டால் 7 நாட்களிலும் சரியாகும் கஷ்டமா? உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உடம்பைக் கண்ணாடியில் பார்க்கச் சொல்றார் துரை அண்ணனை:) பெரிய கண்ணாடி இருக்குதோ துரை அண்ணன்?:)

   நீக்கு
 7. ஆஹா அழகான வரிகள் துரை அண்ணா...இனிய காலை வணக்கம்

  கீதா

  பதிலளிநீக்கு
 8. ஆனைக்கான உங்கள் வரிகளும் காணொளியும் அருமை அண்ணா..ஹையோ அன்பிற்கு தலை வணங்காதவர் உண்டோ!!!?? அழகான தாலாட்டுப் பாடலில் அந்த ஆனை என்ன அழகா படுக்குது!! ரசித்துப் பார்த்தேன்

  கீதா

  பதிலளிநீக்கு
 9. பைரவர் சேவல் அன்பான விளையாட்டுச் சண்டை போலத்தான் தெரியுது....ஒரே வீட்டுல வளர்பவை போலும்!!! அருமை அண்ணா ரசித்தேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 10. அண்ணா உடல் நலன் பார்த்துக் கொள்ளவும்....ஜல்பு எந்த மருந்து சாப்பிட்டாலும் கொஞ்சம் தொடரும் ஒன்று...ஆனால் உங்களுக்குத்தான் கை வைத்தியம் நிறைய தெரியுமே! அதில் ஒன்றை செய்து ஜல்பை விரட்டிடலாமே அண்ணா...ஜலதோஷத்திற்கு கை மருந்துதான் நேச்சுரல் மருந்துதான் நல்ல பலன் என்பது என் தனிப்பட்ட அனுபவம்...

  பார்த்துக்கோங்க அண்ணா

  கீதா

  பதிலளிநீக்கு
 11. உடல்நலனை கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா

  பதிலளிநீக்கு
 12. காணொளிகள் மிக அருமை.
  யானை அன்புக்கு கட்டுப்படும் காணொளி அருமை.
  சேவல் சண்டையை விலக்கும் குட்டிச்செல்லம் அருமை.
  சிறிது நேரம் கழித்து குட்டிச்செல்லமும் சேவல்களும் ஓடி பிடித்து விளையாடும்.

  ஒருவாரத்தில் சரியாகி விடும் ஜலதோஷம். கீதா சொல்வது போல் கை வைத்தியம் பலன் கொடுக்கும். மிளகு ரசம் வைத்து சாப்பிடுங்கள். பருப்பு துவையலும் வாய்க்கு நன்றாக இருக்கும்.
  வேலைபளுவிலும் அழகிய அன்பான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 13. இணையம் பிரச்சனை முதல் காணொளி பிறகு காண்பேன் ஜி.

  இரண்டாவது காணொளிக்கு பொருத்தமான பதிவுதான்.

  வாழ்க நலம்.

  பதிலளிநீக்கு
 14. உடம்பைப் பார்த்துக்குங்க. லவங்கப்பட்டையோடு சோம்பு, ஜீரகம் போட்டுக் கிடைச்சால் துளசியும் போட்டுக் கஷாயம் வைச்சுக் குடிக்கலாம். உடல்வலி, சளி குறையும். ஆனையாரை ஏற்கெனவே பார்த்தேன். பைரவர் விளையாட்டுப்புத்தம்புதுசு. :)

  பதிலளிநீக்கு
 15. என்னாதூஊஉ குருமாவுக்கு மசாலாவோ? சைவப் போஸ்ட்டிலே அசைவமோ அபச்சாரம் அபச்சாரம்:)...

  வீடியோ இரண்டுமே மொபைலில் ஓபின் ஆகவில்லை பின்பு கொம்பியூட்டரில் ட்றை பண்றேன்ன்.

  பதிலளிநீக்கு
 16. இப்பவே மசாலா அரைச்சா புரட்டாசி முடியும்போது நல்லா இருக்குமா?! அந்த மசாலாவுல வெஜ் குருமா வச்சிடுங்க. புரட்டாசி முடிஞ்சதும் ஃப்ரெஷ்சா அரைச்சுக்கலாம்

  பதிலளிநீக்கு
 17. அவற்றின் சக்தி அறியாதவரைஅடங்கி இருக்கும்

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..