நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 17, 2019

திருத்தேர்

தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் திருக்கோயிலின்
சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சமாகிய திருத்தேரோட்டம்
நேற்று காலையில் நடைபெற்றது...

கடந்த 2/4 செவ்வாய்க்கிழமையன்று திருக்கொடியேற்றம் நிகழ்ந்தது..
ஒவ்வொரு நாளும் அலங்கார ஆராதனைகளுடன் ஸ்ரீ பெருவுடையாரும் பிரஹந்நாயகி அம்பிகையும் திருவீதி எழுந்தருளினர்...

ஸ்ரீ தியாகராஜர் - அல்லியங்கோதை
பதினைந்தாம் திருநாளாகிய நேற்று 16/4 விடியற்காலையில்
வீதிவிடங்கப்பெருமானாகிய ஸ்ரீ தியாகராஜரும் அல்லியங்கோதையும்
யதாஸ்தானத்தில் இருந்து திருத்தேருக்கு எழுந்தருளினர்...

மங்கல முழக்கங்களுடன் வடம்பிடிக்கப்பட்ட திருத்தேர்
ராஜவீதிகளில் பவனி வந்து நிலையை அடைந்தது...

நான்கு ராஜவீதிகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று திருத்தேரோட்டத்தைத் தரிசித்திருக்கின்றனர்...

ராஜவீதிகளின் பல இடங்களிலும் தண்ணீர்ப் பந்தல் அமைத்து நீர்மோர், பானகம் முதலான குளிர்பானங்களும் சித்ரான்னங்களும் வழங்கியிருக்கின்றனர் - இறையன்பர்கள்...

திருத்தேரோட்ட நிகழ்ச்சிகளை வழங்கியவர்
அன்பின் நண்பர் திரு.தஞ்சை ஞானசேகரன்..

அவர் தமக்கு நெஞ்சார்ந்த நன்றி..




ஸ்ரீ விநாயகப்பெருமான்
ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் திருமுருகன் 
எம்பெருமானும் அம்பிகையும்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நம சிவாயவே..(4/11)
-: திருநாவுக்கரசர் :-

ஸ்ரீ ப்ரஹந்நாயகி அம்பிகை 
ஸ்ரீ சண்டிகேசர்
அஸ்த்ர தேவர் 









ரிஷப வாகன தரிசனம் 
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது 
நல்லக விளக்கது நம சிவாயவே..(4/11)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

11 கருத்துகள்:

  1. தஞ்சைத் தேர்த்திருவிழா குறித்து நேற்று நாங்களும் பார்த்தோம். ஆனால் உற்சவர் பெயர் திருவாரூர் வீதி விடங்கர் என்னும் தியாகராஜர் என்பது முற்றிலும் புதிய செய்தி! நல்லபடியாகச் சித்திரைத் திருவிழா முடிந்து தேரோட்டம் நடந்ததுக்கு அந்த பிரகதீஸ்வரரே காப்பாற்றினார்.

    பதிலளிநீக்கு
  2. படங்கள் வழக்கம் போல் சிறப்பாக வந்திருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. தேரோட்ட அழகிய காட்சி அருமை ஜி

    பதிலளிநீக்கு
  4. பூக்கள் அலங்காரம் மிகவும் சிறப்பு... நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  5. தேர்திருவிழா நேரடியாக பார்த்த உணர்வு கிடைத்து விட்டது.
    முளைப்பாரியால் செய்த லிங்கம் அழகு.
    இறைவனின் அலங்காரங்கள் அழகு.

    பதிலளிநீக்கு
  6. தஞ்சையிலிருந்து நாட்களில் தரிசிக்காதது இது. அருமையான படங்கள். அம்மா...டி... எவ்வளவு கூட்டம்...

    பதிலளிநீக்கு
  7. தஞ்சையின் தேரோட்டம் - தலைநகரில் இருந்தே பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  8. படங்கள் அத்தனையும் மிக அழகாக இருக்கின்றன. அழகான அலங்காரமும். தரிசித்துக் கொண்டோம். அந்த சிவலிங்க வடிவில் இறைவன் மிகவும் அழகாக இருக்கிறார்.

    துளசிதரன், கீதா

    பதிலளிநீக்கு
  9. எங்கள் ஊரிலும் நாளை தேரோட்டம்.

    அது சரி பொதுவாக 10 நாள்தானே திருவிழா நடக்கும். இதில் 15 ஆம் நாள் என்று இருக்கிறதே.

    நாளை எங்கள் ஊரில் 9 ஆம் நாள் தேரோட்டம். மறு நாள் 10 ஆம் திருநாள் அன்று ஊர் பவனி வந்த உற்சவர் நீராட்டுவிழா.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. தேர்த்திருவிழா அருமை.... கூட்டம் நிறைய இருக்கே...

    பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..