நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

புதன், ஏப்ரல் 10, 2019

சித்திரைத் திருவிழா 1

தென்னகத்தின் மாபெரும் திருவிழாவாகிய
மாமதுரைச் சித்திரைத் திருவிழா நேற்று முன் தினம்
பங்குனி 25 அன்று (8/4) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது...

இன்னும் சில தினங்களுக்கு
மதுரையம்பதியில் நிகழும் திருவிழாப்படங்கள்
நமது தளத்தில் பதிவாகும் என்பதில் மகிழ்ச்சி...

ஆனந்தக் கோலாகலமாக
அம்மையப்பனைத் தரிசிக்க
அன்புடன் அழைக்கின்றேன்...

வழக்கம் போல இந்த ஆண்டும்
இறைப்பணி ஒன்றையே மனதிற்கொண்டு
நிகழ்வுகளை வலையேற்றும்
அன்பின் குணா அமுதன், ஸ்டாலின், அருண் மற்றும்
சிவனடியார் திருக்கூட்டத்தினருக்கு
மனமார்ந்த நன்றி...
மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மடமானி
பங்கயச் செல்வி பாண்டி மாதேவி பணி செய்து நாள்தொறும்பரவப்
பொங்கழல் உருவன் பூதநாயகன் நால்வேதமும் பொருள்களும் அருளி
அங்கயற்கண்ணி தன்னொடு அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே.. (3/120)
-: திருஞான சம்பந்தர் :-
வேதியா வேதகீதா விண்ணவர் அண்ணா என்றென்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கி நின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதியஞ் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே..(4/62)
-: திருநாவுக்கரசர் :-முதலாம் திருநாள்
கற்பக விருட்ச வாகனம் - சிம்ம வாகனம் 
இரண்டாம் திருநாள் 
பூத வாகனம் - அன்னவாகனம் 

நாளும் நாளும் நம்மைக் காத்தருளும்
அம்மையப்பன் திருவீதி எழுந்தருள்கின்றனர்...
நன்மைகள் எங்கும் சூழ்வதற்கு
வேண்டிக் கொள்வோம்..


வாயானை மனத்தானை மனத்துள் நின்ற
கருத்தானைக் கருத்தறிந்து முடிப்பான் தன்னைத்
தூயானைத் தூவெள்ளை ஏற்றான் தன்னைச்
சுடர்த் திங்கட் சடையானைத் தொடர்ந்து நின்றென்
தாயானைத் தவமாய தன்மையானைத்
தலையாய தேவாதி தேவர்க்கு என்றும்
சேயானைத் தென்கூடல் திருஆலவாய்ச்
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.. (6/19)
-: திருநாவுக்கரசர் :-

ஆலவாய் அமர்ந்த அரசே போற்றி..
அங்கயற்கண் அம்மையே போற்றி.. போற்றி...
ஃஃஃ

15 கருத்துகள்:

 1. சித்திரைத் திருவிழாவின் கொடாயேற்ற விழாவை அழகாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்களுக்கு நல்வரவு..

   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 2. சித்திரைத் திருவிழா படங்கள் எல்லாம் மிக அருமை.
  ஆலவாய் அமர்ந்த அரசே போற்றி
  அங்கயற் அன்னையே போற்றி போற்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 3. பதில்கள்
  1. அன்பின் தனபாலன் ..
   தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 4. பதில்கள்
  1. அன்பின் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 5. படங்கள் அனைத்தும் அழகு. உங்கள் மூலம் திருவிழாக் காட்சிகளைக் காண முடிந்தது. நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி...

   நீக்கு
 6. சித்திரைத் திருவிழா - 8வது படிக்கும்போது, எங்க ஸ்கூல் கிளார்க்குடன் கோயமுத்தூரிலிருந்து திருநெவேலி செல்வதற்கு கூடச் சென்றிருந்தேன். அவர், மதுரை வரைல போவார், என்னை நெல்லை பஸ்ல ஏற்றுவிட்டுடுவார். அப்போ மதுரைல ஒரு நாள் அவர் தங்கவைத்து சித்திரைத் திருவிழாவுக்குக் கூட்டிச் சென்றார். பிறகு இந்த விழாவுக்குப் போன ஞாபகம் இல்லை.

  தளத்தில் படங்கள் கண்டு மிக்க மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் நெ.த...

   மதுரைக்குப் பல முறை சென்றிருந்தும் சித்திரைப் பெருவிழாவினை ஒரு தரம்தான் நானும் என் மனைவியும் பார்த்திருக்கிறோம்...

   அது கல்யாணம் ஆகிய வருடம்..

   பிள்ளைகளுடன் கோயிலுக்குச் சென்றிருந்தாலும் திருவிழா சமயத்தில் இன்னும் காணக் கிடைக்கவில்லை....

   தங்கள் வருகையும் கருத்துரை மகிழ்ச்சி.. நன்றி.

   நீக்கு
 7. மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றம் பற்றிய படங்கள் அருமை. அம்மை அப்பனை கண்ணாரக் கண்டு கொண்டேன்.

  மிக்க நன்றி ஐயா பகிர்விற்கு

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்...
   தங்கள் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 8. திருவிழாவைக் கடைசியாகக் கண்டது 72 ஆம் வருடம். அந்த வருடம் கள்ளழகர் எதிர்சேவை நிகழ்வை மறக்கவே முடியாது!

  படங்கள் அனைத்தும் திருவிழாவை கண் முன்னே கொண்டு வருகின்றன.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..