நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

வெள்ளி, ஏப்ரல் 19, 2019

சித்திரைத் திருவிழா 7

மாமதுரையில் எழுகடலும் கூடிப் பெருகி நின்றதாக புராணம்..
அவ்வண்ணமே நிகழ்ந்தாற்போல நேற்று அங்கே கூடிய கூட்டம்!..

மகோன்னதமான திருவிழாவின் சிகரமாக
சித்திரைத் தேர்த்திருவிழா...

வர்ணிக்க வார்த்தைகளில்லை...
வண்ணப் படங்கள் 
கண்களுக்கு விருந்தாகின்றன...

வலையேற்றி வழங்கிய கலைஞர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி...

பதினொன்றாம் (18/4) திருநாள் காலை
திருத்தேரோட்டம்

பூசஇனியது நீறு புண்ணியம் ஆவது நீறு
பேசஇனியது நீறு பெருந் தவத்தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தமதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆலவாயான் திருநீறே..(2/66) 
-: திருஞானசம்பந்தர் :-

அருத்தம் அதாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம் அதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே..(2/66)
-: திருஞான சம்பந்தர் :-பதினொன்றாம் (18/4) திருநாள் மாலை
சப்தாவர்ணச் சப்பரம்
திருமுருகனும் தெய்வயானையும் 

சொல்லும் பொருளும் எனநடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின்புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே..(028)
-: அபிராமி பட்டர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ

10 கருத்துகள்:

 1. குட்மார்னிங்.

  படங்கள் சிறப்பு. நேற்று தொலைக்காட்சியில் கொஞ்சம் பார்க்க முடிந்தது.

  பதிலளிநீக்கு
 2. தேர்தல் செய்திகளுக்கு இடையே கள்ளழகர் எதிர்சேவையும் பார்க்க முடிந்தது.

  ஓ.... அந்த இனிய நாட்கள்.

  பதிலளிநீக்கு
 3. சூலமங்கலம் சகோதரிகளின் 'சித்திரைத்தேரோடும் மதுரையிலே...' பாடல் நினைவுக்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 4. காலை வணக்கம்....

  அழகான படங்கள். தேரோட்டத்திற்கு எத்தனை மக்கள் வந்திருக்கிறார்கள். பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது!

  தொடரட்டும் நிழற்பட உலா.

  பதிலளிநீக்கு
 5. நம்ம ஊர் தேரின் அழகுக்கும்,இறைவனுக்கும், இறைவிக்கும் உள்ள அழகுக்கு நிகர் ஏது?

  பதிலளிநீக்கு
 6. தேரோட்டம் படங்கள் மிக அழகு.
  கடல் அலை போல் மக்கள் கூட்டம் பார்க்க பார்க்க பரவசம்.
  கூட்டம் கூட்டம் என்று தொலைக்காட்சியில் பார்த்தாலும் மக்கள் கூட்டம் மலைக்க வைக்கிறது.வெயில் போக்குவரத்து எதையும் பொருட்படுத்தாமல் போய் தரிசிக்கும் மக்களை காண்பதே புண்ணியம்தான்.
  இன்று அபிராமி பட்டர் பாடல் இடம்பெற்றது பொருத்தம்.

  பதிலளிநீக்கு
 7. படங்கள் அனைத்தும் அருமை ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
 8. படங்களின் தெளிவு மிகவும் நன்று ஜி

  பதிலளிநீக்கு
 9. எல்லாப்படங்களும் அருமை. சித்திரைத் திருவிழா பார்க்க ஆவல் தான். ஆனால் இந்தக் கூட்டம்! அதோடு தங்குமிடம், சாப்பாடு! எல்லாம் மலைக்க வைக்கிறது.எதிர்சேவை பார்த்தே எத்தனையோ வருடங்கள்! நினைக்க நினைக்க இனிமையான நாட்கள்! மீண்டும் வராதா என ஏங்க வைக்கும் நாட்கள்!

  பதிலளிநீக்கு
 10. படங்கள் அனைத்தும் அருமை. தர்சனமும் கிடைத்தது

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..