நமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..

நம சிவாய

பூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே!..

உழவர் ஓதை மதகோதை உடை நீரோதை தண்பதங்கொள்

விழவர் ஓதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி..

ஞாயிறு, ஏப்ரல் 21, 2019

சித்திரைத் திருவிழா 8

எல்லாரும் எல்லாமும் எய்தும்படிக்கு
மங்கலகரமாக நிறைவுற்றது
மாமதுரைத் திருவிழா ..

நேற்று கொடியிறக்கத்துடன்
அம்மையப்பன் ரிஷ்ப வாகனத்தில் திருக்காட்சி நல்கிட
திருப்பரங்குன்றத்து ஸ்ரீசுப்ரமணியஸ்வாமியும்
ஸ்ரீபவளக்கனிவாய்ப்பெருமாளும் விடைபெற்றுக் கொண்டனர்...
தேனூர் மண்டபத்தில் 
விடிய விடிய தசாவதாரத் திருக்காட்சிகள்
கள்ளழகர் கருடவாகனத்தில் சேவை சாதித்தருளினார்...

தேனூர் மண்டபத்தில் வைபவங்கள் நிறைவுற்றதும்
இன்று ஸ்ரீ கள்ளழகர் திருமாலிருஞ்சோலைக்குத்
திரும்புகின்றார்...

மக்கள் என்றென்றும் மகிழ்ச்சியுடனும் 
ஒற்றுமையுடனும் வாழ்வதற்கு
இவ்வேளையில் வேண்டிக் கொள்வோமாக!.. 
***..

மங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி..
அங்கயற்கண்ணி அன்பு மீனாட்சி
அண்டங்கள் அனைத்தும் அம்மையின் ஆட்சி..
மங்கலம் அருள்வாள் மதுரைக்கு அரசி...

ஓம் நம சிவாய சிவாய நம ஓம் 
ஃஃஃ

13 கருத்துகள்:

 1. மக்கள் என்றென்றும் மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் - இது தான் இன்றைய இன்றியமையாத தேவை. எத்தனை வேறுபாடுகள், எத்தனை சண்டை சச்சரவுகள்....

  எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்.

  படங்கள் சிறப்பாக இருக்கிறது. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. குட்மார்னிங்.

  அழகர் மலையிலிருந்து இறங்கும்போதும் திரும்பும்போதும் தரிசிக்கும் வகையில் மதுரையில் நாங்கள் புதூர் அருகே ரேஸ் கோர்ஸ் காலனியில் குடியிருந்தோம். இனிய நினைவுகள்.

  பதிலளிநீக்கு
 3. அழகிய படங்கள் மூலம் என் இனிய நினைவுகளை மீட்டி விட்டர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 4. முன்னெல்லாம் ராமாராயர் மண்டபப்படியில் தசாவதாரக் காட்சிகள் நடைபெறும். இப்போது தேனூர் மண்டபம். அதைத் தான் சொல்றாங்களா, இது வேறே மண்டபமா தெரியலை. என்றாலும் அழகான படங்கள், காட்சிகள். அழகர் திரும்பி வர இன்னும் ஒரு வருஷம் காத்திருக்கணும். போகும் வழியெல்லாம் மண்டகப்படி கண்டருளுவார் அழகர். மீனாக்ஷிக்கு இனி வைகாசித் திருவிழா! அழகாய் விபரங்களும், படங்களும் பகிர்ந்து வந்ததுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. நானும் தசாவ்தாரக் காட்சிகளை காணவேண்டும் என்று நினைப்பேன் , பார்த்தது இல்லை.

  மாயவரத்தில் இருக்கும் போது விடுமுறைக்கு வந்தால் தங்கை , தம்பிகளை அழைத்துக் கொண்டு சித்திரைப் பொருட்காட்சி, கோவில்கள் என்று வலம் வந்தோம். இப்போது கூட்டம், வெயில் என்று மதுரையில் இருக்கும் போதும் தொலைக்காட்சியில் பார்த்து கொண்டு இருப்பது மனதுக்கு வருத்தமாய் இருக்கிறது.
  ஆனால் உங்கள் தளத்தில் தினம் தரிசனம் கிடைக்கிறது மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 6. வாழ்க வையகம்.
  எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் துரை அண்ணா...

  படங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன.

  அம்மை அப்பனின் கோலாகலத்திற்கு மகன் வந்து சென்றார் போலும்!! அது சரி சிறியவர் வந்திருக்க பெரியவர் வர மாட்டாரோ?!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 8. ஒரு ஆண்டு விழாசமயத்தில் நாங்கள் மதுரையில் இருந்தோம்புராணகால ஆடை அலங்காரங்களுடன்பக்தர்கள் சாலையில் வந்து கொண்டிருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது மீனாட்சி கல்யாணம் கண்டோம் உபயம் தொலைக் காட்சி சேனல்கள்

  பதிலளிநீக்கு
 9. அழகிய படங்களுடன் அழகான தரிசனம்.

  பதிலளிநீக்கு
 10. படங்கள் மிக அருமை... அறுமுகன் தரிசனமும் அந்தக் கள்ளழகனின் தரிசனமும் மெய்சிலிர்க்க வைத்தன.

  பதிலளிநீக்கு

கருத்துகள் Gmail பயனர்களுக்கு மட்டும்..