நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

திங்கள், ஏப்ரல் 15, 2019

சித்திரைத் திருவிழா 4

மதுரை மாநகரில் நிகழ்ந்து கொண்டிருக்கும்
சித்திரைப் பெருவிழாவின் திருக்காட்சிகள் தொடர்கின்றன...

நிகழ்வுகளைத் தொடர்ந்து உற்சாகத்துடன்
வலையேற்றித் தரும் நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி...
***
ஆறாம் (13/4) திருநாள் காலை
தங்கச் சப்பரம்
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.. (2/66)
-: திருஞானசம்பந்தர் :-

ஆறாம் (13/4) திருநாள் மாலை
வெள்ளி - தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளல்

ஏழாம் (14/4) திருநாள் காலை
பிக்ஷாடனத் திருக்கோலம்வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆலவாயான் திருநீறே.. (2/66)
-: திருஞானசம்பந்தர் :-

ஏழாம் (14/4) திருநாள் மாலை
அதிகார நந்தி வாகனம்
யாளி வாகனம்

நறுமலர் நீருங் கொண்டு நாடொறும் ஏத்தி வாழ்த்திச்
செறிவன சித்தம் வைத்துத் திருவடி சேரும் வண்ணம்
மறிகடல் வண்ணன் பாகா மாமறை அங்கம் ஆறும்
அறிவனே ஆலவாயில் அப்பனே அருள் செயாயே..(4/62)
-: திருநாவுக்கரசர் :-

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்
ஃஃஃ 

6 கருத்துகள்:

 1. அருமையான படங்கள்...

  இரு குழந்தைகளின் படமும் அற்புதம்...

  பதிலளிநீக்கு
 2. படங்கள் அனைத்தும் அழகு. அதிலும் குணா அமுதன் எடுத்த குழந்தைகளின் படங்கள் சிறப்பு. பாராட்டுகளும் நன்றியும்.

  பதிலளிநீக்கு
 3. அழகிய படங்கள், பாடல்களுடன் பதிவு சிறப்பு, குழந்தை மீனாட்சி, குழந்தை முருகன், மனதை கவர்ந்தனர்.
  உள்ளுரில் இருந்து கொண்டு தினம் பார்க்க முடியவில்லை திருவிழா, உங்கள் தளத்தின் மூலம் தரிசனம் செய்து விடுகிறேன்.
  நன்றி, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. தொடர்ந்து தரிசனம் செய்து வருகிறேன், உங்கள் பதிவுகள் மூலமாக.

  பதிலளிநீக்கு
 5. திருவிழாவை நேரில் பார்க்க முடியவில்லையே என்னும் குறையை உங்கள் படங்கள் போக்குகின்றன. குழந்தை மீனாக்ஷியும், குழந்தை முருகனும் மனதைக் கவர்ந்தார்கள்.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..